Advertisement
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு தோறும் ரூ.32 ஆயிரம் கிடைக்கும்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 நவ
2012
22:55

புனே:மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியத்தை, பயனாளிகளுக்கு நேரடியாக ரொக்கமாக வழங்கும் நடைமுறை, அடுத்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி அமலுக்கு வருகிறது. இதன்மூலம், ஒவ்வொரு குடும்பத்தினரும், ஆண்டு ஒன்றுக்கு, 32 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.வரும், 2014ம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களை கவரும் வகையில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியம், மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோருக்கு வழங்கப்படும் சம்பளம் போன்றவை, தற்போது, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுவதில்லை. மறைமுகமாக, பல்வேறு வழிகளில் வழங்கப்படுகின்றன.இதை மாற்றி, ஒவ்வொரு குடிமகனுக்கும், பிரத்யேக அடையாள எண்ணுடன் வழங்கப்பட உள்ள, "ஆதார்' அடையாள அட்டை மூலம், மானியத்தையும், பண பலன்களையும், பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், ஒவ்வொரு குடும்பத்திற்கும், பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியம் மற்றும் பணப் பலன்கள், அவர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக சென்று விடும்.இது தொடர்பாக, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில், நேற்று நிருபர்களிடம் பேசிய, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியத்தை, நேரடியாக ரொக்கமாக வழங்கும் நடைமுறை, அடுத்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி அமலுக்கு வருகிறது. இப்புதிய முறை, ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு, 15 மாநிலங்களில் உள்ள, 51 மாவட்டங்களில், முதல் கட்டமாக அமலுக்கு வரும். அடுத்த ஆண்டு இறுதிக்குள், நாடு முழுவதும் இந்தத் திட்டம் அமலாகும்.

இந்த நேரடி பண பரிமாற்ற திட்டம் மூலம், ஆண்டு ஒன்றுக்கு, 3.2 லட்சம் கோடி ரூபாய், 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும். சராசரியாக, ஒவ்வொரு குடும்பமும், ஆண்டு ஒன்றுக்கு, 32 ஆயிரம் ரூபாய் பெறலாம். இது வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களின், சராசரி ஆண்டு வருவாயை விட, இது, மூன்று மடங்கு அதிகம்.
இந்த நேரடி பண பரிமாற்ற திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, நியமிக்கப்பட்டுள்ள, தேசிய குழுவின் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நாளை நடக்கிறது.

இந்த தேசிய குழுவில், நிதி, ஊரக மேம்பாடு, மனிதவள மேம்பாடு, தொழிலாளர் நலம், பெட்ரோலியம், உரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் அமைச்சர்கள், திட்ட கமிஷன் துணைத் தலைவர், மான்டேக் சிங் அலுவாலியா, "ஆதார்' அடையாள திட்டத்தின் தலைவர், நந்தன் நிலேகனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.கூட்டத்திற்குப் பின், திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான முறையான அறிவிப்பை, பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுவார்.இவ்வாறு அமைச்சர் சிதம்பரம் கூறினார்.

தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ளது. இதனால், அடுத்த தேர்தலில், கூட்டணி அரசுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அதனால், மானியங்களை, ஊரக வேலை திட்டங் களுக்கான சம்பளத்தை நேரடியாக வழங்கும் பண பரிமாற்ற திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், மக்களை கவர, காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர், சோனியாவும் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rock - London,யுனைடெட் கிங்டம்
26-நவ-201204:11:40 IST Report Abuse
rock ஆஹ டாஸ்மாக் வருமானம் பல மடங்கு கூட இருக்கிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Adhiyaman Pv - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201217:03:49 IST Report Abuse
Adhiyaman Pv திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இதில் பலன் அடைய போகும் 10 கோடி அரசியல் கட்சிகளை சேர்த்த குடும்பங்களுக்கும், மற்றும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும், தொகுதிவாரியாக அணைத்து கட்சி பிரமுகர்களுக்கும், அவர்களின் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், வழாக்கம் போல் உண்மையான ஏழைகள் கஷ்ட்டபட்டு உழைத்து காள் வயறு நிறைய காஞ்சி குடித்து வழ்வர்களாக.
Rate this:
1 members
1 members
16 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-நவ-201215:09:57 IST Report Abuse
Pugazh V லேப் டாப் தராங்க, மிக்சி தராங்க கிரைண்டர் தராங்க என்ற போது ௮ தி மு க வை ஒழிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை? இன்னும் எந்த இலவசமமுமே எங்க தொகுதிக்கு வரவில்லை. எங்க தொகுதி எம் எல் ஏ யாருன்னே மறந்து போச்சு. காங். ஒழிய வேண்டுமாம். அப்புறம் ஆட்சி அமைக்க வெளிநாட்டிலிருந்து யாரையாவது கூட்டி வருவீர்களா (சோனியா இத்தாலி என்று உடனே உளற வேண்டாம்). கத்காரி முதல் எடியூரப்பா வரையும், கராத் முதல் தா பாண்டியன் வரையும், முலாயம் சிங் யாதவ் முதல் மம்தா, ஜெயா வரை ஒரு இணக்கமும், ஆட்சித் திறனும் இல்லாத அரைவேக்காட்டுத் தனம் மட்டும் இருக்கிறது. இதில் காங். இல்லாத எந்த கட்சி வேண்டும்? நமக்கு தண்ணீர் தராத பி ஜே பி யா? டாம் கட்டுவோம் என்று சொல்லும் கம்யூனிஸ்ட்டா? தமிழனைப் பற்றியோ தென்னிந்தியா பற்றியோ கண்டு கொள்ளாத கேஜ்ரிவால் கும்பலா? சும்மா பெனாத்தக் கூடாது.
Rate this:
11 members
1 members
51 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
25-நவ-201215:01:55 IST Report Abuse
Pugazh V எது செய்தாலும் திட்டறீங்க? இந்த அமாதிரி எதிர்மறையான சிந்தனைகள் தமிழ் நாட்டில் தான் அதிகம் பார்க்கிறேன். மலையாள பத்திர்கைகளில், வாசகர் கடிதங்களில், இது மாதிரியெல்லாம் எழுதுவதே இல்லை ( கம்யூனிஸ்ட் ஆதரவு பத்த்ரிரிகைகளில் கூட), ஆங்கில வாசகர்களும் தான், கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதில்லை. தமிழ்நாட்டில் தான் எல்லாவற்றிலும் எதிர்மறை சிந்தனை. காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிகிட்டே இருங்க., நாளைக்கு ௮ தி மு க காங். உடன் கூட்டணி வைக்கும் போது, ரெட்டை இலைக்கும் கைக்கும் ஓட்டு போடுங்க. உங்களைப் பற்றி தெரியாதா? சும்மா ..கடுப்பாகுது, இது மாதிரி படிச்சு படிச்சு...
Rate this:
4 members
1 members
19 members
Share this comment
sankar - trichy,இந்தியா
25-நவ-201219:10:13 IST Report Abuse
sankarஅதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைச்சா , அதிமுகவுக்கு ஒட்டு போடுங்க , காங்கிரேசை தோல்வியுற செயுங்கள் ...
Rate this:
3 members
0 members
4 members
Share this comment
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-நவ-201200:10:03 IST Report Abuse
தமிழவேல் உண்மை .. இது ஒரு நல்ல திட்டமே......
Rate this:
3 members
0 members
1 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
25-நவ-201215:00:44 IST Report Abuse
g.s,rajan அது சரி அளவுக்கு அதிகமா வரியையும் போட்டு விட்டு மானியம் தருவதாக பீத்திக்கிறீங்களே,உங்களுக்கு வெக்கமா இல்லையா ? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
2 members
0 members
13 members
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
25-நவ-201214:57:40 IST Report Abuse
Giri Srinivasan திட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
Rate this:
3 members
0 members
5 members
Share this comment
Cancel
Ubaidullah Razzaq - al khobar,சவுதி அரேபியா
25-நவ-201214:18:55 IST Report Abuse
Ubaidullah Razzaq இந்த திட்டம் ஒரு நல்ல திட்டம் இலக்சன்னுக்கு முன்பு செயல் படுவது நல்லது.தினமலரே சொல்ஹிறது மக்களை கவருவதற்காக , நீங்கள் செயல் படுத்துங்கள் எல்லா மாவட்டத்திலும் ஒரே நேரத்தில் செயல் படனும் இது ரொம்ப முக்கியம் செய்வதை சீக்கிரம் செய்யுங்கள் .தூற்றுபவர் துட்டற்றும் பொற்றுவர்கள் பொட்டற்றும்
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Pandiaraj Govindaraj - Malaka,மலேஷியா
25-நவ-201213:43:03 IST Report Abuse
Pandiaraj Govindaraj திட்டம் வரும்முன் அது பற்றி விமரிச்க்க வேண்டாம் வரட்டும் பார்க்கலாம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
25-நவ-201213:24:23 IST Report Abuse
Thangairaja மக்களை சோம்பேறிகளாவே வைத்திருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். மெத்தப்படித்தவர்களின் சிந்தனை இப்படித்தான் இருக்கும் போல. இம்சை அரசனை மது மாதுவுக்கு அடிமையாக வைத்து சிந்திக்கும் திறனை செயலிழக்க செய்வது போல ஏழை மக்களை வைத்திருக்க நினைக்கிறார்கள்.
Rate this:
0 members
2 members
2 members
Share this comment
Cancel
ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
25-நவ-201212:47:46 IST Report Abuse
ratthakatteri_modi நல்ல திட்டம், அடுத்த முறையும் வெற்றி உங்களுக்கே, வாழ்த்துக்கள்
Rate this:
14 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.