Report to the Commissioner of Police on charges of inciting violence Yet ramadas | வன்முறையை தூண்டுவதாக ராமதாஸ் மீது போலீசில் புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வன்முறையை தூண்டுவதாக ராமதாஸ் மீது போலீசில் புகார்

Added : நவ 24, 2012 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வன்முறையை தூண்டுவதாக   ராமதாஸ் மீது  போலீசில் புகார்

சென்னை:"தலித் மக்கள் மோசமானவர்கள்' என, சித்தரித்து, பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ள, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அதே கட்சியின், காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை கோரி, போலீஸ் கமிஷனரிடம், வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.வழக்கறிஞர் ரஜினிகாந்த் அளித்த புகார் விவரம்:

தர்மபுரி மாவட்டம், நாய்க்கன் கொட்டாய், நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் பகுதிகளுக்குள், ஒரு தரப்பினர் நடத்திய வன்முறை சம்பவம் தொடர்பாக, கடந்த 17ம் தேதி, சென்னையில், பத்திரிகையாளர்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காடுவெட்டி குரு எம்.எல்.ஏ., ஆகியோர் பேட்டி அளித்தனர்.தலித் மக்கள் வாழும் பகுதிகளில் செல்லும், பிற சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கும், மாணவியருக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை. இதனால், பல மாணவியரின் படிப்பு பாதிக்கப்படுகிறது என, தெரிவித்துள்ளனர்.

