கரூர்:
கரூர் பஸ்ஸ்டாண்டில் இருந்து நாள்தோறும், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்
பஸ்கள், பல்வேறு மாவட்டத்துக்கு சென்று வருகின்றன. போக்குவரத்துத்துறை
அமைச்சராக செந்தில்பாலாஜி பொறுப்பேற்றதால், கரூர் போக்குவரது புத்துயிர்
பெரும் என நம்பினர். ஆனால், இன்றளவும், கரூர் பஸ் ஸ்டாண்டோ,
போக்குவரத்திலோ, எந்த முன்னேற்றமும் இல்லை.
போக்குவரத்து துறை அமைச்சர்
மாவட்டத்திலேயே, பிரேக் பிடிக்காமலும், பழுதான பஸ்களையும் இயக்கும் அவல
நிலையில் தான், கரூர் அரசு பஸ் டிரைவர்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று
காலை, 10 மணிக்கு, கரூர் பஸ்ஸ்டாண்டில் இருந்து, 30க்கும் மேற்பட்ட
பயணிகளோடு, திருச்செங்கோட்டுக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்ஸ்டாண்டில்
இருந்து வெளியேறிய, சில விநாடிகளில், பிரேக்கின்றி டிரைவரின் கட்டுப்பாட்டை
இழந்த பஸ், எதிரே இருந்த குறுகிய பஜார் தெருவுக்குள் புகுந்து, டெலிஃபோன்
கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில்
பொதுமக்கள் யாரும் இல்லாததால், உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து
அப்பகுதி மக்கள் கூறுகையில், ""கரூர் பஸ்ஸ்டாண்டில் இருந்து வெளியேறி அரசு
பஸ், பிரேக்கின்றி பஜார் தெருவுக்குள் புகுந்து, விபத்துக்குள்ளானது.
நல்லவேளையாக, எந்த காயமுமின்றி பயணிகளும் உயிர் தப்பினர். போக்குவரத்து
துறை அமைச்சர் மாவட்டத்தில் உள்ள, பஸ்களே, இப்படி உள்ளது,''
என்றனர்.மேலும், இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க
வேண்டுமெனவும், பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.