virapandy Arumugam death, dmk loss: Stalin | வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவு தி.மு.க.,வுக்கு இழப்பு:ஸ்டாலின் | Dinamalar

வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவு தி.மு.க.,வுக்கு இழப்பு:ஸ்டாலின்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவு தி.மு.க.,வுக்கு இழப்பு:ஸ்டாலின்

வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவு தி.மு.க.,வுக்கு இழப்பு:இரங்கல் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

சேலம்:""வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவு, தி.மு.க.,வுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது,'' என, இரங்கல் கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார்.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இறுதி சடங்குக்கு, பின் இரங்கல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, ஸ்டாலின் தலைமை வகித்தார். துரைமுருகன், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சுசீந்திரகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பல்லரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

வீரபாண்டி ஆறுமுகம் நம்மிடம் இருந்து மறைந்தாலும், புகழ், லட்சியம், கொள்கை ஆகியன நம்முடன் இருந்து கொண்டு தான் உள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, எப்போது பிரச்சனை வந்தாலும், வேதனை அடைந்தாலும், அந்த இடத்தில் முதல் ஆளாக வீரபாண்டி ஆறுமுகம் வந்து இருப்பார். தலைவருக்கு தெம்பும், பக்கபலமாக இருந்து, எந்த பிரச்சனை வந்தாலும், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என, கூறி பக்கபலமாக இருந்தார்.
துரைமுருகன் தெரிவிப்பது போல், இன்னும், பத்து முதல், 12 ஆண்டு வரை, வீரபாண்டி ஆறுமுகம் இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அவர் நம்மிடம் இல்லாமல் போனதற்கு காரணம், அ.தி.மு.க., ஆட்சி தான்.பலமுறை மரணத்தோடு போராடி, அதை வென்றார். மரணம் அவரிடம் தோல்வியை தான் தழுவியது.

