திருநெல்வேலி: நெல்லையில், காங்., பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை கோர்ட்டில் ஒருவர் சரணடைந்து உள்ளார். திருநெல்வேலியில் இளைஞர் காங்., பிரமுகர் ஆனந்த், 37, நேற்று முன்தினம் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் பரிசோதனைக்கு பின், நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கொலை நடந்த விதம், அரிவாள் வெட்டின் நீளத்தை கண்ட போலீஸ் அதிகாரிகள், ஏற்கனவே நெல்லையில் நடந்த ஒன்றிரண்டு கொலைகளில் தொடர்புடையவர்களே, இந்த கொலையையும் செய்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளனர். நெல்லை மத்திய சிறையில் இருந்தபடியே, மொபைல் போன் மூலம் தரப்பட்ட உத்தரவுகளை, கூலிப்படையினர் நிறைவேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. சிலரை பிடித்து விசாரிக்கின்றனர். யாரையும் கைது செய்யவில்லை. இந்நிலையில், நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த சேதுராயன் புதூரை சேர்ந்த தங்கப்பன் மகன் நயினார் என்ற ஆதிநாராயணன், 28, கோயம்புத்தூர் கோர்ட்டில் சரணடைந்து உள்ளதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரித்தால், கொலைக்கு காரணம் தெரியவரும் எனவும், போலீசார் தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.