புதுடில்லி:உ.பி.,யைச் சேர்ந்த மதுபான தயாரிப்பு நிறுவனங்களின் அதிபர், பான்டி சத்தாவும், அவரின் தம்பி ஹர்தீப்பும், மாறி மாறி சுட்டு இறந்த சம்பவத்தில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹர்தீப்பை சுட்டது, சத்தாவின் நண்பரும், உத்தரகண்ட் சிறுபான்மை ஆணைய தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவருமான, சுக்தேவ் சிங் நம்தாரி என, தெரிய வந்துள்ளது.
உத்திர பிரதேச மாநில அரசியல்வாதிகளுக்கு மிகவும் நெருக்கமானவரும், பல மதுபான தயாரிப்பு நிறுவனங்களை நடத்தி வந்தவருமான, பான்டி சத்தாவும், அவரின் தம்பி ஹர்தீப்பும், டில்லி அருகேயுள்ள பண்ணை வீட்டில், இம்மாதம், 17ம் தேதி, ஒருவரை ஒருவர் சுட்டு இறந்தனர்.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, உடனிருந்தவர், சுக்தேவ் சிங் நம்தாரி. பான்டி சத்தாவின் நண்பரான இவர், உத்தரகண்ட் மாநில, சிறுபான்மை ஆணைய தலைவராக பதவி வகித்தார். சத்தா மற்றும் ஹர்தீப் மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.அத்துடன், சத்தா - ஹர்தீப் மாறி மாறி சுட்டு இறந்தது தொடர்பாக, டில்லி போலீசாரால் நேற்று முன் தினம், நம்தாரி கைது செய்யப்பட்டார். நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவரை, ஐந்து நாள் போலீஸ் காவலில் விசாரிக்க, மாஜிஸ்திரேட் சந்தீப் கார்க் உத்தரவிட்டார்.
முன்னதாக, நம்தாரியிடம் விசாரணை நடத்திய, போலீசார் கூறியதாவது:டில்லி அருகேயுள்ள பண்ணை வீட்டில், தொழிலதிபர் சத்தாவும், அவரின் தம்பி ஹர்தீப்பும் ஒருவரை ஒருவர் சுட்டு, இறந்ததாக முதலில் தெரியவந்தது. ஆனால், உண்மையில், ஹர்தீப்பை சுட்டவர் நம்தாரியே.
சத்தா - ஹர்தீப் இடையேயான சண்டையின் போது, ஒரு கட்டத்தில், நம்தாரியை சுட, ஹர்தீப் முற்பட்டுள்ளார். சுதாரித்துக் கொண்ட நம்தாரி, ஹர்தீப்பை சுட்டுள்ளார். பண்ணை வீட்டிலிருந்த, ஹர்தீப்பின் ஆட்களை அடித்து விரட்டியதும் நம்தாரியின் ஆட்களே.
நடந்த சம்பவம் பற்றி, இதற்கு முன், நம்தாரி எதையும் தெரிவிக்கவில்லை; அத்துடன் தன் துப்பாக்கியையும் மறைக்க முற்பட்டுள்ளார்.இவ்வாறு போலீசார் கூறினார்.கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின், நிருபர்களிடம் பேசிய நம்தாரி கூறுகையில், ""இந்த வழக்கு தொடர்பாக, நான் எதையும் உங்களிடம் தெரிவிக்க விரும்பவில்லை. நடந்த சம்பவம் ஒரு விபத்து; எனக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடுநடந்த பின், போலீசாரை அழைத்தது நானே; நான் யாரையும் சுடவில்லை,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.