ஆத்தூர் : தமிழகத்தில், 1,000 ஏழை தலித் பெண்களுக்கு, சீர் வரிசையுடன் இலவச திருமணம் செய்து வைக்கும் புதிய திட்டத்தை, ஐ.ஜே.கே., தலைவர் பாரி வேந்தர், தலைவாசலில் துவக்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தலைவாசல் கோவிந்தம்பாளையம் கிராமத்தில், ஏழை தலித் பெண்களுக்கு, இலவச திருமண துவக்க விழா, ஐ.ஜே.கே., சார்பில் நடந்தது. ஒரு லட்சம் ரூபாய்க்கு, சீர் வரிசை பொருட்கள் கொடுத்து, ஐ.ஜே.கே., தலைவர் பாரி வேந்தர், திருமணத்தை நடத்தி வைத்தார்.
ஐ.ஜே.கே., தலைவர் பாரி வேந்தர் பேசியதாவது: தமிழகத்தில், தீண்டாமை ஒழிய வேண்டும் எனில், காதல் மற்றும் கலப்பு திருமணம் நடக்க வேண்டும். காதல் திருமணம் செய்யும் இளைஞர், இளம்பெண்கள், தங்களது பொருளாதார வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். தலித் சமுதாய மக்களுக்காக, கட்சி ஆரம்பித்தவர்கள், ஓட்டு வங்கியாகவும், தம் வளர்ச்சிக்கும் வழி ஏற்படுத்தி, அந்த மக்களை மறந்து விடுகின்றனர். தமிழகம் முழுவதும், 1,000 ஏழை தலித் பெண்களுக்கு, தலா ஒரு லட்சம் ரூபாயில் சீர் வரிசையுடன், 10 கோடி ரூபாயில், இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும். தற்போது, நான்கு பேருக்கு, இலவச திருமணம் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பாரி வேந்தர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.