சிட்னி:இளம் பெண்ணின் கழுத்தில், போலி வெடிகுண்டை வைத்து, 10 மணி நேரம் அச்சுறுத்தியவருக்கு, ஆஸ்திரேலிய கோர்ட், 13 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டக்ளஸ் பீட்டர்ஸ். கடந்த ஆண்டு ஆக., மாதம் மெடிலீன் புல்வர், 18, என்ற பெண்ணின் கழுத்தில், போலி வெடிகுண்டை மாட்டி, வெடிக்கச் செய்வதாக, 10 மணி நேரம் மிரட்டியுள்ளார்.இதனால், இந்த பெண், பயந்து நடுங்கினார். பின், போலீசார் விரைந்து வந்து மெடிலீனை விடுவித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவில், கென்டகி பகுதியில், தனது முன்னாள் மனைவியின் வீட்டில் ஒளிந்திருந்த டக்ளஸ், ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.இளம் பெண் கழுத்தில், போலி வெடிகுண்டை மாட்டி, அவரை மிரட்டியதை ஒப்புக்கொண்டார். மனைவி விவாகரத்து செய்ததால், மன வருத்தத்தில் இருந்த டக்ளஸ், அதிகப்படியாக மது அருந்தியதால், இந்த தவறை செய்ததாக, அவரது வழக்கறிஞர்கள் வாதாடினர்.டக்ளசின் இந்த நடவடிக்கையால், மெடிலீன் எந்த அளவு பயந்திருப்பார் என்பதை எங்களால் உணர முடிகிறது. எனவே, டக்ளஸ் மீது கருணை காட்டமுடியாது என, கூறிய நீதிபதி, அவருக்கு பதிமூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். 10 ஆண்டுகளுக்கு அவர் பரோலில் வெளியே வரமுடியாத படி, தீர்ப்பு கூறியுள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.