Advertisement
எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை மறுப்பு:மருத்துவமனைகளை மூட சீன அரசு முடிவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பீஜிங்:எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, சீன அரசு எச்சரித்துள்ளது.சீனாவில், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழு லட்சம் பேர் உள்ளனர். டியான்ஜின் நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த காரணத்துக்காக, அவருக்கு, நுரையீரல் புற்று நோய் சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவமனையும் முன் வரவில்லை.


இது குறித்து, அவர் சீன அரசிடம் முறையிட்டார்.இதையடுத்து, சீன அரசு, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.சீன அரசின் உத்தரவில் கூறியிருப்பதாவது:எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, எந்த மருத்துவமனையும், சிகிச்சை அளிக்க தயங்கக்கூடாது. தட்டி கழிக்கும் நோக்கில் மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யக்கூடாது.உண்மையிலேயே, போதிய வசதியில்லாத மருத்துவமனைகள், எய்ட்ஸ் நோயாளிகளை மற்ற மருத்துவமனைக்கு பரிந்துரைக்கலாம். மற்றபடி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை, அனைத்து மருத்துவமனைகளும் வழங்க வேண்டும்.இதை செய்யாத பட்சத்தில், அந்த மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, மூடப்படும்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.