தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா அலுவலகம் ரோட்டைச் சேர்ந்தவர் ஆன்ட்ரூஸ் மகள் ரோஸி, 19. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் ஆர்த்தியும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் டிடி., எடுக்க சென்றனர். ஆர்த்தி டிடி எடுக்க வங்கிக்குள் சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த போது, வெளியே நின்றிருந்த ரோஸியை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஆர்த்தி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீஸில் புகார் செய்தார். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீஸார் விசாரிகின்றனர். தஞ்சாவூர் அடுத்த வல்லம் அண்ணாநகர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்அகமது, 40. இவரது மகள் ஜானா நூர்ஜஹான் பஷிரியா, 18. வீட்டின் அருகேயுள்ள கடையில் பால் வாங்க சென்ற ஜானா நூர்ஜஹான், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தந்தை சாகுல்அகமது வல்லம் போலீஸில் புகார் செய்தார். வல்லம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, நூர்ஜஹானை தேடி வருகின்றனர்.