சென்னை:"தமிழகத்தின் தென் மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, தேனி, கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, நாகப்பட்டினம், திருவாரூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, பல மாவட்டங்களில், விடிய விடிய மழை கொட்டியது. அதிகபட்சமாக, செங்கல்பட்டில், 14, வத்திராயிருப்பு, தூத்துக்குடியில், தலா, 10, உசிலம்பட்டி, போடிநாயக்கனூர், விருத்தாசலத்தில், தலா, 7, குன்னூரில், 6, விராலிமலை, கீரனூர், மதுராந்தகம், கோத்தகிரி, உளுந்தூர்பேட்டை, வேலூர், சீர்காழியில், தலா, 5 செ.மீ., மழை பதிவானது.இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை நகரின் பல இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.