Advertisement
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2012,22:41 IST
கருத்துகள் (116)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகத்தில் நிலவி வரும் மின் பற்றாக்குறையால், சென்னை தவிர மற்ற பகுதிகளில், 18 மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. இரவு, பகல் என, மின்சாரம் இருக்கும் நேரம் தெரியாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகத்தில், காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில், அனல் மின் நிலையங்கள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் குறைந்த அளவு மின்சாரம் மட்டுமே, அன்றாட மின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

18 மணி நேரம்:


இதனால், மின் உற்பத்திக்கும், தேவைக்கும் உள்ள இடைவெளி, 5,000 மெகா வாட் அளவிற்கு உயர்ந்து, மின் தடை நேரம், 18 மணி நேரமாக உயர்ந்து விட்டது. சென்னையில், அரசு அறிவித்த, இரண்டு மணி நேரம் மட்டும் மின்தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.மற்ற பகுதிகளில், பகலில், 14 மணி நேரமும், இரவில் நான்கு மணி நேரமும் மின்சாரம் தடை படுவதால், பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். நகர்ப்புறங்களில் ஓரளவு மக்களுக்கு, மின்சாரம் வரும், தடைபடும் நேரம் தெரியும். ஆனால், கிராமப்புற மக்களுக்கு, எந்த நேரத்தில் மின்சாரம் வரும் என்பதே தெரியாத நிலையில், கொசுத் தொல்லையும் அதிகரித்திருப்பதால், கடும் அவதியுற்று வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களில், மழையும், காவிரி நீரும் கிடைக்காத நிலையில் குறுவை பொய்த்து விட்டது.

சம்பா தப்புமா?:


சம்பா சாகுபடியை மேற்கொள்ள, தினசரி, 12 மணி நேரம், மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், தற்போதுள்ள சூழலில், அப்பகுதிகளில், மூன்று மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே பெரிய விஷயமாகி விட்டது.இதனால், மின் மோட்டாரை நம்பியிருக்கும் விவசாயிகள், பயிர்களை காப்பாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதே போல், மின்சாரத்தை நம்பியுள்ள சிறு, குறு தொழில் நடத்துவோரும், தங்கள் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தினசரி, 18 மணி நேர மின் தடை, சமீபகாலமாக தொடர்ந்து நீடித்து வருவதால், தொழிலாளிகள் தொடர் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல பகுதிகளில் மின் வெட்டை கண்டித்து, வேலை நிறுத்தம், கடையடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், ஆற்றில் கலந்து, நீரை மாசுபடுத்துவதை தடுக்க, பல கோடி ரூபாய் மதிப்பில், பூஜ்யக் கழிவு மேலாண்மை திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள், முழுமையாக இயங்க, நாள் முழுவதும் மின்சாரம் தேவைப்படும். தற்போது. அப்பகுதிகளில், நான்கிலிருந்து, ஐந்து மணி நேரம் வரை மட்டுமே

மின்சாரம் கிடைப்பதால், அத்திட்டம் பயனற்றதாகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி குறைவு:


நேற்று முன்தின நிலவரப்படி, தமிழக மின் திட்டங்கள், மத்திய தொகுப்பில் இருந்து, 7,436 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது. நேற்று காலை, 7:00 மணிக்கு, 6,849 மெகாவாட் அளவிற்கே கிடைத்துள்ளது. இந்த மின்சாரம் மட்டுமேஅனைத்து பகுதிகளுக்கும் பிரித்தளிக்கப்படுகிறது.புதிய மின் திட்டங்களான, வல்லூர், மேட்டூர் திட்டங்களில் சோதனை நடந்து வருகிறது. வடசென்னை மின் நிலையம், மின்சார உற்பத்தியை துவக்க முற்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இதற்கிடையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு யூனிட்டில் ஏற்பட்ட திடீர் பழுதால், 210 மெகாவாட் மின்சார உற்பத்தி தடை பட்டுள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான, இந்த அனல் மின் நிலையத்தில், தலா, 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய, ஐந்து யூனிட்டுகள் உள்ளன.நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணியளவில், ஐந்தாவது யூனிட்டில் உள்ள பாய்லரில் ஓட்டை விழுந்தது; அதன் இயக்கம் நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பிரச்னையால், மின்வெட்டு நேரம், மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி பழுது :


தூத்துக்குடி அனல் மின் நிலைய, மூன்றாவது யூனிட்டில், பாய்லரில் ஓட்டை ஏற்பட்டதால், இம்மாதம், 19ம் தேதி மாலை, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பின், சரி செய்யப்பட்டது. இங்குள்ள இயந்திரங்கள் அனைத்தும், 25 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகின்றன.இதனால், அடிக்கடி பழுது, விபத்து ஆகியவை ஏற்பட்டு, மின் உற்பத்தி பாதிக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது. எனவே, இந்த அனல் மின் நிலையத்தை ஒட்டுமொத்தமாக, புதுப்பிக்க வேண்டும் என, தொழிற்சங்க தரப்பில் கூறப்படுகிறது.

சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில், மூன்று மணி நேரம் மட்டுமே மின் வெட்டு இருப்பதாக மின் பகிர்மானக் கழகம் அதிர்ச்சி அளித்துள்ளது.தமிழகத்தில் சென்னை மண்டலம் தவிர்த்த பிற பகுதிகளில், தினமும் 16 லிருந்து, 18

Advertisement

மணி நேரம் வரை மின் வெட்டு அமலில் உள்ளது. கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு மட்டுமே, இந்த பாரபட்சத்தை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், பொது நல மனுதாக்கல் செய்தது.

இதே விவகாரம் தொடர்பாக, சில தகவல்களையும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமை யிட பொது தகவல் அலுவலரிடம் இவ்வமைப்பு கோரியிருந்தது. அமைப்பின் செயலர் கதிர்மதியோன் கேட்ட அக்கேள்வியில் முக்கியமானது, "மின் வினியோகத்தில் பாரபட்சம் காட்டுவதற்கு எந்த சட்டம் அனுமதிக்கிறது' என்பது தான்.

எதன் அடிப்படையில், சென்னை மண்டலத்துக்கு மட்டும் மின் வெட்டில் விலக்கு அளிக்கப்படுகிறது, எந்த சட்டத்தில், விதியில் அதற்கு இடம் உள்ளது, அப்படியிருந்தால் அதன் நகல் தேவை என, பல கேள்விகளையும் அவர் கேட்டிருந்தார். அதற்கு, மின் பகிர்மானக் கழகத்தின் பொது தகவல் அலுவலரான தலைமை பொறியாளர் (வர்த்தகம்) பதில் அனுப்பியிருந்தார். தமிழகம் முழுவதற்கும் ஒரே மாதிரியான கட்டணமே வசூலிக்கப்படுகிறது என்றும், சென்னைக்கு கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

