கடலூர் : காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலனுக்கு, கடலூர் கோர்ட்டில், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த எல்லப்பன் பேட்டையைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகள் மகேஸ்வரி, 18. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் ரவி, 27 என்பவரும் காதலித்து வந்தனர். மகேஸ்வரியிடம் திருமணம் செய்து கொள்வதாக ரவி கூறியதால், அவரிடம் நெருங்கிப் பழகினார். அதில், மகேஸ்வரி கர்ப்பமடைந்தார். திருமணம் குறித்து கேட்டதற்கு, ரவி மறுத்து விட்டார். இதுகுறித்து மகேஸ்வரி, 2010 அக்டோர் 10ம் தேதி, நெய்வேலி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார், ரவியை கைது செய்து கடலூர் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மகேஸ்வரியை கற்பழித்த குற்றத்திற்காக, ஏழு ஆண்டு சிறையும், நம்பிக்கை மோசடி செய்ததற்காக ஓராண்டு சிறையும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என, நீதிபதி சுபாதேவி உத்தரவிட்டார். மேலும், 5,000 ரூபாய் அபராதம், பாதிக்கப்பட்ட மகேஸ்வரிக்கு நஷ்டஈடாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.