திருப்பூர் : திருப்பூரில், பனியன் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் சரணடைந்தார். தஞ்சையை சேர்ந்தவர் இனியவன், 33; பனியன் தொழிலாளி. திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் வசித்து வந்த இவர், இம்மாதம், 19ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
ஆண்டிபாளையம் குளத்துமேட்டில், நண்பர்களுடன் மது அருந்திய அவரை, உடன் சென்ற மூன்று பேர், முகத்தில் மிளகாய் பொடி வீசி, கத்தியால் வெட்டிக் கொலை செய்து, பைக்கில் தப்பினர். இக்கொலையில் தொடர்புடைய இருவர், நாமக்கல் ஜே.எம்., - 2 கோர்ட்டில் சரணடைந்தனர்; கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கொலை தொடர்பாக, மூன்றாவது நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜே.எம்., - 2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் கவிதா முன்னிலையில், பாலாஜி, 30, என்பவர், இவ்வழக்கு தொடர்பாக சரணடைந்தார். வரும், 30ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 30ம் தேதி, மீண்டும் அவரை, திருப்பூர், ஜே.எம்., - 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.