புதுடில்லி:""இரண்டு ஆண்டுகளாக, சோமாலியா கடற்கொள்ளையரின் பிடியில் வாடும், ஏழு இந்தியர்களை விடுவிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மும்பையில் சிறையில் உள்ள, சோமாலியா கடற் கொள்ளையர்களை விடுவித்தால், இந்தியர்களை விடுவிக்கும் நடவடிக்கை எளிதாக இருக்கும்,'' என, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்., மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள முதல்வருமான, உம்மன் சாண்டி கூறியதாவது:"எம்.வி.அப்சால்ட்' என்ற கப்பலை, சோமாலியா கடற்கொள்ளையர்கள், 2010ல், சிறை பிடித்தனர். அந்த கப்பலில் இருந்த, 15 இந்திய ஊழியர்களையும் சிறை பிடித்தனர். கப்பலின் உரிமையாளர், பணம் தந்ததை அடுத்து, கப்பலையும், எட்டு ஊழியர்களையும் விடுவித்தனர்."மீதமுள்ள, ஏழு பேரை விடுவிக்க வேண்டுமெனில், மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சில சோமாலியா கடற்கொள்ளையர்களை விடுவிக்க வேண்டும்' என, கடற்கொள்ளையர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.இதனால், இரண்டு ஆண்டுகளாக, ஏழு இந்தியர்களும், சோமாலியா கடற்கொள்ளையரின் பிடியில் வாடுகின்றனர்.
இவர்களில், இரண்டு பேர், கேரளாவைச் சேர்ந்தவர்கள். கடற்கொள்ளையர்களை, சிறையில் வைத்திருப்பதால், என்ன பயன் கிடைக்கப் போகிறது.அதற்கு பதிலாக, அவர்களில் சிலரை விடுவித்து, அதற்கு பதிலாக, சோமாலியாவில் கொள்ளையர்களின் பிடியில் வாடும், ஏழு இந்தியர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இது குறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர், ஜி.கே.வாசன், வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் ஆகியோரிடம் வலியுறுத்தி உள்ளேன். கடற்கொள்ளையரின் பிடியில் வாடும் இந்தியர்களை விடுவிக்க, இதைத் தவிர, வேறு எந்த வழியும் இருப்பதாக தெரியவில்லை.இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.