ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் பதவிக்கு ஆபத்து
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஐதராபாத்:ஆந்திராவில், காங்., மூத்த தலைவரும், முதல்வருமான, கிரண் குமார் ரெட்டியின் செயல்பாடுகளை எதிர்த்து, மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி யுள்ளனர். எட்டு அமைச்சர்கள், அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்ததால், கிரண் குமாரின்பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

விமர்சனம்:
ஆந்திராவில், முதல்வர் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. சமீப காலமாக, ஆந்திராவைச் சேர்ந்த, காங்., மூத்த தலைவர்கள், முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் செயல்பாடுகளை, கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.தெலுங்கானா தனி மாநிலவிவகாரத்தில், இவரது செயல்பாடுகள் சரியில்லை என்றும், அதிகாரிகளை வேலை வாங்கத் தெரியவில்லை என்றும், குறை கூறி வருகின்றனர்."இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும், ஆந்திராவில், காங்கிரஸ் கட்சி, தோல்வி அடைவது உறுதி. எனவே, கிரண் குமாரை, உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என, போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

சமீபத்தில் கூட, ஆந்திர மாநில காங்கிரசின் மூத்த தலைவரும், மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சருமான, கி÷ஷார் சந்திர தேவ், கிரண் குமாரைகடுமையாக விமர்சித்து, அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின், ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டம், ஐதராபாத்தில் நடந்தது.சுரங்கத் துறை அமைச்சர் அருணா குமாரி, பொது வினியோக துறை அமைச்சர் ஸ்ரீதர் பாபு, கட்டமைப்பு துறை அமைச்சர் ஸ்ரீனிவாச ராவ், வருவாய் துறை அமைச்சர் ரகுவீர ரெட்டி, உள்துறை அமைச்சர் சபீதா ரெட்டி,முத்திரைத் தாள் மற்றும் பதிவேட்டு துறை அமைச்சர் நரசிம்மம், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் பசவராஜ்ஆகியோர், இந்த கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

இவர்களைத் தவிர, தொழில் துறை அமைச்சர் கீதா ரெட்டியும், இந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை. ஆனாலும், "புட்டபர்த்திக்கு செல்ல வேண்டியிருப்ப தால், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை' என, அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காதவர்களில் சிலர், தாங்கள் பங்கேற்காததற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. மற்றும் சிலர், பெயரளவுக்கு சில காரணங்களைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:

லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் வருவதற்குள், கிரண் குமார் ரெட்டியை, முதல்வர்பதவியிலிருந்து நீக்குவது என்பதில், ஆந்திராவில் உள்ள, மூத்த காங்., தலைவர்கள் உறுதியாக உள்ளனர். இதன் எதிரொலியாகவே, கிரண் குமாருக்கு, ஒத்துழைப்பு அளிக்காமல், அவர்கள் விலகி இருக்கின்றனர்.நீக்க வைக்க முயற்சிமத்திய அமைச்சரான, கிஷோர் சந்திர தேவ், கிரண் குமாருக்கு எதிராக, வெளிப்படையாக போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அமைச்சர்களும், அவரை பின்பற்றி, கிரண் குமாரை புறக்கணித்து உள்ளனர்.

இதன் மூலம், கிரண் குமார் மீது, கட்சி மேலிடத்துக்கு உள்ள, "இமேஜை' சீர்குலைத்து, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வைக்க முயற்சிக்கின்றனர்.இதனால், கிரண் குமார் ரெட்டியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
25-நவ-201203:26:58 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் அட பாவிகளா ... இவ்ளோ வெகுளிதனமா இருக்கிங்களே .... என்று தெலுங்கான விசயத்தில் சரியான நிலைப்பாடு எடுக்க தவறினிர்களோ அன்றே காங்கிரஸ் அஸ்திவாரம் ஆட்டம் காண தொடங்கிற்று .... அதுமட்டுமில்லாமல் சில காங்கிரஸ் MLA க்கள் தெலுங்கானாக்கு ஆதரவாகவும் , எதிராகவும் பொய்யாக போராடி மக்களிடம், கட்சியின் மேலிடமும் உண்மை முகத்தை காட்டி விட்டனர் , அதன்பின் வழக்கமான ஆட்சிக்கு எதிரான எதிர்பலைகள் ஊழல்கள், அதிருப்திகள் , நிர்வாக சீர்கேடுகள் .... மறுபுறம் ராஜசேகர ரெட்டி இறந்த பிறகு அதன் அனுதாபத்தை வைத்து அவரது மகன் வலுவாக காலூன்றி விட்டார் ... போதாகுறைக்கு அவர் மேல் நேரம் காலம் தெரியாமல் வழக்கு பதிவு செய்து கைது செய்து இன்னும் அதிகமாக அனுதாபத்தை பெற்றனர் அவர்கள் ... மறுபுறம் சந்திர பாபு நாயுடு சிரஞ்சீவியின் ஆட்களை கயிறு போட்டு இழுத்து கொண்டுள்ளார் ... தெலுங்கான பகுதியில் TRS கட்சியை அடித்து கொள்ள முடியாது இனிமேல் ... இவர்களில் யாரும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர மாட்டனர் .. இவ்வாறு இருக்க எப்படி இப்படி ஒரு நம்பிக்கை காங்கிரஸ்க்கு ... மித மிஞ்சிய பணம் இருக்கிறது என்ற முரட்டு தைரியமோ ??? கிரண்குமார் நாற்காலியின் நாட்கள் எண்ண படுகின்றன ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்