அரசின் ஒப்புதலின் படி, சென்னையில் இரண்டு மணி நேரமும், மாநிலத்தின் பிற பகுதிகளில் மூன்று மணி நேரமும் மின் வெட்டு அமல் படுத்தப்படுகிறது என்றும் பதில்கள் தரப் பட்டிருந் தன. தினமும் குறைந்த பட்சமாக, 16 மணி நேரம் மின் வெட்டு அமலில் இருக்கும் நிலையில், இப்படி யொரு பதிலைத் தந்ததன் மூலமாக, தமிழக மக்களை கேலிப்பொருளாக்கியுள்ளார் அந்த அதிகாரி.
- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (116)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskaran - Warri,நைஜீரியா
26-நவ-201201:26:06 IST Report Abuse
Baskaran தினமலர் ரொம்ப நன்றி....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Senthil Kumar M - Chennai,இந்தியா
26-நவ-201200:07:49 IST Report Abuse
Senthil Kumar M மக்கள் கருத்துகள் எண்ணிகையை வைத்துபர்தல் சென்னை தவிர ஒட்டுமொத்தம் தமிழ்நாடும் பதிகபட்டுஇர்க்கு அம்மா ப்ளீஸ் உடனடியாக இலவசத்தை நிறுத்துங்கள் யேன் என்றல் அது ஒரு 10 % ஓட்டுக்கு கொடுக்கப்பட்ட ஐடியா அனால் இப்பொ 100 % ஒட்டு கிடைக்க மின்சாரம் நிச்சயம் (அட்லீஸ்ட் ஒட்டு போடும் மாசின் வேலை செய்யணும் அம்மா ) தேவை. இலவசம் கொடுக்கற பணத்துல மின்சாரம் வாங்கி கொடுங்க அம்மா.அடுத்த பிரதம மந்திரியா நீங்க கை கட்டலாம் அம்மா.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Vaduvooraan - Chennai ,இந்தியா
25-நவ-201219:16:18 IST Report Abuse
Vaduvooraan பன்னாடை மிகச்சிறந்த கருத்துப் பதிவு, வாழ்த்துக்கள் மறதி மன்னர்கள் நம் மக்கள் அவர்களுக்கு திமுக ஆட்சியின் அவலங்களை நினவு படுத்தியதை பாராட்டுகிறேன். புலம்பாது பொறுமை காத்தால் நிச்சயம் இதில் இருந்து தமிழகம் விடு படும் என்பதை உறுதியாக ந்மபுகிறேன்- தென் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு இருப்பது தெரியாதா, சென்னையில் உட்கார்ந்து கொண்டு கருத்துப் பதிவு செய்கிறாயே என்று 2G திலகங்கள் கூக்குரல் இட்டாலும் ஆனால் ஒரு விஷயம் என்னை உறுத்துகிறது கருணா நிதி என்றுமே அதிர்ஷ்டக்காரர், எந்த வகை ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் அவற்றை மறக்க செய்வது போல அவருக்கு ஒரு வாய்ப்பு உருவாகி வெற்றி பெற வைக்கும்- இது தொடர்ந்து பல காலமாக நடந்து வருகிறது ஊழலாவது, நிர்வாகமாவது- 24 மணி நேரமும் சன் டி.வி பார்க்க மின்சாரம் மட்டும் கிடைத்தால் எதையுமே மறந்து மன்னித்து விடுவோமே? ஆனால் அதாவது திமுகவினால் தர முடியுமா என்பது கேள்விக்குறிதான். மின்வெட்டை சமாளிக்க ஆற்காட்டாரிடம் ஆலோசனை கேட்டு அதை பின் பற்றுங்கள் என்று கூச் நாசம் இல்லாமல் கருத்துப் பதிவு செய்கிறவர்கள் இருக்கும்போது, நமக்கு தகுதியான அரசுதான் கிடைக்கும் ஒருவர் ka
Rate this:
68 members
0 members
11 members
Share this comment
Cancel
pandian m - madurai,இந்தியா
25-நவ-201217:56:28 IST Report Abuse
pandian m கேபிள் டிவி ஒளிபரப்பை ( உள்ளூர் மட்டத்தில் சொல்கிறேன் ) இரவு நேரங்களில் நிறுத்தலாம். நகரங்களில் தெரு விளக்கு ஒன்று விட்டு ஒன்று எரியும் படி செய்யலாம். நிறைய மிச்சமாகும். நல்லா யோசியுங்கள். செய்ய பாருங்கள். என்னத்தையாவது சொல்லி இன்னமும் கஷ்டப்பட வைக்காதிர்கள். தினமலர் உதவுமா?
Rate this:
10 members
1 members
21 members
Share this comment
Cancel
Samuel Christopher - sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201217:44:56 IST Report Abuse
Samuel Christopher எது தேவையோ அதை செய்யாமல் இலவசம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறது அதிமுக அரசு,,,மின் தட்டுபாட்டை குறைக்க என்ன ஏற்பாடு நடக்கிறது?மற்ற கட்சியை குறை கூறுவதில் என்ன பயன்? தமிழ்நாட்டை இருள்நாடாக மாற்றியது தான் உங்களுடைய சாதனையா?சிந்தியுங்கள் துரிதமாக செயல் படுங்கள் இல்லை என்றால் இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாடு பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும்
Rate this:
2 members
1 members
72 members
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
25-நவ-201217:20:24 IST Report Abuse
