சிவகாசி: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் உடல் நலக்குறைவால், மயங்கி கிடந்தவருக்கு யாரும் உதவாததால், அவர் இறந்தார். பிரேத பரிசோதனை செய்யாமல், உடலை புதைத்த போலீசார், நகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை கோரி, இறந்தவரின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். அருப்புக்கோட்டை, ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல்,45. தச்சு ஆசாரி. இவருக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். சிவகாசி இன்ஜி., கல்லூரியில் படிக்கும் மகனை பார்த்து விட்டு, நவ.,18 ல், அங்குள்ள பஸ் ஸ்டாண்டிற்கு சக்திவேல் வந்துள்ளார். உடல் நிலை மோசமாகி, மயங்கி விழுந்தார். இரண்டு நாட்களாக யாரும் கவனிக்காததால், நவ., 20 ல் இறந்தார்.
சக்திவேல் வீடு திரும்பாததால், உறவினர்கள் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் விசாரிக்கையில், இரண்டு நாட்களுக்கு முன்பு உயிருக்கு போராடியவருக்கு யாரும் உதவாததால் அவர் இறந்ததும், டவுன் போலீசார் அனாதை பிணம் என அடக்கம் செய்ததும் தெரிந்தது. மேலும், வழக்கு பதியாமல், பிரேத பரிசோதனையின்றி உடலை புதைத்ததை அறிந்த சக்திவேலின் தந்தை தங்கராஜ், சிவகாசி ஏ.எஸ்.பி., திஷாமித்தலிடம் புகார் கூறினார். ஏ.எஸ்.பி., விசாரித்து, பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். நேற்று மாலை சிவகாசி நகராட்சி மயானத்தில், தாசில்தார் சாந்தா முன்னிலையில், உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின், உறவினர்கள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
உறவினர்கள் கூறுகையில், "சக்திவேல் பஸ் ஸ்டாண்டில் உயிருக்கு போராடிய போது, நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம், குப்பை அள்ளும் டிராக்டரில் சக்திவேலை ஏற்றி, அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும்படி, சுகாதார ஆய்வாளர் கூறியுள்ளார். ஆனால் மறுத்து விட்ட டிரைவருக்கும், சுகாதார ஆய்வாளருக்கும் பிரச்னை ஏற்பட்டு, அங்கேயே சக்திவேலை போட்டுவிட்டு சென்றுள்ளனர். யாரும் உதவ முன்வராததால், சிறிது நேரத்தில் சக்திவேல் இறந்தார். அவரை, பிரேத பரிசோதனை செய்யாமல், அவசர கோலத்தில் எஸ். எஸ்.ஐ., மாரிமுத்து அடக்கம் செய்துள்ளார். பிரேத பரிசோதனை அறையில் உடலை வைத்துவிட்டு, ஓரிரு நாட்கள் விசாரித்தால், எங்களுக்கு தகவல் கிடைத்து இருக்கும். நகராட்சி ஊழியர் அலட்சியத்தால், ஒரு உயிர் பறிபோய் விட்டது. போலீஸ் அலட்சியத்தால், புதைத்தவரை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, என்றனர்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) முருகன் கூறுகையில், ""பஸ் ஸ்டாண்டில் கிடந்தவரை தூக்கி செல்ல மறுத்ததாக டிராக்டர் டிரைவர் ராஜகுரு, இரு துப்புரவு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளேன். விசாரணை நடக்கிறது,'' என்றார்.
அடக்கத்திலும் அலட்சியம் : வெளியே தெரிந்த கை,கால் இறந்த சக்திவேலின் உடலை, போலீஸ் நடைமுறைகளை பின்பற்றாமல் புதைத்து விட்டனர். புதைப்பதற்கு கூட போதிய அளவில் குழி வெட்டாமல், சிறிய பள்ளம் தோண்டி, அதில் உடலை போட்டு மண்ணால் மூடியுள்ளனர். அதன்மேல் முட்களை வைத்து விட்டனர். புதைக்கப்பட்டவரின் கை, கால்கள் வெளியே தெரிந்து, துர்நாற்றம் வீசியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.