Salem district DMK, responsible for the group? | சேலம் மாவட்ட தி.மு.க.,வுக்கு பொறுப்பு குழு?| Dinamalar

சேலம் மாவட்ட தி.மு.க.,வுக்கு பொறுப்பு குழு?

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 சேலம் மாவட்ட தி.மு.க.,வுக்கு பொறுப்பு குழு?

சேலம் மாவட்ட தி.மு.க.,வுக்கு பொறுப்புக் குழு அமைக்கப்படும்' என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியின், 40 ஆண்டு கால மாவட்ட செயலரும், மூத்த தலைவருமான வீரபாண்டி ஆறுமுகம் மறைவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை, தி.மு.க., தலைமை எடுக்க உள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறுகின்றன.

சேலம் மவட்டத்தின் செயலர் பதவிக்கு, இதுவரை எவ்வித போட்டியோ, எதிர்ப்போ இல்லாமல், வீரபாண்டி ஆறுமுகம் இருந்து வந்தார். அவருக்கு எதிர் கோஷ்டியாக கருதப்படும், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் போன்றோர், மாவட்ட செயலர் பதவிக்கு போட்டியிடவில்லை."சேலம் மாவட்டச் செயலர் யார்?' என்ற கேள்வியே, இதுநாள் வரை எழாமல் இருந்தது. தற்போது, வீரபாண்டி மறைவுக்குப் பின், பெரும் வெற்றிடத்தை, சேலம் மாவட்ட தி.மு.க., சந்திக்கிறது. உடனடியாக, மாவட்ட செயலர் காலியிடத்தை நிரப்ப, கட்சி தலைமை தயாராக இல்லை என, தி.மு.க., வட்டாரங்களில் கூறுகின்றனர்.???

கட்சியின் உள்கட்சி தேர்தல் துவங்கியுள்ள நிலையில், மாவட்ட செயலருக்கான தேர்தல் ஒரு சில மாதங்களில் நடக்கவுள்ளது. "கட்சித் தேர்தலின் போது, மாவட்ட செயலர் தேர்வை பார்த்துக் கொள்ளலாம். அதுவரை, பொறுப்புக் குழு ஒன்றை நியமிக்க, தி.மு.க., தலைமை நடவடிக்கை எடுக்கும்' என்றும் கூறுகின்றனர்.

"வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்கள், அவருக்கு எதிரணியர் ஆகியோர் கொண்ட பொறுப்புக் குழு நியமிக்கப்படலாம்' என்றும் தெரிவிக்கின்றனர். "சேலம் மாவட்டம், வன்னியர்கள் நிறைந்த பகுதி என்பதால், மீண்டும் ஒரு வன்னியரை மாவட்டச் செயலராக நியமிக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது' என, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

மாவட்டச் செயலர் போட்டியில், ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதி, இளைஞர் அணி மாநில துணை செயலரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராஜேந்திரன், முன்னாள் மேயர் சூடாமணி, துணை மேயர் சுபாஷ், முன்னாள் எம்.எல்.ஏ., கலையமுதன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

"போட்டியில்லாத ஒரு தேர்வையே கட்சித் தலைமை விரும்புகிறது; எனவே, மாவட்டச் செயலர் நியமனம் தான் நடக்கும்' என்றும், தி.மு.க.,வினர் கூறுகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangairaja - tcmtnland,இந்தியா
25-நவ-201213:35:24 IST Report Abuse
Thangairaja நியமன முறையெல்லாம் திமுகவில் கிடையாது. தேர்தலின் மூலம் மாவட்ட செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்காலிக பொறுப்பாளர்களை நியமிப்பது மட்டுமே நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
25-நவ-201210:58:23 IST Report Abuse
Pannadai Pandian திறமையான கிரிமினல்கள் அறிவாலயத்தில் விண்ணப்பிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
25-நவ-201208:31:47 IST Report Abuse
villupuram jeevithan >போட்டியில்லாத ஒரு தேர்வையே கட்சித் தலைமை விரும்புகிறது< இதேதான் கட்சி தலைமை பதவிக்கும் பொருந்துமா? இரண்டு மூன்று வாரிசுகள் இருக்கும் போது என்ன பண்ணுவது?
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
25-நவ-201202:32:08 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் அப்படியா ??? நாம் ஓன்று நினைக்க கருணா ஓன்று நினைப்பார் ..... ஆறுமுகனின் மகன் ராஜா தான் _அடுத்த_....... ??? என்று பலர் குரல் கொடுத்துள்ளனர் என்று கேள்வி பட்டேன் ... பார்ப்போம் ..
Rate this:
Share this comment
GOPINATH - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201214:08:20 IST Report Abuse
GOPINATHRaja shall not suit this post. It should be T.M.Selvaganapathi or Panamarathu patti Rajaran, as the people of Salem will not encourage the followers of Veerapandi,. Late veerapandi had done some good things to Salem but he had troubled lot of people in and around salem. When watching SUN TV, they showed that all business place and schools were closed for mourning for Veerapandi, it was only becasue of the FEAR OF DAMAGES for them and childeren. ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.