நாலு வரி "நறுக்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

வாசன் ஆதரவாளர்கள் மறுப்பு

பார்லிமென்ட் தேர்தல் குறித்து காங்கிரஸ் சார்பில், ஆய்வுப் பணி தொகுதி வாரியாக நடந்து வருகிறது. வடசென்னை, தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளர்கள், தங்களது தொகுதிகளில் வாசன் போட்டியிட வேண்டும் என்ற போட்டா போட்டி போட்டு மனுக்களை மேலிட பார்வையாளர், கங்காபவானியிடம் அளித்தனர். கிருஷ்ணகிரியில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், "மாஜி' நகராட்சி தலைவர் ஒருவர், வாசன் போட்டியிட வேண்டும் என, வலியுறுத்தி கையெழுத்து வேட்டை நடத்தினார். அப்போது வாசன் ஆதரவாளர்களான "மாஜி' எம்.பி., ஒருவரும், தற்போதைய மாவட்ட நிர்வாகி ஒருவரும், நாங்கள் கையெழுத்து போட மாட்டோம் என, மறுத்து விட்டனர். "எங்களுக்கு தான் சீட் வழங்க வேண்டும்' என்று தங்களது ஆசையை தெரிவித்துள்ளனர். வேடிக்கை என்னவென்றால், வாசன் போட்டியிடக் கோரிய மனுவில் கையெழுத்திட மறுத்தவர்களை பற்றிய தகவலை, எதிர்கோஷ்டியினர் சென்னையில் உள்ள வாசன்
ஆதரவாளர்களிடம் போட்டுக் கொடுத்து விட்டனர்.

ஆளுங்கட்சியில் சேர முடியலை


ஒண்ணே கால் கோடிக்கும், மேல் உறுப்பினர்களை கொண்ட, அ.தி.மு.க., வில், புதிய உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், புதிய உறுப்பினர் விண்ணப்பங்களை நிறைவேற்றி கொடுத்தால், புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்கப்படும். கடந்த ஓர் ஆண்டாக, புதிய உறுப்பினர்கள் அட்டை வழங்க வேண்டும் என்றால், சம்பந்தபட்ட மாவட்டச்செயலர், நகர, பகுதி, ஒன்றிய, கிளை செயலர் ஆகியோரில், யாரவது ஒருவரிடம், பரிந்துரை பெற்று வர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், வெளியூர்களிலிருந்து வரும் கட்சியினர், புதிய உறுப்பினர் அட்டை பெற முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மாவட்ட அளவில் பல்வேறு அணிகள் உள்ளன. அந்த அணிகளின் நிர்வாகிகள் பரிந்துரையும் ஏற்க முடியாது எனக் கூறுகின்றனர். அணி நிர்வாகிகளும் முதல்வரால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்களின் பரிந்துரையை ஏற்கக்கூடாதா என்று புலம்புகின்றனர் ஆளுங்கட்சியினர்.

பஸ் உரிமையாளர்கள் நெருக்கடி

சேலம் மேற்கு சட்டம் - ஒழுங்கு உதவி கமிஷனராக பணியாற்றிய சந்திரசேகரன், கோவைக்கு மாற்றப்பட்டதற்கு, தனியார் ஓட்டல், ஆம்னி பஸ் உரிமையாளர்களின் நெருக்கடியே காரணம் என, நேர்மையான போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். சந்திரசேகரன், சட்ட விரோதமான செயல்களுக்கு தடை விதித்ததோடு, புதிய பஸ் ஸ்டாண்டு, அழகாபுரம், சூரமங்கலம் பகுதிகளில் இரவு, 11.00 மணிக்கு மேல் ஓட்டல், செயல்பட தடை விதித்தார். தனியார் ஓட்டல் நிர்வாகம், ஆம்னி பஸ் நிர்வாகிகளும், உள்ளூர் அமைச்சரின் ஒத்துழைப்புடனும், மேல் அதிகாரிகள் துணையுடன், இவரை சேலத்தில் இருந்து இட மாற்றம் செய்துள்ளனர்.

புரட்சித் தலைவர் மகன் என்ற சுவரொட்டி


ரிக்ஷா ஓட்டும் எம்.ஜி.ஆர்., படத்துடன், "புரட்சித்தலைவரின் மகன், புதிய அரசியல் கட்சி நிறுவனர் அழைக்கிறார்' என்ற அறிவிப்புடன் கூடிய சுவரொட்டிகள் சென்னை பாரிமுனை, தங்கசாலையில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், இரண்டு பாதியாக உள்ள சுவரொட்டிகள், ஒன்று ஓரிடத்திலும் மற்றொன்று வேறு இடத்திலும் ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தங்கசாலையில் உள்ள ரிக்ஷா தொழிலாளிகள் கூறுகையில், ""ஓரிரு நாட்களுக்கு முன் இரண்டு பேர், இந்த சுவரொட்டிகளை ஒட்டி விட்டு சென்றனர். ரிக்ஷா தொழிலாளி ஒருவர், புதிதாக கட்சி துவங்குகிறார் என தெரிவித்தனர். ஆனால், சுவரொட்டியை இரண்டு பாதியாக பிரித்து வெவ்வேறு இடங்களில் ஒட்டியது ஏன் என புரியவில்லை,'' என்றனர்.வித்தனர். ஆனால், சுவரொட்டியை இரண்டு பாதியாக பிரித்து வெவ்வேறு இடங்களில் ஒட்டியது ஏன் என புரியவில்லை,'' என்றனர்.

- நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்