மயிலாடுதுறை : திருவாவடுதுறை ஆதீன மரபு மாறாமல், ஆதீன செயல்பாடுகள் தொடரும் என்று 24வது குருமகா சன்னிதானம், அம்பலவாண பண்டார சன்னதிகள் கூறினார். திருவாவடுதுறை ஆதீன 23வது குருமகா சன்னிதானம், சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கடந்த 22ம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அன்றைய தினமே 24வது குரு மகா சன்னிதானமாக அம்பலவாண பண்டார சன்னதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், "சூரியனார்கோவில் ஆதீன குருமகா சன்னிதானம், திருப்பனந்தாள் காசி திரு மடத்து அதிபர் எஜமான் சுவாமிகள், தருமபுர ஆதீன தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், ஆசாரிய அபிஷேகம் நடைபெற்று, அம்பலவாண பண்டார சன்னதிகள் என்ற தீட்சாநாமம் பெற்றேன்.
23வது குருமகா சன்னிதானம், அருளாட்சியின் வழியில், ஆதீன மரபு மாறாமல், ஆதீனத்தின் செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து நடைபெறும்' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.