ramjethmalani complaint | சி.பி.ஐ., இயக்குனர் நியமனம்: பா.ஜ., தலைவர்கள் மீது ராம்ஜெத்மலானி பாய்ச்சல்| Dinamalar

சி.பி.ஐ., இயக்குனர் நியமனம்: பா.ஜ., தலைவர்கள் மீது ராம்ஜெத்மலானி பாய்ச்சல்

Updated : நவ 25, 2012 | Added : நவ 25, 2012 | கருத்துகள் (3)
Advertisement
சி.பி.ஐ., இயக்குனர் நியமனம்: பா.ஜ., தலைவர்கள் மீது ராம்ஜெத்மலானி பாய்ச்சல்

புதுடில்லி:"" சி.பி.ஐ., இயக்குனர் நியமனத்தை எதிர்த்து, பா.ஜ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, முறையற்றது. சில விரும்பத்தகாத நபர்களின் தூண்டுதலால், பா.ஜ., தலைவர்கள், இவ்வாறு செயல்பட்டுள்ளனர்,''என, பிரபல சட்ட நிபுணரும், பா.ஜ., ராஜ்யசபா எம்.பி.,யுமான, ராம் ஜெத்மலானி புகார் கூறியுள்ளார்.சி.பி.ஐ., இணை இயக்குனராக, ரஞ்சித் சின்கா நியமிக்கப்பட்டதற்கு, பா.ஜ., சார்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி கொண்ட குழு தான், சி.பி.ஐ., இணை இயக்குனரை நியமிக்க வேண்டும் என, லோக்பால் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், அரசு, தன்னிச்சையாக, சி.பி.ஐ., இயக்குனரை நியமிக்க கூடாது' என, பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதை வலியுறுத்தி, பா.ஜ., மூத்த தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில், பா.ஜ., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவரும், சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானி, நேற்று கூறியதாவது:

ரஞ்சித் சின்காவை, சி.பி.ஐ., இயக்குனராக நியமித்தது, சரியான முடிவு; இதற்காக, மத்திய அரசை பாராட்டுகிறேன். சின்கா நியமனத்துக்கு, பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக, வெளியான தகவல், எனக்கு கவலை அளிக்கிறது.விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளாமல், பா.ஜ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது. சின்கா, சி.பி.ஐ., இயக்குனராக வருவதை விரும்பாத யாரோ தான், இந்த விஷயத்தில், பா.ஜ.,வை தூண்டி விட்டுள்ளனர்.

ரஞ்சித் சின்காவை பிடிக்காத, அவரின் பதவிக்கு வர ஆசைப்படும், அந்த நபருக்கு, அனைத்து தரப்பிலும், நண்பர்கள் உள்ளனர். அந்த நபர், சி.பி.ஐ., இயக்குனரானால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது, பா.ஜ., தலைவர்களுக்கு தெரியவில்லை. இது தொடர்பான முக்கிய ஆவணங்களை, பா.ஜ., தலைவர் கட்காரிக்கு அனுப்பி உள்ளேன்.எனவே, இந்த விவகாரத்தில், பா..ஜ.,வைச் சேர்ந்த யாரும், உடனடியாக, வேறு விமர்சனங்கள் எதையும் வைக்க வேண்டாம் என, கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில், உண்மை என்ன என்பதும், என்ன நடக்கப் போகிறது என்பதும், எனக்கு நன்றாக தெரியும்.இவ்வாறு ராம் ஜெத்மலானி கூறினார்.

"சி.பி.ஐ., இயக்குனர் பதவிக்கு, ரஞ்சித் சின்காவின் பெயரை பரிசீலிக்க கூடாது' என, டில்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார், மத்திய நிர்வாக தீர்ப்பாயமான, சி.ஏ.டி.,யில், மனு அளித்திருந்தார். ரஞ்சித் சின்கா, சி.பி.ஐ., இயக்குனராக நியமிக்கப்பட்டதால், தன் மனுவை, அவர் வாபஸ் பெற்றார். நீரஜ்குமாரை பற்றிய விஷயத்தை தான், தற்போது, ராம்ஜெத்மலானி, மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayabalan - chennai ,இந்தியா
26-நவ-201205:34:09 IST Report Abuse
jayabalan பின்னணியில்லாமல் முன்னணித் தலைவர்கள், அதிலும் பிஜேபி தலைவர்கள் பேசுவார்களா? அவர்கள் சுப்ரீம் கோர்ட் வக்கில்களாயிற்றே சும்மா பேசமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
25-நவ-201212:52:36 IST Report Abuse
MJA Mayuram பாஜாகாவில் அவ்வப்போது கட்சிகுளிருந்துகொண்டே சிலர் குரல்கொடுப்பார்கள் அதற்க்கு காரணம் அப்பத்தான் அப்படியொரு கட்சியிருக்கிறது என்று மக்களுக்கு தெரியப்படுத்தத்தான்
Rate this:
Share this comment
Cancel
sombu - chennai,இந்தியா
25-நவ-201211:16:47 IST Report Abuse
sombu அய்யோ, ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவா, ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை