நவ. 17: "கடந்த லோக்சபா தேர்தலின் போது, காங்கிரஸ் பொது செயலர் ராகுல், தன் சொத்து
விவரங்கள் பற்றி, தவறான தகவல்களைதந்துள்ளார்' என, ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கூறிய புகார் குறித்து, விசாரணை நடத்தும்படி, அமேதி தொகுதி தேர்தல்
அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
நவ. 18: சுவிட்சர்லாந்தின், எச்.எஸ்.பி.சி., வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள, இந்தியர் களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக, வருமான வரித்துறை அதிகாரிகள், சுவிஸ் வருவாய் துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களில் பலர், போலியான பெயர்களில், வங்கியில் கணக்கு வைத்திருப்பது, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
நவ. 19: "ஊழலை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட உள்ள லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்பிற்குள், பிரதமரும் இடம் பெற வேண்டும்; லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதை, மாநில அரசுகள் வசம் ஒப்படைக்க வேண்டும்' என, ராஜ்யசபா தேர்வுக்குழு பரிந்துரை
செய்தது.
நவ. 20: மத்திய அரசுக்கு எதிராக, தங்கள் கட்சி கொண்டு வர உள்ள நம்பிக்கையில்லா
தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி கெஞ்சினார். இது தொடர்பாக, கோல்கட்டாவில், மாநில மார்க்சிஸ்ட் தலைவரை சந்தித்து பேசவும் தயார் என
அறிவித்தார்.
நவ. 21: பார்லிமென்ட் தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு உட்பட ஏழு பேரின் கருணை மனுக்களை,மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திருப்பி அனுப்பினார்.
நவ. 22: "தமிழகத்தில், 15 லட்சம் ஏக்கரில் பயிரிட்டுள்ள சம்பா பயிர்களை காப்பாற்ற, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, காவிரியில் 52.8 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி,
கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.