Advertisement
கைப்பிடி மண்ணும் மலையாக மாறியது தீபத்திருவிழாவில் உணர்த்திய மக்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 27,2012,23:33 IST

மேலூர்: மேலூர் அருகே கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, விவசாயம் செழிக்க இறைவனை வேண்டி, ஒவ்வொருவரும் கைப்பிடி மண்ணை எடுத்து வீசியதில், மண் மலை உருவானது. மேலூர் நரசிங்கம்பட்டியில் பெருமாள் மலை உள்ளது. இங்குள்ள முன்னமலை ஆண்டிச்சாமி கோயிலில் திருக்கார்த்திகை வழிபாடு நடந்தது. அருகிலுள்ள ஓடையிலிருந்து கைகளால் எடுத்து வரப்பட்ட மணலை பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வீசி வழிபாடு செய்தனர். மணலை வீசினால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை. வீசப்பட்ட கைப்பிடி மண், மலையாக மாறியது. இரவு பெருமாள் மலை மீது தீபம் ஏற்றப்பட்டது. இவ்விழாவை காண ஏராளமானோர் வந்திருந்தனர்.மேலவளவு அருகில் கருப்புக்கோயிலில் கற்களை வீசி வழிபடுவது வழக்கம். மலை மீது ஏறும் பக்தர்கள் அங்கிருந்து கீழ்நோக்கி கற்களை எறிவர். செங்குத்தான மலை மீது ஏறி ச தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். ஆட்டுக்குளம் பெருமாள் மலையில் நேற்று பகல் முழுவதும் வழிபாடு நடத்தப்பட்டது. இரவில் பெரிய கல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. உலகநாதபுரத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (4)
senthil - chennai,இந்தியா
29-நவ-201210:28:43 IST Report Abuse
senthil ஹிந்துக்கள் எல்லோரும் நலமுடன் வாழ அண்ணாமலியர் அருள்புரிவார்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
29-நவ-201207:51:11 IST Report Abuse
மதுரை விருமாண்டி இப்படித் தான் வீட்டில் இருக்கும் குப்பையை வெளியே கொட்டி, ஊரையே மணக்க விடுகிறார்கள்... மக்கள் பலம்.. நல்ல விஷயத்தில் ஒன்று சேர்ந்தால் பரவாயில்லை...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
R.Saminathan - mumbai,இந்தியா
28-நவ-201209:55:41 IST Report Abuse
R.Saminathan ஆண்டவனை அனைவரும் நம்பியுள்ளனர்,மக்கள் மனம் போலே ஆகயதாயி மனம் வைத்து தமிழர்களின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும்.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Naaradhar Naaradhar - Southington,யூ.எஸ்.ஏ
28-நவ-201202:38:44 IST Report Abuse
Naaradhar Naaradhar நாடு சுபிக்ஷமாக இருக்க அந்த இறைவன் அருள் புரியட்டும்
Rate this:
1 members
0 members
12 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.