திருத்துறைப்பூண்டி: வட்டிக்கு கடன் வாங்கி, சாகுபடி செய்த சம்பா பயிரை காப்பாற்ற முடியாத கவலையில், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா கூவெட்டான்குடியை சேர்ந்தவர் ராஜாங்கம், 35. இவருக்கு சொந்தமான, ஆறு ஏக்கர் நிலத்தில், சம்பா நெற்பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் விஷம் குடித்து, ராஜாங்கம் இறந்து கிடந்தார்.
அக்கம்பக்கத்தினர், வலிவலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார், விவசாயி உடலை கைப்பற்றி, திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் வராததாலும், போதுமான மழை பெய்யாததாலும் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதித்துள்ளது. அதனால், "வட்டிக்கு கடன் வாங்கி சாகுபடி செய்த நெற்பயிரை காப்பாற்ற முடியவில்லையே' என்ற கவலையில் ராஜாங்கம் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்த காவிரி விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் சேரன், பொதுச்செயலாளர் தனபாலன், நமது நெல்லை காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்பட சுற்றுவட்டார விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர், ராஜாங்கம் வீட்டின் முன் திரண்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.