மெல்போர்ன்:ஆஸ்திரேலிய குடியுரிமை பெற நினைக்கும் இந்திய ஆண்களுக்கு, அந்நாட்டு பெண்களை போலியாக, திருமணம் செய்து வைக்கும், தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆஸ்திரேலியாவில் குடியுரிமை சட்டங்கள் கடுமையானவை. அந்நாட்டின், மாணவர் விசா பெறுவதற்கே, பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்புபவர்களின், வங்கி கணக்கில் குறைந்தபட்சம், ஐந்து லட்ச ரூபாயாவது இருக்க வேண்டும். படித்து முடித்ததும், சிலர் அங்கேயே வேலை தேட ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு, மாணவர் விசா பலன் அளிக்காது என்பதால், அந்நாட்டு பெண்களை, போலியாக திருமணம் செய்து குடியுரிமை பெறும் முயற்சியில் சிலர் இறங்குகின்றனர். இதற்காக, ஆஸ்திரேலியாவின், குயின்ஸ் லாந்தை சேர்ந்த, ஒரு கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.
இதுவரை, ஐம்பது திருமணங்கள் செய்து, விசா பெறுவதற்கான விண்ணப்பங்களை, இந்த கும்பல் வினியோகம் செய்ததை, ஆஸ்திரேலிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தம்பதி, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு உள்ளதாக புகார் வந்ததையடுத்து, குடி உரிமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
பின் அந்த தம்பதியினருக்கு சொந்தமான சொத்துக்களை பறிமுதல் செய்ததுடன், அவர்களது, வங்கி கணக்குகளையும் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.குயின்ஸ்லாந்து தம்பதியினர், ஆஸ்திரேலிய பெண்களுக்கும், இந்திய ஆண்களுக்கும், போலியாக திருமணம் செய்து வைத்து, ஆஸ்திரேலிய மனைவியின் விசாவை காட்டி, இந்திய ஆண்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துக் கொள்வதாக, குடியுரிமை அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த மாதிரி கும்பல் உலகின் பல நாடுகளில் உள்ளனர். நம்ம நாட்டுக்கு வரும் வெளி நாட்டுக் காரர்களுக்கு குறிப்பாக அரபு நாட்டுக் காரர்களுக்கு நமது நாட்டு இளம் பெண்களை திருமணம் செய்து கொடுத்து அவர்கள் திரும்ப அவர்கள் நாட்டுக்கு நாட்டுக்கு திரும்பும் போது விவாகரத்தும் செய்து விடுகின்றனர் . இதற்க்கு அந்தப் புரோக்கர்களுக்கும் அந்த அப்பாவிப் பெண்ணின் பெற்றோருக்கும் பணம் கை மாறுகிறது என்று செய்தி.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.