சென்னை : நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நகை திருடியது ஏன் என, கைது செய்யப்பட்டுள்ள வேலைக்கார பெண் ஜோதி, பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை ஈச்சம்பாக்கத்தில் வசிக்கும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாய் நித்யா, 64. படுக்கை அறை அலமாறியில் வைக்கப்பட்டு இருந்த, வைர வளையல் உள்பட, 35 சவரன் திருடு போயிருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், நீலாங்கரை போலீசார் , வேலைக்கார பெண் ஜோதி, 22.யை நேற்று கைது செய்துள்ளனர்.
அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்: ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்றோர் வசிக்கின்றனர். எனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. வரதட்சணையாக, 50 சவரன் கேட்டனர். ஏழ்மை நிலையில் இருக்கும், என் தந்தையால் அவ்வளவு நகை போட முடியாது என்பதால், என்ன செய்வதென்று தவித்தேன். வேலைக்கார பெண்ணாக இருந்த போதிலும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தாரின் நம்பிக்கையை பெற்று இருந்தேன். அந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் எனக்கு அத்துபடி. படுக்கை அறை அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த வைர வளையல், தங்க வளையல், சிவப்பு, பச்சை கல் பதித்த நெக்லஸ், தங்க நாணயங்கள் என, சிறுக சிறுக திருடினேன். திருடிய நகையுடன், குண்டூர் சென்று, தாலி, 3 சங்கலி, பிரேஸ்லெட் என, உருமாற்றி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேன். 35 சவரன் மட்டும் திருடியிருந்ததால், மீதிதேவைப்பட்ட, 15 சவரனையும் திருடும் வேலையை துவங்கினேன்.
நடிகைக்கு பிடித்த வளையல் : பச்சை கல் பதித்த வைர வளையலை, நடிகை ரம்யா கிருஷ்ணன், விரும்பி அணிவார். அந்த நகையை, நான் திருடிவிட்டதால், காணாமல், வீடு முழுக்க தேடினர். மாட்டிக் கொள்வோம் என, பயந்து, ஆந்திராவுக்கு தப்ப முயன்ற போது போலீசில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு ஜோதி, போலீசில் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.