Advertisement
பட்டதாரி ஆசிரியர்கள் நியமன தடை கோரி வழக்கு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

மதுரை: பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடைகோரிய வழக்கில், "இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'எனவும், அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. உசிலம்பட்டி அருகே, கவுண்டம்பட்டி சூரியகாந்தியம்மாள் தாக்கல் செய்த மனு: நான், உசிலம்பட்டி அருகே திசுப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியை. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்ட கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் ஆசிரியர்கள், வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் கோரி, பள்ளிக் கல்வித்துறை செயலாளரிடம் மனு அளித்தோம். அதன்படி, கள்ளர் சீரமைப்புத்துறை பள்ளிகளின் 119 பட்டதாரி ஆசிரியர்கள், 27 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை, பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் செய்ய, 2011 மார்ச்சில் அரசு உத்தரவிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, அக்.,14ல், தகுதித்தேர்வு நடந்தது. நவ., 2 ல் தேர்வு முடிவு வெளியானது. நவ.,6 முதல் 7 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இவர்கள், பல்வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனால், எங்களது இடமாறுதல் பாதிக்கப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சதீஷ் ஆஜரானார். நீதிபதி,""இடைப்பட்ட காலத்தில் செய்யப்படும் பணி நியமனங்கள், இவ்வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது,'' என்றார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Advertisement

மேலும் கோர்ட் செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.