E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை 3 மாதத்தில் மரமாக மாற்றிய இளைஞர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 நவ
2012
00:33

திருநெல்வேலி:செடி வைத்து நடவு செய்து, இரண்டு ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல், 90 நாட்களில் மரமாக உருவாக்கி, நெல்லையை சேர்ந்த, தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர்.நெல்லை ராஜவல்லிபுரத்தை சேர்ந்த, இளைஞர்கள் செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை துவக்கி, மரக்கன்றுகள் வளர்த்து பசுமைப்புரட்சி ஏற்படுத்தி வருகின்றனர்.

விதைகள் பாவு செய்து, மரக்கன்றுகளை உற்பத்தி செய்த தன்னார்வ இளைஞர்கள், மரத்தின் பெரிய கம்புகளை வெட்டி, நடவு செய்து, இயற்கை உரங்களை போட்டு, 90 நாட்களிலேயே மரங்களாக உருவாக்கி, புதிய சாதனையை படைத்துள்ளனர்."செப்பறை வல பூமி பசுமை உலகம்' அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் அர்ஜுனன், ராஜு, சின்னத்தம்பி, ரவிக்குமார், சங்கர் உள்ளிட்ட, இளைஞர்கள் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்திந்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், "விதைகளை பாவு செய்து மரக்கன்றுகளை உருவாக்கி, அதை மரங்களாக மாற்ற, இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், மரங்களில் உள்ள கிளைகளின் கம்புகளை வெட்டி, இயற்கை உரத்தை போட்டு, 90 நாட்களில் அவற்றை மரங்களாக மாற்றும் புதிய முறையை, ராஜவல்லிபுரத்தில் செயல்படுத்தியுள்ளோம்.

பசுமைப்புரட்சி:நவீன காலத்தில் நமது வசதிக்கேற்ப, இந்த முறையில், மரங்களை குறுகிய காலத்தில் வளர்க்க முடியும். மரம் வளர்ப்பதால் பசுமைப்புரட்சியும், மழை வளமும் ஏற்படும். இந்த புதிய முறையால், ஒவ்வொரு கிராமத்தையும், இரண்டு ஆண்டுகளில் பசுமையாக்க முடியும்.இந்த புதிய முயற்சியை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்தவும், பசுமைப்புரட்சி ஏற்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். மானிய உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து தரவேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து, செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த, அர்ஜுனன் கூறுகையில், "எங்கள் அமைப்பு சார்பில் விதைகளை போட்டு மரக்கன்றுகளை உருவாக்கி, அதை மக்களுக்கு இலவசமாக வழங்கிவந்தோம். "ராஜவல்லிபுரம், தாழையூத்து பகுதியில், 27 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம். ராஜவல்லிபுரத்தில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமை புரட்சி ஏற்படுத்தியுள்ளோம்.

இயற்கை உரங்கள்:மரத்தின் கம்புகளை வெட்டி, இயற்கை உரங்களை போட்டு, மரங்களாக உருவாக்கும், புதிய முயற்சியை செய்தோம். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், புதிய முறையில், 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து பலனை தந்துள்ளது.இந்த முறைக்கு பணம் அதிகம் செலவாகாது. தண்ணீரும் குறைவாக தான் செலவாகும். இந்த புதிய முறையில் வேம்பு, மா, அத்தி, அரசு, பூவரசு போன்ற, மரங்கள் வளர்ந்துள்ளன.

எங்களது முயற்சிக்கு, பாலாமடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முகம்மதுகனி வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார். நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவினால், அனைத்து கிராமங்களிலும், எங்களது புதிய முயற்சியை பயன்படுத்தி மரங்களை வளர்க்கவும், பசுமை புரட்சி ஏற்படுத்தவும் பாடுபடுவோம்.மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு பதிலாக, மரத்தின் கம்புகளை வெட்டி, அதை மரமாக மாற்றும் திட்டத்தையும் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்தவேண்டும். இதற்கான பயிற்சியை அளிக்கவும், எங்கள் அமைப்பு தயாராக உள்ளது. இவ்வாறு, அர்ஜுனன் கூறினார்.

கலெக்டரிடம் மனு அளித்த, "செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், மரக்கம்புகளால், 90 நாட்களில் உருவாக்கிய மரக்கன்றுகளையும் எடுத்துவந்து கலெக்டரிடம் காட்டினர். "இந்த புதிய முயற்சியை அதிகாரிகளும், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்களும் பாராட்டினர்.'




