சம்பல்:""சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பாக, விவாதம் நடத்த அரசு தயாராக இருந்தாலும், பா.ஜ.,வும், மற்ற எதிர்க்கட்சிகளும், பார்லிமென்டை செயல்பட விடாமல் தடுக்கின்றன,'' என, மத்திய நிலக்கரி துறை அமைச்சர், ஸ்ரீ ஜெய்ப்பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் நகரில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, அமைச்சர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பாக, விதி எண் 184ன் கீழ், பார்லிமென்டில் விவாதம் நடத்த, அரசு தயாராகவே இருக்கிறது. ஆனாலும், அன்னிய முதலீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக, தேவையற்ற வகையில் பிரச்னை எழுப்பி, பா.ஜ.,வும், மற்ற கட்சிகளும், பார்லிமென்டில் அமளியில் ஈடுபடுகின்றன.
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது, மாநில அரசுகளின் முடிவுக்கே விடப்பட்டுள்ளது. அவர்கள் விரும்பினால், அனுமதிக்கலாம்; இல்லையெனில், நிறுத்தி விடலாம். இந்தப் பிரச்னைக்காக இப்போது குரல் எழுப்புவோர், வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, இதுபற்றி வாய் திறக்கவில்லை."2ஜி' விவகாரம் தொடர்பாக, பா.ஜ., வெளியிட்டுள்ள அறிக்கை, நகைப்புக்கு உரியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., சமர்ப்பித்துள்ள அறிக்கை, முற்றிலும் சரியானது அல்ல.அரசை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே, நிறைய இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.