லாலாப்பேட்டை:
லாலாப்பேட்டை பகுதியில் மல்லிகைப் பூ விலை உயர்ந்ததால், பூ வியாபாரம் மந்த
நிலையில் இருப்பதாக, வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
கரூர்-
திருச்சி மெயின்ரோடு, லாலாப்பேட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மல்லிகை,
சில்லரை விற்பனையாக விற்கப்படுகிறது. இங்கு விற்பனையாகும் பூக்கள்,
லாலாப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான, தாளியப்பட்டி,
புதுப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து, சாகுபடி செய்யப்படுகிறது.அவற்றை,
தாளியம்பட்டியை சேர்ந்த பூ வியாபாரிகள், மொத்தமாக கொள்முதல் செய்து,
லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை பகுதியில் விற்பனை செய்கின்றனர்.
தற்போது, சபரிமலை சீஸன் துவங்கியதால், பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
ஒரு
கிலோ மல்லிகைப் பூ, 500 முதல், 600 ரூபாய் வரையும், சில்லரை விற்பனையில்
விற்கப்படும் மல்லிகை பூ, ஒரு பாக்கெட், 10 முதல், 30 ரூபாய் வரையிலும்
விற்கப்படுகிறது. "பனிப்பொழிவின் காரணமாக மல்லிகை பூவின் மகசூல்
குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது எனவும், விலை உயர்ந்ததால், பூக்களின்
விற்பனை மந்தகதியில் இருக்கிறது'என, வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.