muthu Rajendran அரசு தனியார் விழாக்களில் முதலில் ஆடம்பரமாக ஜோடனை மின்விளக்கு போடுவதை தடுக்க வேண்டும். சென்னைக்கு இன்னும் இரண்டு மணிநேரம் கூடுதலாக மின்வெட்டை அமுல் படுத்தினால் மற்றபகுதிக்கு கூடுதலாக இரண்டு மணி நேரம் அல்லது கூடுதலாக மின்சாரம் கிடைக்கும் என்றால் செய்யலாம். இது ஓரளவே இதர பகுதி மக்கள் சிரமத்தை சரிக்கட்டும் . எல்லோருக்கும் குறைந்த பட்சம் இரவு நேரமாவது மின்சாரம் கிடைக்க வழிவகை தேட வேண்டும்
Rate this:
0 members
5 members
23 members
Share this comment
Cancel
Muthusamy - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201217:11:45 IST Report Abuse
Muthusamy not surprise .expected one.
Rate this:
2 members
1 members
13 members
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
25-நவ-201217:08:20 IST Report Abuse
Aboobacker Siddeeq பேசாமல் கிடைக்கின்ற மின்சாரத்தையும் மற்ற மாநிலங்களுக்கு விற்று விட்டு தமிழகத்தை ஒட்டு மொத்த இருண்ட மாநிலமாகிட வேண்டியது தான். சென்னைக்கு இரண்டு மணி நேரம், மற்ற மாவட்டங்களுக்கு பதினெட்டு மணி நேரம் ஏன்??? மொத்தமாக இருபத்தி நான்கு மணி நேரமும் எல்லா இடங்களிலும் நிறுத்தி விடவேண்டியது தான். வேறு வழியே இல்லை...
Rate this:
1 members
0 members
51 members
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
25-நவ-201216:15:21 IST Report Abuse
KMP மத்திய மாநில அரசுகளிடையே ஒற்றுமை இல்லாதது தான் காரணம் ... மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக மக்களவை உறுப்பினர்கள் இது குறித்து கவலைப்படுவதே இல்லை ? ஜெயலலிதா தினமும் கடிதம் எழுதுகிறார் ஆனால் டெல்லி சென்று போராட நினைக்க வில்லை ( அரிசிக்காக எம் ஜி ஆர் டெல்லி சென்று போராடினார் ).... மத்திய அரசிற்கும் தமிழ்நாடு என்றாலே கிள்ளுக்கீரை தான் ? இவர்கள் கட்சி அரசியல் விளையாட்டில் தமிழகம் இருளில் மூழ்கி உள்ளது .... திறமை இல்லாத நிர்வாகம், சூரிய மின்திட்டம் மிக மிக தாமதமான ஒரு முடிவு அதுவும் மக்களிடம் நல்ல பெயர் வாங்கத் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை ? தினமும் முதல்வரின் கவர்ச்சி அறிக்கைகளுக்கு பஞ்சம் இல்லை. தமிழ்நாடும் மக்களும் படும் வேதனை எந்த அரசியல்வாதிகளுக்கும் புரியாது ஏன் என்றால் அவர்கள் பரம்பரை பணக்காரர்கள் .
Rate this:
9 members
3 members
61 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-நவ-201215:48:31 IST Report Abuse
Pugazh V ஆட்சித் திறன் இல்லாத, அனுபவ அறிவும் இல்லாத அமைச்சர் கூட்டம். அதிகாரிகளுக்கு ஆணிகளோ, வழி காட்டுதலோ தராத அரசு இப்போதைய தமிழக அரசு. வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தக் கோபம் ௮ தி மு க மேல் திரும்பும். அதனால் ஜெயலலிதா அனேகமாக காங்கிரசுடன் கூட்டணி வைத்து எம் பி சீட்டுகளை வெல்ல முயல்வார். தண்ணீர் தராத பி ஜே பி யுடன் கூட்டு வைத்தாலும் தோற்றுப் போகும் ௮ தி மு க. மீட்னும் ஸ்டாலின் மற்றும் ஆற்காட்டாரை அழையுங்கள். நிலைமை சீராகும் நிச்சயம். கூடன்குளம் எதிர்ப்பாளர்கள், கல்பாக்கம் அணு மின் நிலையத்தை எதிர்த்துப் போராடுங்கள். அப்போ தான் சென்னையும் இருளில் மூழ்கும். நிலக்கரி ஊழல் என்று டுபாக்கூர் சி ஏ ஜி சொன்னதால் அந்த உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, நிலக்கரி எடுக்கவும் மின் நிலையங்களுக்கு சப்ளை செய்யவும் ஆள் இல்லை. இனி நீங்களே வரவழைத்துக் கொண்ட இந்த இருட்டான மாற்றத்தை அனுபவியுனக்ல். தி மு க ஆட்சியில் 2 மணி நேர மின் தடை. ௮ தி மு க வந்த பின், அப்படியே மின் தேவை அதிகரித்தாலும், ( 8 மடங்கா அதிகரித்தது?) மின் தடை இந்த அளவிற்கு அதிகரிக்க அவசியமில்லையே. நிர்வாகத் திறன் இல்லாத அமைச்சரவை, ஆளும் கட்சியின் திறமையின்மை, தவறான செயல்பாடுகள், திட்டமிடாதது, இதெல்லாம் தான் கரணங்கள். பசங்களுக்கு பரீட்சைகள் வருகின்றன. முன்னாள்களை கைது செய்வதிலேயே குறியாய் இருக்கும் அரசுக்கு ஜே போடுங்கள். காங்கிரசுக்கு எதிரான பி ஜே பி ஆளும் கர்நாடகாவில் நிலைமை இப்படியா இருக்கிறது? காங்கிரசை குறை சொல்லாதீர்கள். தண்ட அரசு, அமைச்சர், முதல்வர்.
Rate this:
9 members
3 members
123 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.