அமைச்சர் பதவியை அவர் வகித்த போதெல்லாம், அந்த துறை பெருமை பெற்று இருக்கிறது. மற்ற அமைச்சர்களுக்கு முன் உதாரணமாக விளங்கியதோடு, தான் வகித்த துறையை பெருமை பெறச் செய்துள்ளார்.கருணாநிதி, "கழகத்தின் தூண் சாய்ந்து இருக்கிறது' என்றார். அதே போன்ற இழப்பு, தி.மு.க.,வுக்கு மட்டுமின்றி, மக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது, இருந்த போதிலும் அவரின் லட்சியம், குறிக்கோள், கொள்கைகளையும் நிறைவேற்ற இந்த இரங்கல் கூட்டத்தை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தி.மு.க.,வினருக்கும், கருணாநிதி சார்பிலும், தி.மு.க., சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக துரைமுருகன் பேசியதாவது:வீரபாண்டி ஆறுமுகத்தின் இழப்பு, தி.மு.க.,விற்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாக அமைந்து உள்ளது. 1962 முதல், 2012 வரை, எனக்கு ஆசானாக, நன்பணாக, வழிகாட்டும் குருவாக, தந்தையாக இருந்து வழிகாட்டினார்.வீரபாண்டி ஆறுமுகத்தின் இழப்பு, சேலத்தில் இமயம் சாய்ந்து விட்டது போல், இமயமலை சாய்ந்தது போல், அதனால் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் போன்றது. அந்த பள்ளத்தை யார் நிரப்ப போகின்றனர் என்பதை காலம் தான் பார்த்துக் கொள்ளும்.தி.மு.க., தலைவர் கருணாநிதி, வீரபாண்டி ஆறுமுகத்தின் இறப்பால், கண்ணீர் மல்க கவலையுடன் இருப்பதால், அவரால் சாப்பிடக் கூட முடியவில்லை. அவரின் உடல் நிலை ஒத்து போகவில்லை என்பதால் இங்கு அவரால் வரமுடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manohar - Trichy,இந்தியா
25-நவ-201215:00:57 IST Report Abuse
Manohar அப்பனுக்கு பிறகு மகனுக்கு பதவி, இதுதானே திமுகவின் கொள்கை
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
25-நவ-201211:43:39 IST Report Abuse
g.s,rajan அவர் மாவீரன் அலெக்சாண்டர் மாதிரி அலெக்சாண்டர் பலரிடம் போரிட்டு ஏகப்பட்ட சொத்துக்களை சேர்த்தார் பல நாடுகளின் மீது போர் தொடுத்தார் ,நிலங்களை வாங்கினார் ,பொன்னும் பொருளும் வாங்கிக்குவிதார் .இறுதியில் எதையும் அவரால் எடுத்து செல்ல முடியவில்லை .வெறும் கையுடனே சென்றார் இரு கைகளையும் வெளியே நீட்டிய படியே அவர் அடக்கம் செய்யப்பட்டார் .ஆறடி நிலமே மிஞ்சியது .அதே நிலை தான் கழக கண்மணிகளுக்கும் எவ்வளவு சொத்துக்கள் சேர்த்தாலும் தம்மோடு அவற்றை எடுத்து செல்ல முடியாது . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
25-நவ-201219:37:27 IST Report Abuse
villupuram jeevithanசொத்து சேர்ப்பது தனது பல சந்ததியருக்குக்காக. ...
Rate this:
Share this comment
poiyyan - doha,கத்தார்
25-நவ-201222:39:28 IST Report Abuse
poiyyanசந்ததியே இல்லாதவர்கள் சொத்து சேர்ப்பது யாருக்காக...
Rate this:
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
25-நவ-201210:05:10 IST Report Abuse
தமிழ் சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் திமுகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிக பெரிய இழப்பு. சேலம் மக்கள் ஏதோ பூகம்பம் தாக்கியது போன்ற அதிர்ச்சியில் பரிதவிக்கிறார்கள். இரங்கல் கூட்டத்தின் போது பெண்டிர்களும் குழந்தைகளும் பெரியவர்களும் அழுது தவிக்கிறார்கள். சேலத்தை யார் இனி தூக்கி நிறுத்துவது என்ற பெரியோதொரு ஆச்சரியகுரியில் அவர்கள் தெரிகிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் இறைவனடி சென்றாலும், சேலத்து மக்களின் சேவைகளை புரிய அவரின் மகனுக்கு உறுதுணையாக இருப்பார். சேலத்து மக்களின் துயரம் கலைஞருக்கு புரிகிறது. அதற்கான சேவைகளை அவர் ஆற்றுவார்.
Rate this:
Share this comment
MaduraiNayagan - CHENNAI,இந்தியா
25-நவ-201213:30:59 IST Report Abuse
MaduraiNayaganஇது கண்டிப்பாக வஞ்சபுகழ்ச்சி தான் நல்ல பதிவு , ரசித்தோம் ...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-நவ-201214:50:10 IST Report Abuse
தமிழ்வேல் அவ்வளவு பெரிய கட்சியில் அவரது மகனைத்தவிர வேறு யாரும் வல்லவர்கள் இல்லையா ?...
Rate this:
Share this comment
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
25-நவ-201214:58:17 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் ultimate காமெடி ... ...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
25-நவ-201208:28:31 IST Report Abuse
villupuram jeevithan அரசியலில் தலைவர்கள் உயிரோடு இருக்கும் போதே அவர்களது வாரிசுகள் தான் முழு அதிகாரத்துடன் செயல்படுகிறார்கள். அத்தலைவர்கள் மறைந்தால் அவர்களின் வாரிசுகளுக்கு அதிகார பூர்வமான அதிகாரம் கையிக்கு கிடைத்துவிடும். எனவே இதில் இழப்பு ஒன்றும் இல்லை. வெறும் கற்பனையே?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
25-நவ-201208:23:38 IST Report Abuse
villupuram jeevithan அவருடைய வாரிசுக்கு தான் மீண்டும் பதவி கிடைக்கப் போகிறது. இதில் என்ன இழப்பு?
Rate this:
Share this comment
GOPINATH - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-201214:00:51 IST Report Abuse
GOPINATHNow it is the time for DMK leadership to think. They should appoint a equally powerful person for the post of Dist.Secy of DMK. We hope T.M.Selvaganapathi can take the party with able leadership. He should be right choice, as son of veerapandi is not a able and sui leader. ...
Rate this:
Share this comment
Cancel
25-நவ-201204:32:00 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க அவர் நம்மிடம் இல்லாமல் போனதற்கு காரணம், அ.தி.மு.க., ஆட்சி தான்.............. நாக்கு இருக்குதுன்னு கண்டபடி பேச கூடாது. இங்கேயுமா அரசியல்................ அட கண்றாவியே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.