Advertisement
கைதிகள் தயாரித்த ஆயுதங்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2012,00:28 IST

மதுரை: மதுரை சிறையில் நேற்று நடத்திய சோதனையில், கைதிகள் தயாரித்த ஆயுதங்களை போலீசார்
கண்டுபிடித்தனர். 1,750 ரூபாய், பீடி, சிகரெட், சிகார் லைட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐ.ஜி., அபய்குமார்சிங் உத்தரவுப்படி, கமிஷனர் சஞ்சய்மாத்தூர், எஸ்.பி., பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் திருநாவுக்கரசு மேற்பார்வையில், இரண்டு டி.எஸ்.பி.,க்கள், எட்டு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஆயுதம் தாங்கிய 60 போலீசார் நேற்று காலை 6 மணிக்கு சிறைக்குள் சென்றனர். தண்டனை மற்றும் விசாரணை கைதிகளின் "செல்'களில் சோதனை நடத்தினர். தகரம் மற்றும் உணவு வழங்கும் அலுமினிய தட்டுகளால் கைதிகள் ரகசியமாக தயாரித்த கூர்மையான கத்திகள், குத்தூசிகள் ஆகியவற்றை செல்கள், பாத்ரூம்களில் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இரண்டு மணி நேரம் நடந்த சோதனையில் கைதிகளிடம் இருந்து 1,750 ரூபாய், பீடி,
சிகரெட், சிகார் லைட்டுகளை பறிமுதல் செய்தனர். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.