Advertisement
"கேம்பஸ் இன்டர்வியூ' என்ற பெயரில் பல லட்சம் மோசடி:தனியார் கல்லூரி முதல்வர் உட்பட மூவர் சஸ்பெண்ட்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 நவ
2012
00:28

ஊட்டி;தனியார் பொறியியல் கல்லூரியில், "கேம்பஸ் இன்டர்வியூ' என்ற பெயரில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்த, கல்லூரி முதல்வர் உட்பட, மூவர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், கேத்தியில், சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லூரி உள்ளது; கோவை தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.,) கட்டுப்பாட்டில் உள்ள இக்கல்லூரியில், 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.


இக்கல்லூரியின் முதல்வர் உட்பட, இரண்டு நிர்வாகிகளை, சி.எஸ்.ஐ., நிர்வாகம், நேற்று, திடீரென "சஸ்பெண்ட்' செய்தது.இதுகுறித்து, தென்னிந்திய திருச்சபையின் நிர்வாக அதிகாரி போஸ் எபினேசர் கூறியதாவது:கல்லூரி முதல்வர் ஜெயபாலன், 65, முறைகேடுகளில் ஈடுபட்டார்; பணி ஓய்வு பெறும்படி, பல முறை கூறியும் ஏற்கவில்லை. "கேம்பஸ் இன்டர்வியூ' மூலம் வேலை வழங்கப்படும் எனக்கூறி, ஒவ்வொரு மாணவரிடமும், 3,000 - 4,000 ரூபாயை, கல்லூரி நிர்வாகம் கேட்டதாக வசூலித்துள்ளார்.சில நாட்களுக்கு முன், "ஐ.பி.எம்.,' என்ற கம்பெனி பெயரில், டில்லியை அடுத்த, கூர்கான் பகுதியில் இருந்து சிலரை வரவழைத்து, முதல்வர் ஜெயபாலன், "கேம்பஸ் இன்டர்வியூ' நடத்தினார். இதில், 12 பேருக்கு பணி நியமன, ஆணை வழங்கப்பட்டது. ஆனால், அவை போலியானது என, தெரிய வந்தது.


இந்த மோசடியால் மாணவ, மாணவியரிடம் இருந்து வசூலிக்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை, வீணடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுக்கு கல்லூரி முதல்வர், நிர்வாக அதிகாரி உட்பட, சிலர் உடந்தையாக இருந்துள்ளனர்.இது தொடர்பாக, கல்லூரி அலுவலர்கள், விரிவுரையாளர்கள் சிலர், ஆதாரத்துடன் சி.எஸ்.ஐ., நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.அதன் அடிப்படையில், கல்லூரி முதல்வர் ஜெயபாலன், கல்லூரி நியமன அதிகாரி முகிலன், கல்லூரி நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் ஆகியோர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக, கல்லூரிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில், ஊட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பாஸ்கரன், ஜோஸ் மற்றும் பாபு ஆகிய மூவரை, கேத்தி, போலீசார் கைது செய்தனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.