Kejri the secret extraterrestrial named the "poor people's party ' | கட்சிக்கு பெயரிட்டார் கெஜ்ரிவால்உதயமானது "ஏழை மக்கள் கட்சி' | Dinamalar
Advertisement
கட்சிக்கு பெயரிட்டார் கெஜ்ரிவால்உதயமானது "ஏழை மக்கள் கட்சி'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சமூக சேவகர் அன்னா ஹசாரே குழுவிலிருந்து பிரிந்து, சமீபத்தில், புதிதாக அரசியல் கட்சி துவக்கிய, "ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று தன் கட்சிக்கான பெயரை அறிவித்தார். "ஏழை மக்கள் கட்சி' (ஆம் ஆத்மி பார்ட்டி) என, அவரது கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் முதல் கூட்டம், டில்லியில் நாளை மாலை நடைபெறவுள்ளது.
ஊழலுக்கு எதிராகவும், பலமான, "லோக் பால்' மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தியும், சமூக சேவகர் அன்னா ஹசாரே டில்லியில் உண்ணவிரதம் இருந்தார். அவரது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இடம் பெற்றிருந்தவர், அரவிந்த் கெஜ்ரிவால்.செப்டம்பர், 19ம் தேதி, ஹசாரே குழுவிலிருந்து பிரிந்த இவர், புதிதாக அரசியல் கட்சியை துவக்கினார்; ஆனால், அந்தக் கட்சிக்கான பெயரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், கெஜ்ரிவால் கட்சியின் நிறுவன உறுப்பினர்கள், 300 பேர் பங்கேற்ற கூட்டம், டில்லி, "கான்ஸ்டியூஷன் கிளப்'பில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், "ஏழை மக்கள் கட்சி' என, தன் கட்சியின் பெயரை, கெஜ்ரிவால் முன்மொழிந்தார். அதை கூட்டத்தில், பங்கேற்ற அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அத்துடன், கட்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள, சட்ட விதிகளையும், உறுப்பினர்கள் அங்கீகரித்தனர்.
புதிதாக உருவெடுத்துள்ள, "ஏழை மக்கள் கட்சி'யின் முதல் கூட்டம், டில்லியில் உள்ள, ஜந்தர் மந்தரில் நாளை மாலை நடக்கிறது.


புதிய கட்சியின் கொள்கைகள் குறித்து கெஜ்ரிவால் கூறியதாவது:மக்களால் நடத்தப்பட இருக்கிற, இந்தக் கட்சியில், காங்கிரஸ், பா.ஜ., கட்சி போல, தலைமைப் பீடம் இருக்காது; எல்லா முடிவுகளும் ஜனநாயக முறையில் எடுக்கப்படும். பொருளாதார சுதந்திரத்தை மக்கள் அடைய வேண்டும் என்பதே, கட்சியின் முக்கிய குறிக்கோள். நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளாகியும், ஏழ்மை, வறுமை ஒழிக்கப்படவில்லை.

இத்தனை ஆண்டுகளாக, அரசியல் கட்சிகள் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. அதனால், நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.விலைவாசி ஏற்றம் மற்றும் ஊழலால், மக்களின் கோபம் இன்னும் அதிகரித்துள்ளது. "ஏழை மக்கள் கட்சி'க்கு ஆட்சிக்கு வந்தால், சாதாரண நபர்கள் கூட, பார்லிமென்ட் உறுப்பினராகும் வாய்ப்பு உருவாகும். இதன் பின், மக்கள் விரோத சட்டங்களுக்கு முடிவு ஏற்படும்.இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.-நமது டில்லி நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
villupuram jeevithan - villupuram,இந்தியா
25-நவ-201208:47:30 IST Report Abuse
villupuram jeevithan சாதாரண ஏழைமக்களை சுரண்டும் பணக்கார முதலைகள் ஆளும் நாடு இது (mango people living in banana republic) என்று ராபெர்ட் வதேரா வர்ணித்துள்ளார் தனது மாமியார் ஆட்சி செய்யும் இந்த நாட்டையும், அம்மக்களையும். தெரிந்தோ தெரியாமலோ உண்மையை தான் சொல்லியிருக்கிறார். எனவே அவர் உங்கள் சாதாரண மாம்பழக் கட்சியில் வர முயற்சிக்கிறாரோ?
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
25-நவ-201206:34:39 IST Report Abuse
ஆரூர் ரங நமது டவுசர் தாஸ் கோர்ட்டுக்குப் போய் இதற்கு ஸ்டே வாங்கணும். பாமக என்ற பெயரைத்தான் இந்தியில் ஆம் ஆத்மி கட்சி என துவக்கியுள்ளார். கட்சியே போனாலும் டவுசருக்கு பெயராவது மிஞ்சுமே.
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
25-நவ-201203:48:36 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ..... வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் ...
Rate this:
0 members
0 members
14 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்