DISTRICT NEWS | வ.உ.சி., சிலைக்கு முன் பஸ்ஸ்டாப் : கடும் எதிர்ப்பால் வேலை நிறுத்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி., சிலைக்கு முன் பஸ்ஸ்டாப் : கடும் எதிர்ப்பால் வேலை நிறுத்தம்

Added : நவ 25, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருச்சி: வ.உ.சி., சிலைக்கு முன் பஸ்ஸ்டாப் அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், பஸ்ஸ்டாப் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.திருச்சி கண்டோண்மெண்ட் நீதிமன்ற வளாகம் எதிரே, மாநகராட்சிக்கு சொந்தமான மேடை விநாயகர் பின்புறம் உள்ள முக்கோணப்பகுதி, சுதந்திர போராட்டத்தியாகி வ.உ.சிதம்பரனார் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க தமிழக அரசு அனுமதியளித்தது.திருச்சி மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் வைத்து, உரிய ஒப்புதல் பெற்று, வ.உ.சி., சிலை அமைக்கும் பணிகள் துவங்கின. விரைவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, வ.உ.சி., சிலையை திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வ.உ.சி., சிலையில் அமைந்துள்ள முகப்பில் பஸ்ஸ்டாப் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு, திருச்சி, டில்லி வ.உ.சி., சிலை அமைப்புக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று காலை வேலை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.இதுகுறித்து திருச்சி, டில்லி வ.உ.சி., சிலை அமைப்புக்குழு பொருளாளர் கோபி கூறியபோது, ""வ.உ.சி., சிலை அமைவிடத்தில் தேவையில்லாமல் சிலையை மறைக்குமளவுக்கு ஒரு பஸ்ஸ்டாப் அமைக்கின்றனர். இந்த பஸ்ஸ்டாப்பினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. பஸ்கள் திரும்பும் இடத்தில் பஸ்ஸ்டாப் அமைக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படும். எனவே, மாநகராட்சி நிர்வாகம், இப்பகுதியில் வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்துவோம்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை