Advertisement
உணவு மானியம் அவசியம்:சொல்கிறார் ரங்கராஜன்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2012,23:42 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 25,2012,02:47 IST

கோல்கட்டா:""இந்தியா போன்ற நாடுகளில், உணவுப் பொருட்களுக்கு, முழு மானியம் அளிப்பது, மிகவும் முக்கியம்,'' என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவரான, ரங்கராஜன் கூறினார்.ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் தலைவருமான, ரங்கராஜன் கூறியதாவது:நாட்டின் நிதி நிலைமையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்குவதற்காக, நிதி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மானியங்களை குறைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.ஆனாலும், உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியத்தை குறைக்க முடியாது.

இந்தியா போன்ற நாடுகளில், உணவுப் பொருட்களுக்கு, முழு மானியம் அளிப்பது, மிகவும் முக்கியம். இதனால், ஏற்படும் இழப்பை சரி செய்வதற்காகவே, பெட்ரோலிய பொருட்களுக்கான மானியங்களை, அரசு குறைத்துள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி, குறைவாக இருந்தாலும், மற்ற நாடுகளில் உள்ளதைப் போன்ற, மோசமான பாதிப்பு எதுவும், நமக்கு இல்லை. நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி விகிதம், 5 லிருந்து, 6 சதவீதத்துக்குள் இருக்கும். அதேபோல், இந்திய ரூபாயின் மதிப்பு, மீண்டும் வீழ்ச்சியடைய வாய்ப்பு இல்லை; தற்போதுள்ள நிலையிலேயே, நீடிக்கும்.இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Anantha Padmanaban - chennai,இந்தியா
25-நவ-201217:07:17 IST Report Abuse
Anantha Padmanaban இந்திய ரூபாயின் மதிப்பு, மீண்டும் வீழ்ச்சியடைய வாய்ப்பு இல்லை தற்போதுள்ள நிலையிலேயே, நீடிக்கும்.இவ்வாறு ரங்கராஜன் கூறினார். ஏனெனில் ரூபாயின் மதிப்பு எவ்வளவு முடியுமோ அவ்வளவு வீழ்ந்து விட்டது, மேலும் விழ இடமில்லை .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
25-நவ-201210:36:29 IST Report Abuse
Hari Doss ஏன் அதையும் நீக்கி விடுவது தானே? அந்த துகையினை அமெரிக்காவின் வால்மாட்க்கு தாரை வார்க்கலாமே?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.