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (27)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saraathi - singapore,சிங்கப்பூர்
27-நவ-201215:29:12 IST Report Abuse
saraathi வாழ்த்துக்கள்.சம்பந்தப்பட்டவர்களது தொலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியை எங்களுக்கு கொடுத்துஉதவவும்.அவர்களது சேவையை நாங்களும் பயன்படுத்த எதுவாக இருக்கும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Mayilvahanan Viswanathan - Devakottai ,இந்தியா
27-நவ-201214:10:36 IST Report Abuse
Mayilvahanan Viswanathan வாழ்த்துக்கள், விதைக்கு பதிலான இந்த பதியம் போடுதல் முறை செலவு மற்றும் நேரத்தை நிச்சயம் குறைக்கும்,
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Sankar Je - Chennai,இந்தியா
27-நவ-201212:25:41 IST Report Abuse
Sankar Je வாழ்த்துக்கள்..... அவர்களுடைய மொபைல் என்னையும் தெரியபடுத்தினால் மற்றவர்களுக்கும் பயன் அடைவார்கள்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Krishnamoorthy Caa - madruai,இந்தியா
27-நவ-201212:09:31 IST Report Abuse
Krishnamoorthy Caa தாங்கமுடியல.நீங்க விமர்சனம் பண்ணி, வாழ்த்துனது போதும்.நீங்க எத்தன மரம் நட்டு இருக்கேங்க? ஒரு மரத்துக்கவது தண்ணி ஊத்தி இருக்கீங்களா? இல்ல மரம் நட்டு பாதுகாத்து வர்றவங்களுக்கு ஒரு செடி வாங்கி கொடுதிருகேன்களா? முதல்ல அத பண்ணிட்டு வாங்க. அப்புறமா பேசுங்க.என்ன நீங்க கேக்கலாம்.இது எல்லாம் நான் பண்றன்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
pokisham - chennai,இந்தியா
26-நவ-201202:20:30 IST Report Abuse
pokisham வளருங்கள் இன்னும் வளருங்கள் வாழ்த்துக்கள்
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
Cancel
Srithar venkatesh - thoothukudi  ( Posted via: Dinamalar Android App )
26-நவ-201200:50:32 IST Report Abuse
Srithar venkatesh வாழ்த்துக்கள் நண்பர்களே
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
Manohar - Trichy,இந்தியா
25-நவ-201215:38:57 IST Report Abuse
Manohar செப்பறை வலபூமி பசுமை உலகம் அமைப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி. இந்த விதையை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மனதிலும் விதையுங்கள்.
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
Cancel
Boomi - Mumbai,இந்தியா
25-நவ-201213:55:31 IST Report Abuse
Boomi நல்ல முயற்ச்சி மற்றும் பாலாமடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், முகம்மதுகனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். எதுவாக இருந்தாலும் அரசிடம் இருந்து ஏன் மானியம் அல்லது இலவசம் என்று எதிர்பார்க்கிறீர்கள். தன்னால் முடிந்ததை உழைத்து செய்யலாமே. பொதுநலம் என்றால் நிச்சயம் எல்லோரும் உதவுவார்கள். அரசை எதிர்பார்க்காதீர்கள். இலவசம் இலவசம் என்று நாடே குட்டிச்சுவராகி நம்நாட்டு அரசியல்வாதிகள் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். இன்றோ கரண்ட் கட், விலைவாசி உயர்வு, தண்ணீர் பஞ்சம், தொழிற்சாலைகளின் ஆக்கிரமிப்பு என்று அனைத்து வகைகளிலும் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கமே. இலவச மின்சாரத்தை அனுபவிப்பது ஏழைகளா?? இலவச ரயில் / பஸ் / விமான பாஸ்களை அனுபவிப்பது ஏழைகளா? சொகுசு வாழ்க்கை, அரசை ஏமாற்றுவது ஏழைகளா? இப்படி எல்லாமே எமாற்றுபேர்வளிகளின் கையில் உள்ளதால் இலவசம் / மானியம் என்று எதையும் அரசிடமிருந்து எதிர்பார்க்காமல் அரசு நாட்டிக்கு நல்லதை செய்ய தூண்டவேண்டும். அதற்க்கு நாம் முதலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். படித்தவனை, பண்புள்ளவனை, தன்மானமுள்ளவனை, தன்னம்பிக்கை உள்ளவனை, இந்திய அரசியல்சட்டம் கூறும் ஒருவனை அரசியல்வாதியாக தேர்ந்தெடுப்போம். இலவசம் கொடுக்க வருபவனை ஓட ஓட விரட்டி அடிப்போம். நாடு தானாக முன்னேறும்.
Rate this:
3 members
0 members
36 members
Share this comment
Cancel
Prabu.KTK - Coimbatore,இந்தியா
25-நவ-201212:42:52 IST Report Abuse
Prabu.KTK இங்கே இந்த முயற்சியை பாராட்டாமல், எதிர்ப்பவர்களுக்கு இது புதிய முறையா அல்லது பழைய்ய முறையா என்பது வல்ல பிரச்சினை நீங்களும் நானும் செய்யாததை, செய்ய நேரம் இல்லாததை, அவர்கள் செய்து சாதித்து காண்பித்துள்ளனர் மனம் திறந்து பாராட்டுங்கள் ஜெய் ஹிந்த்
Rate this:
1 members
0 members
33 members
Share this comment
Selva Kumar - Bangalore,இந்தியா
26-நவ-201209:31:35 IST Report Abuse
Selva KumarWell Said.........
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
Vadivel Gvl - johur ,மலேஷியா
25-நவ-201212:10:08 IST Report Abuse
Vadivel Gvl நமது தாய் நாட்டை பசுமை ஆக்க துடிக்கும் இளைஞர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ...இந்த தன்னார்வ தொண்டு அமைப்புக்கு மாவட்டம் நிர்வாகம் போதிய வசதி செய்து கொடுத்தால் ... வெகு விரைவில் நாம் பசுமையை , நம் தேசத்திலும் எதிர் பார்க்கலாம் .... இவன். க. வடிவேல். சின்னதச்சூர். விழுப்புரம் .மாவட்டம் .....
Rate this:
1 members
0 members
22 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.