புதுடில்லி:ராஜ்யசபா மற்றும் லோக்சபா எம்.பி.,க்களுக்கு கூடுதலாக சலுகைகள் அளிக்கப்படுவது ஏன், என்பதற்கு விளக்கம் அளிக்க கோரி, மத்திய அரசுக்கு "நோட்டீஸ்' அனுப்ப, டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
டில்லியை சேர்ந்த பி.என்.பி., சிங் என்பவர், டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த, பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செல்லும், எம்.பி.,க்கள், தாங்கள் செலவு செய்த பணத்தை, மீண்டும் திரும்பப் பெறும்போது, உண்மைத் தொகையை விட, கூடுதலாக செலவு செய்ததாக கணக்கு காட்டி பெறுகிறார்கள். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கும் பட்சத்தில், ஒரு லட்சத்து 25 ஆயிரம் செலவு செய்ததாக, கணக்கு காட்டுகிறார்கள். இவ்வாறு, எம்.பி.,க்களுக்கு பயணச் செலவில் சலுகை அளிப்பது, சட்ட விதிகளை மீறியது மட்டுமின்றி, அடிப்படை உரிமைகளை, மீறிய செயலாகும்.
பொது வாழ்க்கையில் உள்ளவர்கள், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு, இது முரணாக உள்ளது. அதே நேரத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும், ஐகோர்ட் நீதிபதிகளுக்கும், இவ்வாறு, பயணச் செலவில் இத்தகைய சலுகைகள் வழங்கப்படுவது இல்லை.
இது மட்டுமின்றி, மாத ஊதியம், தினப்படி, அலுவலக பராமரிப்புக்கான தொகை, இலவச தொலைபேசி, மின்சாரம், தண்ணீர் வசதிகள் போன்ற, இதர வசதிகளையும், எம்.பி.,க்கள் அனுபவித்து வருகிறார்கள். இந்த சூழலில், பயணச் செலவுகளில் அளிக்கப்படும் சலுகைகளை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு பயணச் செலவுகளை காட்டும், எம்.பி.,க்களின் கணக்குகள், உரிய முறையில் ஆராயப்படுவதில்லை.
இதனால், வரி செலுத்துவோரின் பணம், தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசுக்கும் கூடுதலான நிதிச் சுமை ஏற்படுகிறது. எனவே, எம்.பி.,க்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த, டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி முருகேசன் மற்றும் நீதிபதி ராஜிவ் சகாய் என்ட்லா ஆகியோர், இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சரவை செயலர், லோக்சபா, ராஜ்யசபா செயலர்கள் மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு, வரும் ஜனவரி, 23ம் தேதிக்குள், பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.