அதாவது, தலித்துக்களை மோசமானவர்கள் என, சித்தரித்து, இழிவுபடுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.இதில், மிகப்பெரிய விஷமத்தனம் அடங்கியிருக்கிறது. பிற சமூகத்தினரை தூண்டிவிட்டு, பகைமையை ஏற்படுத்தி, அதில் ராமதாஸ் குளிர்காய நினைக்கிறார்.தலித்கள் மோசமானவர்கள், சமூக விரோதிகள் என, பொது இடத்தில் இழிவு படுத்திய அவர்களது செயல், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான் வன் கொடுமை தடுப்புச் சட்டப் படி, தண்டனைக்குரிய குற்றம். எனவே, ராமதாஸ் மற்றும் காடு வெட்டி குரு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
25-நவ-201216:48:50 IST Report Abuse
g.s,rajan வன்முறையா ?அப்படின்னா என்ன ? ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
25-நவ-201216:44:43 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA உண்மை சொன்னால் தவறா.. இதிலிருந்து தெரிகிறது அந்த சட்டத்தை "அவர்கள்" எப்படி எல்லாம் தனக்கு சாதகமாக வளைக்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
25-நவ-201215:09:44 IST Report Abuse
Giri Srinivasan தன் ஜாதியை மேம்படுத்த ராம தாசரின் வழி. மீண்டும் 1984 ..... அப்போ, இன்னும் நீங்க முன்னேரல்லையா ???? அடுத்த முதல்வர் அன்புமணி தான் ???
Rate this:
Share this comment
Cancel
Sekkilar - Chennai,இந்தியா
25-நவ-201214:28:42 IST Report Abuse
Sekkilar ஏலர இது வந்தவே ஏதாவது பிரச்சனைய கொண்டுவருமே..
Rate this:
Share this comment
Cancel
Sekkilar - Chennai,இந்தியா
25-நவ-201214:28:42 IST Report Abuse
Sekkilar ஏலர இது வந்தவே ஏதாவது பிரச்சனைய கொண்டுவருமே..
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
25-நவ-201212:56:54 IST Report Abuse
Ashok ,India சாதி,மத பெயர் கொண்டு இயங்கும் பள்ளி,கல்லூரி பெயர்களை நீக்க அரசு நடவடிக்கை எடுத்தால் சாதி ஒழியும்.. உதாரணமாக மதுரையில் நாடார் பள்ளி, யாதவ் பள்ளி,ஆயிரம் வைசியர் பள்ளி, சௌராஷ்டிரா பள்ளி போன்றவை. தரமான கல்வியை போதிக்கும் கல்வி சாலைகள் மாணவர்களின் பள்ளி பெயரில் சாதி பெயரையும் சொல்ல வைப்பது வேதனையே.
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
25-நவ-201212:54:53 IST Report Abuse
Thangairaja இழந்துவிட்ட வன்னியர்களின் ஆதரவை எந்த வழியிலாவது பெற்று விட வேண்டும், அதற்காக மீண்டும் மரம் வெட்டவும் தயார் என அறிவுறுத்தி வருகிறார். இது மாதிரியான ஆட்களுக்கு தமிழக மக்கள் யாருமே ஆதரவளிக்காமல் புறக்கணிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
25-நவ-201211:13:55 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் சாதியின் பெயரை சொல்லி மக்களின் உணர்வுகளை தூண்டி விட்டு , அவர்களுக்கு சாதிவெறியினை உண்டாக்கி வன்முறையை தூண்டி விட்டு அதன் மூலம் பலரது கவனத்தை திசை திருப்பி தேர்தலில் நினைத்ததை சாதித்து கொள்கின்றனர் இவர்கள் .... இவற்றின் ஆணிவேராக இருப்பது சாதியையும் அதற்கான இட ஒதுக்கீடும் தான் ... முதலில் வருமான சான்றிதலின் அடிப்படையில் பள்ளியில் சேர்ப்பும் , இடஒதுக்கீடும் கொண்டு வர வேண்டும் .... சாதி பெயரில் எந்த சலுகையும் தர கூடாது ... எல்லா சாதியிலும் பொருளாதரத்தில் பின்தங்கியவன் இருக்கிறார்கள் .... ஆகவே சட்டத்தை முதலில் மாற்றி அமைக்க வேண்டும் ... அப்படி என்றால் தான் 2050 லாவது இந்த மாதிரி சாதி சண்டைகள் ஒழிய வாய்ப்புள்ளது ... ராமதாஸ் தான் தருமபுரி கலவரத்துக்கு காரணம் என்பது அவரது முந்தைய பேச்சுகளே அதற்கு சான்று ... தவறு செய்தல் தண்டனை கட்டாயம் தரபடல் வேண்டும் ...
Rate this:
Share this comment
Narayanaswamy Chandrasekaran - Doha,கத்தார்
25-நவ-201217:20:05 IST Report Abuse
Narayanaswamy Chandrasekaranநீங்கள் கூறிய கருத்து மிகவும் சரியே. ஆனால் இது ஓட்டு வாங்கும் வழியில்லையே. MGR இதை மாற்ற நினைத்தபோது மற்ற எலா ஓட்டுப் பிச்சிகாரர்களும் ஒன்று கூடி அதை முறியடித்தனர். BE, ME மற்றும் MBBS படித்து நல்ல பதவியிலுள்ளவர்கள் தங்கள் BC, OBC, MBC SC ST சான்றிதழ்களை தாங்களாக முன் வந்து தூக்கி எறியாதவரையில் இந்த கூத்து நிற்காது....
Rate this:
Share this comment
Amudhan - Thirunelveli,இந்தியா
25-நவ-201218:54:49 IST Report Abuse
Amudhanஅருமை. மிக சரியான கருத்து..........
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
26-நவ-201200:58:19 IST Report Abuse
தமிழ்வேல் ... எல்லா சாதியிலும் பொருளாதரத்தில் பின்தங்கியவன் இருக்கிறார்கள் .... ஆகவே சட்டத்தை முதலில் மாற்றி அமைக்க வேண்டும் ... சரியான வார்த்தைகள்.....
Rate this:
Share this comment
Cancel
PR Makudeswaran - madras,இந்தியா
25-நவ-201210:54:37 IST Report Abuse
PR Makudeswaran நம் அரசியல்வாதிகள் அவர்கள் மட்டும் சுகமாக பணபலமாக இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஜாதி.மக்களை பிரித்து ஆள்வதில் தான் அவர்களின் ஈடுபாடு.வருமானத்தின் அடிப்படையில் என்றால் எல்லோரும் பயனடைவார்கள்.அவர்களுக்கு ஒட்டு வங்கிதான் குறி.நாட்டைப்பற்றி அல்ல
Rate this:
Share this comment
Cancel
Global Citizen - சென்னை,இந்தியா
25-நவ-201210:23:53 IST Report Abuse
Global Citizen நம் நாட்டிற்கு வெளியில் இருந்து வரும் தீவிரவாதத்தைவிட இது போன்ற ஜாதீய தீவிரவாதம் மிகக் கொடுமையானது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை