தப்பிக்க மரத்தில் ஏறிய கரடியைதீ வைத்து கொளுத்தி மகிழ்ந்த கும்பல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஸ்ரீநகர்:காஷ்மீரில், மரத்தில் ஏறிய கரடியை, தப்பிக்க விடாமல், பொதுமக்கள், தீ வைத்து கொளுத்திய, மனதை பதற வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.காஷ்மீர் மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள, ÷ஷாபியான் மாவட்டத்தில், அதிர்ச்சியான இந்த சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில், இந்த மாவட்டத்தில் உள்ள, ஒரு கிராமத்துக்குள், ஒரு கரடி புகுந்தது.


கிராம மக்கள், அந்த கரடியை விட்டினர். பயந்துபோன கரடி, அங்கிருந்து வேகமாக ஓடியது; பொதுமக்களும் விரட்டினர். கும்பலிடமிருந்து தப்பிக்க, அங்கிருந்த ஒரு மரத்தில், கரடி, வேகமாக ஏறியது. கும்பலில் இருந்தவர்கள், கற்களால் தாக்கியதை அடுத்து, கரடி, மரத்தின் உச்சி பகுதிக்கு சென்றது.அப்படியும், கரடியை விட்டு விட, அந்த கும்பலுக்கு மனம் வரவில்லை.


மிக நீளமான குச்சியில், துணியை சுற்றி, அதற்கு தீ வைத்தனர். பின், தீப் பற்றி எரியும் அந்த குச்சியை, கரடி நிற்கும் இடத்துக்கு அருகில் உயர்த்தி பிடித்தனர்.தீ, கொழுந்து விட்டு எரிந்ததால், கரடிக்கு அனல் தாக்கியது. ஆனால், ஏற்கனவே, மரத்தின் உச்சிக்கு வந்து விட்டதால், அதற்கு மேல் கரடியால் செல்ல முடியவில்லை. கரடி படும் அவஸ்தையை பார்த்து, கும்பலில் இருந்தவர்கள், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.


இது தொடர்பான, வீடியோ, தற்போது, இணையதளங்களில் வெளியாகி, பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அந்த வெறிக் கும்பலிடமிருந்து, கரடி தப்பியதா அல்லது தீயில் கருகி மடிந்ததா என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok ,India - India,இந்தியா
25-நவ-201212:38:46 IST Report Abuse
Ashok ,India அணைத்து உயிரிலும் நான் இருக்கிறேன் என்று அமுத மொழி போதித்த பகவான் கிருஷ்ணர் பிறந்த இந்த புண்ணிய தேசத்தில் இப்படி கேவலமான செயலை செய்த மக்களுக்கு அந்த கடவுளே தண்டனை வழங்கட்டும். எந் உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதே இறைவனை காண்பது போலாகும் என்று போதித்த மகாவீரர்,புத்தர்,ராமகிருஷ்ணர்,வள்ளலார் போன்றோர் அவதரித்த இந்த மண்ணில் யாரும் உயிர் வதை (ஆடு,மாடு ,கோழி ) செய்யாமல் இருக்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். அசைவ உணவு உண்பதால் ஆயுள் காலம் நோயுடன் முடிவடைவதை அரசு தீவிர பிரசாரம் செய்து மக்களை சைவ உணவிற்கு மாற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-நவ-201209:32:57 IST Report Abuse
Lion Drsekar அய்யய்யோ நாம் வாயே திறக்கக்கூடாது, இது தான் மனித நேயத்தின் வளர்ச்சி மற்றும் பரிணாமம்,. ஏழாவது அறிவு ஒன்று இருக்கிறதாம், அதுதான் மனிதனாம். இப்படிதான் நம்மை பற்றி நாமே உயர்வாகக் கூறிக்கொண்டு மனித குலத்தை மட்டும் அல்ல மற்ற உயிரினங்களையும் இயற்க்கை வளத்தையும் அளித்துக்கொண்டு வருகிறோம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
vijayadhiraaj - chennai,இந்தியா
25-நவ-201209:00:53 IST Report Abuse
vijayadhiraaj காட்டு பசங்க. ஏன் அங்கு தீவிரவாதம் தலை விரித்து ஆடுகிறது என்பதற்கு அந்த மக்களின் இந்த ஒரு நடவைகையே போதுமானது. அவர்களுக்கு நல்லது எது கேட்டது என்றே தெரியாது. பணத்தை கொடுத்து கொஞ்சம் தூண்டிவிட்டால் எதையும் செய்வார்கள். அதை பாகிஸ்தான் காஷ்மீரில் நன்றாகவே செய்கிறது. அதனால்தான் பல நேரங்களில் அவர்கள் இந்தியாவிற்கு எதிராக ரோட்டில் இறங்கி போராடுகிறார்கள் . இவர்கள் இரக்கமே இல்லாத மனிதர்களாக மாறிவிட்டார்கள் என்பதருக்கு இது ஒரு சாட்சி. ஒட்டு மொத கிராமத்தையே தூக்கி உள்ளே வைக்க வேண்டும். வாய் இல்ல ஜீவனை ippadiya vanchippathu.
Rate this:
Share this comment
Cancel
periasamy karmegam - Port Morsby,பாபா நியூ கினியா
25-நவ-201204:32:25 IST Report Abuse
periasamy karmegam மிருகத்தனமான (அல்ல) / அரக்கத்தனமான செயல் -
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்