திருச்சி:
""திருச்சியில் வரி ஏய்ப்பு செய்யும் பிரபல நகை, ஜவுளிக்கடைகள் மீது உரிய
நடவடிக்கை எடுத்து, வரி வசூலை தீவிரப்படுத்த வேண்டும்,'' என அமைச்சர் ரமணா
பேசினார்.
திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை,
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய, எட்டு மாவட்டங்கள் உள்ளடக்கிய,
மண்டல அளவிலான வணிகவரித்துறை அலுவலர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்
கூட்டம், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ரமணா தலைமை வகித்து பேசியதாவது: திருச்சியில்
பெரும்பாலான நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் வரி ஏய்ப்பு செய்து வருகின்றன.
அவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மண்டலத்தில்
வரிவசூல் குறைவாக உள்ளது. அதை துரிதப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில்
நடப்பாண்டு அக்டோபர் மாதம் வரை, 27 ஆயிரத்து, 148 கோடி ரூபாய் வரி
வசூலானது. கடந்த ஆண்டு இதே காலத்தில், 21 ஆயிரத்து 739 கோடி ரூபாய்
வசூலானது. இதை ஒப்பிடும்போது, வரிவசூல், 25 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அனைவரும் அக்கறையுடன் பணியாற்றி, வரும் காலத்தில் அதிக வரிவசூல் செய்ய
வேண்டும்.
தணிக்கைச் சாவடிகளின் மேம்பாட்டுக்காக, 1.75 கோடி ரூபாய்
ஒதுக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி, மேலவாஞ்சூர் ஆகிய இடத்தில்
தணிக்கைச்சாவடிகள் கட்டுவதுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்த
வேண்டும்.
வாகன தணிக்கை பணியை செம்மையாக செய்து, வெளி மாநிலங்களுக்கு
செல்லும் பொருட்கள் மீதான வரி ஏய்ப்பை தடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் மூலம்
மாதந்திர நமூனாக்கள் தாக்கல் செய்து, வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை
அதிகரித்து, அரசுக்கு உரிய நேரத்தில் வரியை செலுத்த வியாபாரிகளுக்கு,
ஆலோசனைகளை வழங்கி, வெளிமாநில விற்பனை மற்றும் சரக்கு மாற்றத்துக்கு
தேவைப்படும், "சி', எஃப், படிவங்களை நவ., 1ம் தேதி முதல் இணையதளத்தில்
பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதை வணிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
வரி
ஏய்ப்பை தடுக்கும் பணி, வரி செலுத்துவோரின் முறைப்படுத்தும் பணியில்,
செயலாக்கப் பிரிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து, வரி நிர்வாகத்தை
செம்மைப்படுத்தவும், நிர்ணயித்துள்ள இலக்குகளை அடையவும், துறை அலுவலர்கள்
தங்களது முழுத்திறமையும் வெளிப்படுத்தி திறம்பட செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில்,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் சுனில்பாலிவால், வணிகவரித்துறை
கமிஷனர் மணிவாசன், கலெக்டர் ஜெயஸ்ரீ, வணிகவரி கூடுதல் கமிஷனர்கள்
ராஜாராமன், முருகையா உள்பட பலர் பங்கேற்றனர்.
திருச்சியில், 2.5 கோடி
ரூபாய் மதிப்பீட்டில் நடக்கும் வணிகவரிப் பணியாளர் பயிற்சி நிலையத்தின்
கட்டிடப் பணிகள், 5 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்ரீரங்கம், லால்குடி,
புதுக்கோட்டை, நன்னிலம் ஆகிய இடத்தில் நடக்கும், வணிகவரித்துறை அலுவலக
கட்டிடப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.