ம.தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி வைக்கப்பட்ட, அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலர், நாஞ்சில் சம்பத், கால் தவறி கீழே விழுந்தார்; அவரது காலில், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. "சிகிச்சை முடிந்ததும், தி.மு.க.,வில் இணைகிறார்' என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத்துக்கு இடையே, திடீரென கருத்து வேறுபாடு உருவானது. கட்சியிலிருந்து, நாஞ்சில் சம்பத் ஓரங்கட்டப்பட்டார். சமீபகாலமாக வைகோவும், நாஞ்சில் சம்பத்தும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை; இருவரும் சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம், வைகோ அதைத் தவிர்த்தார். "ம.தி.மு.க., பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு, நாஞ்சில் சம்பத்தை அழைக்க வேண்டாம்' என, அக்கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அப்துல்லா என்ற பெரியார் தாசனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நாஞ்சில் சம்பத், தன் சொந்த ஊரில் நடந்து செல்லும் போது, திடீரென கால் தவறி கீழே விழுந்துள்ளார்; அதில் அவரது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வீட்டில் தங்கிய வண்ணம், காலுக்கு சிகிச்சை எடுக்கிறார். கால் எலும்பு முறிவு குணமானதும், தி.மு.க., வில் சேர முடிவெடுத்துள்ளார்.
அவருடன் திருநெல்வேலி மாவட்ட ம.தி.மு.க., நிர்வாகியாக பணியாற்றி, பின் அக்கட்சியலிருந்து வெளியேறி, ஆளுங்கட்சியில் இணைந்த பிரமுகர் ஒருவரும், தென் மாவட்டத்தை சேர்ந்த, ம.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவரும், தி.மு.க.,வில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க., பிரமுகர்களை இழுக்கும் பணியில், ம.தி.மு.க.,வில் இருந்து, தி.மு.க.,வுக்குத் தாவிய, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.
தென் சென்னை மாவட்ட ம.தி.மு.க., அவைத்தலைவர் மலையாளன், மாவட்ட பிரதிநிதி ஜீவா ஆகிய இருவரும், தி.மு.க., வில் சேருவதற்கு முடிவு செய்து, நேற்று அறிவாலயத்திற்கு பூங்கொத்துகளுடன் வந்தனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில், சேருவதற்கு அவர்கள் தயாராக இருந்தனர்.
அப்போது, "அவர்கள் ஸ்டாலின் முன்னிலையில் இணையட்டும்' என, கருணாநிதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றத்துடன் அவர்கள், புறப்பட்டுச் சென்றனர். நாஞ்சில் சம்பத் இணையும் போது, அவர்கள், கருணாநிதி முன் இணைவரா அல்லது ஸ்டாலின் முன்னிலையில் தனியாக இணைவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- நமது நிருபர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நாஞ்சில் சம்பத் அவர்களே.. நான் சாகும் வரை வைகோ ஒருவரையே தலைவன் என முழங்கி வந்த உங்களுக்கு இன்று எந்த தலைவனாக தோன்றுகிறது. உங்களுக்கும் வைகோ விற்கும் என்ன பிரச்சினை. தொண்டர்களுக்கு சொல்லுங்கள் அவர்களின் கருத்தை இணையத்தில் கேளுங்கள். அதன் பின்னர் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என தீர்மானம் எடுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் புலி புல்லை தின்னாது என்ற கொள்கையுடன் செல்லுங்கள். வைகோ விடம் பேசுங்கள் பேசி தீர்க்க முடியாத எந்த ஒன்றும் இல்லை. நீங்கள் இறங்கி செல்லுங்கள் அவரை தொடர்பு கொண்டு மதிமுக விலேயே இருப்பது உங்களுக்கும் மதிமுக விற்கும் உலக தமிழர்களுக்கும் நல்லது. தயவு செய்து துரோகிகளுடன் மட்டும் சென்று சேர்ந்து விடாதீர்கள் அது உங்களின் மீது மரியாதை வைத்துள்ள என் போன்ற நடுநிலையாளர்களுக்கு வெறுப்பை உண்டு பண்ணிவிடும்.
நண்பர்களே, நாஞ்சில் சம்பத் மிகவும் இலக்கிய நயத்துடன் பேசுவதில் வல்லவர். பேசும் போது கையை நீட்டி மடக்கி இவர் பேசும் ஸ்டைலே தனி, மாடுலேசன்லேயும் எல்லோரையும் கவரக்கூடியவர். ம.தி.மு.க. வில் இவர் இருந்தபோது கூட, கட்சி மீது எனக்கு பிடிப்பு இல்லை என்றாலும், நெஞ்சில் சம்பத் பேச்சை ஆர்வமாக ரசிப்பேன். இவர் இப்போது தி.மு.க. வில் சேர்வது சரியாக வராது என்று தோன்றுகிறது. ம.தி.மு.க.வில் செல்வாக்குடன் இருந்தவர் ஏன் இப்படி ஒரு மோசமான, குடும்பமே பெரிது என நினைக்கும் கட்சியில் சேரத்துடிக்கிறார் என்று புரியவில்லை. தி.மு.க. வை இவரை விட வேறு யாரும் கேவலமாக திட்டியிருக்க முடியாது. தி.மு.க.வில் கருணாநிதியின் குணமே, தன்னை இவ்வளவு நாள் திட்டிக்கொண்டிருதவர், தன் கட்சியில் வந்து சேர்ந்தவுடன், தமிழகமெங்கும் இவரை அழைத்து கூட்டம் போடசொல்லுவார், அக்கூட்டத்தில் எல்லாம் தன்னை இந்திரன், சந்திரன் , என்று புகழ்ந்து பேசவைப்பார். வைக்கோவை திட்ட வைப்பார். சில மாதங்களுக்கு பிறகு நாஞ்சில் சம்பத்தை ,தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இதற்க்கு முன் கட்சியில் சேர்ந்தவர்களுக்கெல்லாம் நேர்ந்த கதி இது தான்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.