தேனி: தேனி மாவட்டத்தில், போலீஸ் வாக்கி-டாக்கிகள் செயல் இழந்துள்ளதால், அவசர போலீஸ் தகவல் தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில், 40 மெயின் செட் வாக்கி-டாக்கிகள், ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி., அலுவலகங்களில் வைக்கப்பட்டு உள்ளன. தவிர, எளிதில் எடுத்துச் செல்லும் வகையில், 200க்கும் மேற்பட்ட வாக்கி-டாக்கிகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. மகாராஜா மெட்டுவில், இதற்கான ரிபீட்டர் அமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட போலீஸ் தகவல் தொடர்புக்கு 33வது சேனல் வழங்கப்பட்டு உள்ளது.
மகாராஜா மெட்டு ரிபீட்டர் செயல்பட, ஜெனரேட்டர் வசதி இல்லை. இதனால், மின்சாரம் இருக்கும் போது மட்டுமே வாக்கி-டாக்கிகள் செயல்படுகிறது. மின்னல் தாக்கியதில் சேதமடைந்து, கடந்த, 10 நாட்களாக அதுவும் செயல்படவில்லை. இதனால், மாவட்டத்தில் வாக்கி-டாக்கி சிக்னல் கிடைக்கவில்லை. பராமரிப்பு பிரிவு அதிகாரிகள், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார், அவசரத்திற்கு மொபைல் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதில் தாமதம் ஏற்படுகிறது. பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டியில் மட்டும் சில இடங்களில், கொடைக்கானல் ரிபீட்டரில் இருந்து, 34வது சேனலில் போலீஸ் வாக்கி-டாக்கிகளுக்கு சிக்னல் கிடைக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.