E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ரகளை செய்த நடிகை புவனேஸ்வரி ஆம்பூரில் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

27 நவ
2012
22:11

வேலூர்: சென்னை தியேட்டர் ஒன்றில், தகராறில் ஈடுபட்ட, சினிமா நடிகை புவனேஸ்வரியை, ஆம்பூர் அருகே போலீசார் கைது செய்தனர். சென்னை சினிமா தியேட்டர் ஒன்றில், கார் நிறுத்தும் போது, குமார் என்ற டிரைவருக்கும்; நடிகை புவனேஸ்வரி மற்றும் அவருடன் வந்த வக்கீல்கள் இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது. இதில், கார் டிரைவர் குமார், அவர் குடும்பத்தினர், தியேட்டர் காவலாளி மற்றும் விசாரணை நடத்திய போலீசார், சரமாரியாக தாக்கப்பட்டனர்.

சென்னை, நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து, தலைமறைவான நடிகை புவனேஸ்வரி மற்றும் அவருடன் இருந்த வக்கீல்களை தேடினர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே, போலீசார் நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த, "இனோவா' காரை, காலை, 10:00 மணிக்கு, பச்சகுப்பத்தில் மடக்கிப் பிடித்து, சோதனை செய்தனர்; காருக்குள் நடிகை புவனேஸ்வரி இருப்பது தெரிந்தது.
சந்தேகப்பட்ட போலீசார், கார் டிரைவரிடம், "காரில் இருப்பவர், புவனேஸ்வரி தானே?' என, கேட்டனர். அதற்கு, "நான் புவனேஸ்வரி இல்லை; பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர்' என, புவனேஸ்வரி பதிலளித்தார்.
ரோந்து போலீசார், காரை, ஆம்பூர் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது, காருக்குள் இருப்பது, நடிகை புவனேஸ்வரி என்பது தெரிந்தது. இதையடுத்து புவனேஸ்வரியை, போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை நீலாங்கரையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு தகவல் கொடுத்தனர். நீலாங்கரை போலீசார், வந்து அழைத்து செல்வதாக கூறினர். இதனால் புவனேஸ்வரியை, வேலூர் அடுத்த சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு, அழைத்து வந்தனர்.
அங்கு புவனேஸ்வரி, 30 நிமிடம் அமர்ந்திருந்தார். பகல், 12:30 மணிக்கு நீலாங்கரை போலீசாரிடம் புவனேஸ்வரி ஒப்படைக்கப்பட்டார். பின், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள மற்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

பிரியாணி கேட்ட புவனேஸ்வரி : ஆம்பூர் போலீசார், புவனேஸ்வரியை கைது செய்த போது, "நான் சாப்பிடவில்லை' என, அவர் கூறினார். இட்லி, தோசை வாங்கி தந்த போது, "எனக்கு, ஆம்பூர் பிரியாணி வேண்டும்' என கேட்டார். "இந்த நேரத்தில், பிரியாணி ரெடியாகாது' எனக் கூறிய போலீசார், இட்லி, தோசை கொடுத்துள்ளனர். புவனேஸ்வரி தோசை மட்டும் சாப்பிட்டார். நீலாங்கரை போலீசார் வரும் வரை, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனில் புவனேஸ்வரி காத்திருந்தார். அந்த நேரத்தில், பிரியாணி குறித்து, மீண்டும் பேச்சு எழுந்தது. சில போலீசார், ஆர்வமாக, "ஆம்பூர் பிரியாணிக்கு பதில், வேலூர் பிரியாணி நன்றாக இருக்கும்' என்று கூறி, வாங்கி கொடுத்துள்ளனர். அதை புவனேஸ்வரி, ருசித்து சாப்பிட்டார் என்று கூறப்பட்டது. நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், ஆம்பூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, அங்குள்ள போட்டோகிராபர்கள், நிருபர்கள் சென்றனர். படம் எடுக்க விடாமல், பல காரணங்களை கூறி, போலீசார் தடுத்து விட்டனர். பிறகு, சத்துவாச்சாரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து, ரகசியமாக, நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
04-டிச-201209:43:05 IST Report Abuse
பி.டி.முருகன்    கொலை, கொள்ளை ஆசாமி எல்லாம் சுதந்திரமாக நடமாடும் இந்த தாய்மண்ணில் இந்த பெண்ணுக்கு இந்த கதியா?
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-201217:23:12 IST Report Abuse
Yaro Oruvan ஒரு ரகளையே ரகளை செய்கிறது
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Sasi Kumar - Singapore,சிங்கப்பூர்
03-டிச-201216:48:17 IST Report Abuse
Sasi Kumar சட்டம் தன் கடமையை செய்யட்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Varatharajan - Oslo,நார்வே
01-டிச-201215:29:06 IST Report Abuse
Varatharajan தெருவுக்கு வந்தாலே சந்திக்கு என்று சொல்வார்கள் இந்த மாதிரி ஒருத்தி ச்சே அப்படி எல்லாம் சொல்லாதீங்கள் ஒரு வேலை படம் சூட்டிங்கா கூட இருந்து இருக்கும் இவளை போய் கைது அது இது என்று அதைவிட விசயம் வெளியே வராமல் உள்ளேயே நடத்தி கொண்டுருப்பவர்களை கோடி கோடி கணக்கில் சம்பாதிக்கும் முதலை பெண் இருக்கிறாள் அவளை எல்லாம் விட்டு விட்டு போலிஸ் இப்படியான ஒரு நடிகை, சந்திக்கு வந்தவள் கதையை பெருசா வெளி உலகத்திற்கு...........
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
01-டிச-201207:07:47 IST Report Abuse
Prabhakaran Shenoy ஜெயலட்சுமிக்கு பிறகு புவநேசரியா?
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Veera Pandian - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-201215:34:00 IST Report Abuse
Veera Pandian அவளை பிடுச்சு உள்ளே போடுங்க சார்
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Cancel
குருவி - Chennai,இந்தியா
29-நவ-201201:08:16 IST Report Abuse
 குருவி இல்ல தெரியாமதான் கேக்குறேன்.. புவனேஸ்வரி கைது, இந்தந்த இடத்தில, இந்தந்த நேரத்தில் பிடிபட்டார் அப்டின்னு மட்டும் போட்டா போதாதா? அவர் பிரியாணி கேட்டார், தோசை சாபிட்டார்... இதெல்லாம் தேவையா?
Rate this:
2 members
0 members
47 members
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
28-நவ-201221:46:42 IST Report Abuse
Natarajan Iyer கூத்தாடிகளுக்கு பிரியாணி போலீஸ் சும்மாவா வாங்கித்தரும்?
Rate this:
3 members
1 members
25 members
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
28-நவ-201219:29:56 IST Report Abuse
சாமி எலும்பு இல்லாத கரி சாப்பிட்டு பழகியவர் அதனால்தான் பிரியானி கேட்டு இருப்பார்.
Rate this:
2 members
0 members
23 members
Share this comment
Cancel
Mani Ramalingam - Chennai,இந்தியா
28-நவ-201218:26:38 IST Report Abuse
Mani Ramalingam பொது இடத்தில எப்படி நடக்கவேண்டும் என்று கூடவா இந்த பெண்மணிக்கு தெரிய வில்லை ???
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
arivu - Ras al khaimah,இந்தியா
29-நவ-201211:45:47 IST Report Abuse
arivuபெண்மணியா? புவனேஸ்வரியா? நீங்க என்ன சொல்றீங்க? ....
Rate this:
0 members
0 members
18 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.