காத்மாண்டு:நேபாளத்தில், அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் வகையிலான கூட்டணி அரசுக்கு தலைமை வகிக்கும் பிரதமர் பெயரை, 29ம் தேதிக்குள் முடிவு செய்யும்படி, ஜனாதிபதி ராம்பரன் யாதவ், கெடு விதித்துஉள்ளார்.நேபாளத்தில், 2007ல், மன்னராட்சி ஒழிக்கப்பட்டு, 2008ல் குடியரசு உருவானது. ஜனநாயக நடைமுறை படி நடந்த தேர்தலில், மாவோயிஸ்டுகள் அதிக ஓட்டுகள் பெற்று ஆட்சி அமைத்தனர்.
பல பிரதமர்கள் :குடியரசின், முதல் பிரதமராக பிரசாந்தா பொறுப்பேற்றார். எனினும், கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால், அவர் பதவி விலகினார்.எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், நேபாளத்தில், புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படவில்லை. பல பிரதமர்கள் மாறி விட்டனர்.பார்லிமென்ட் உறுப்பினர்கள், போதிய ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால், 601 உறுப்பினர்கள் கொண்ட பார்லிமென்ட், மே மாதம், கலைக்கப்பட்டது. தற்காலிக பிரதமராக பாபு ராம் பட்டாரை உள்ளார்.நேபாள பார்லிமென்ட் தேர்தலை, அடுத்த ஆண்டு, ஏப்ரலில் நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலை தன்னிச்சையாக அறிவித்துள்ள பிரதமர் பாபு ராம் பட்டாரை, பதவி விலகும் படி, எதிர்க்கட்சியினர், தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 29ம் தேதி வரை கெடு:அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் வகையிலான, தேசிய அரசு அமைய, ஏற்பாடு செய்யும் படி அவர்கள் வற்புறுத்தினர்."இந்த விஷயத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்றுபட்டு செயல்பட்டால், நான் பதவி விலகத் தயார்' என, பிரதமர் பாபு ராம் பட்டாரை தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக, எதிர்க்கட்சியினர், ஜனாதிபதி ராம் பரன் யாதவை, நேற்று சந்தித்து பேசினர்.தேசிய அரசுக்கு தலைமை வகிக்க, பொதுவான பிரதமர் ஒருவரை, 29ம் தேதிக்குள் தேர்வு செய்யும் படி, அனைத்து கட்சியினரிடம், ராம்பரன் கேட்டுக் கொண்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.