பதிவு செய்த நாள் :
கருத்துகள் (14)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

காற்றாலைகள் உற்பத்தி செய்து வழங்கிய மின்சாரத்திற்கு, 3,500 கோடி ரூபாயை, தமிழக அரசு பாக்கி வைத்துள்ளதால், மின் உற்பத்தியில் ஈடுபட காற்றாலை உரிமையாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.தமிழகத்தில், உடுமலைப் பேட்டை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில், அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மூலம், 7,134 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். காற்றாலை மின் உற்பத்தியில், 99 சதவீதம் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், காற்றாலை மின் உற்பத்தி அதிகபட்சமாக இருக்கும்.இந்த காலங்களில், நாளொன்றுக்கு, 3,000 முதல், 3,500 மெகாவாட் வரை, மின்சாரம் உற்பத்தியாகிறது.
இந்தாண்டு அதிகபட்சமாக ஒரே நாளில், 4,059 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. மற்ற மாதங்களில், 1,000 மெகாவாட்டிற்கும் குறைவாகவே, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, உற்பத்தியாகும் மின்சாரம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றின், துணை மின் நிலையங்கள் மூலம் பயன்பாட்டுக்கு வருகிறது.தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, ஒரு யூனிட், 3.39 ரூபாய்க்கு மின்வாரியம் வாங்குகிறது. காற்றாலை மின்சாரத்துக்கு, மின்வாரியம் வழங்க வேண்டிய தொகை, காலம் தாழ்த்தி வழங்கப்படுவதாக, காற்றாலை

உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மின்வாரியம் முறையாக மின்கொள்முதல் விலையை வழங்காததால், காற்றாலை உரிமையாளர்கள், நஷ்டத்திற்கு உள்ளாவதோடு, தொடர் மின் உற்பத்தியையும் கைவிட்டுள்ளனர்.இதுகுறித்து, காற்றாலை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ஒரு காற்றாலையை நிறுவ, 1.25 கோடி ரூபாய் முதல், 13 கோடி ரூபாய் வரை செலவாகும். அதிக முதலீடு செய்து, அரசுக்கு, மின்சாரத்தை வழங்குகிறோம். குறைவான தொகைக்கு மின்சாரத்தை வாங்கும் வாரியம், அதை விற்று, அதிக லாபத்தை ஈட்டுகிறது.
ஆனால், உரிமையாளர்களுக்கான தொகையை சரியாக வழங்குவதில்லை.காற்று வீசும் காலம் முடிந்தாலும், மிதமாக அடிக்கும் காற்றை வைத்தே, மின்சாரம் தயாரிக்கும், நவீன காற்றாலைகள், சந்தைக்கு வந்துள்ளன. காற்றாலைகள் நிறுவுவதில் ஏற்படும் சிக்கல், அதிகாரிகளின் கெடுபிடியால், புதிய தொழில் நுட்பத்தை புகுத்துவதில் ஆர்வமில்லை. நவீன காற்றாலைகளை நிறுவினால், மின் பிரச்னையை ஓரளவு சமாளிக்கும் அளவுக்கு, மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.
நிதியில்லை
வாரியம் அளிக்க வேண்டிய நிலுவை தொகை குறித்து, மின்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

Advertisement

மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவை, 12,000 மெகாவாட்; மின் உற்பத்தி குறைவால், 4,000 மெகாவாட் அளவிற்கு பற்றாக்குறை நிலவுகிறது. இந்தாண்டு, ஆறு மாதத்தில் மட்டும், 9,600 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து, மின் வாரியத்திற்கு, காற்றாலைகள் வழங்கி உள்ளன.இவர்கள் வழங்கிய, 9,600 மில்லியன் யூனிட் மின்சாரத்திற்கு, 3,500 கோடி ரூபாய் வரை, வாரியம் வழங்கவில்லை. ஏற்கனவே, முந்தைய, 10 மாதங்கள் உற்பத்தி செய்து வழங்கிய மின்சாரத்திற்கும், பல ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி உள்ளது.இத்தொகையை அளிப்பதற்கு போதிய நிதி வசதி இல்லை. இதுகுறித்து, அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.

தமிழகத்தில், கடந்த ஆண்டு, 1,300 மெகாவாட் அளவிற்கு மின் திறன் கொண்ட, காற்றாலைகள் நிறுவப்பட்டன. ஆனால், இந்த ஆண்டு இதுவரை, 200 மெகாவாட் மின் திறன் கொண்ட காற்றாலைகள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன.மின்சாரத்துக்கு, தமிழக அரசு கொடுக்கும் விலை கட்டுப்படியாகாதது; மின் கடத்து கட்டணம், மின் தொடர் கட்டமைப்புகள் கிடைப்பதில் சிக்கல் போன்ற காரணங்களால், தற்போது, காற்றாலைகளை நிறுவ, தனியார் முதலீட்டாளர்கள் முன் வர தயங்குகின்றனர். மின் கடத்துவதற்கு, ஒரு யூனிட்டிற்கு, 1.30 ரூபாய் கட்டணத்தை, வாரியம் விதிக்கிறது. இது, மின் உற்பத்தியாளர்களுக்கு, கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக, காற்றாலை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

- நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - madras,இந்தியா
29-நவ-201220:22:10 IST Report Abuse
PR Makudeswaran தமிழக அரசியலும் நாறிக்கொண்டிருக்கிறது. நிர்வாகமும் நாரிக்கொண்டுதான். ஒருவரை ஒருவர் குறை சொல்லை மட்டும் தெரியும். திருந்தவும் மாட்டார்கள். திருந்த விடவும் மாட்டார்கள். வைக்கோல் போரின் மேல் நாய் ஒன்று படுத்துக்கொண்டு பசுவை தின்னவிடாமல் சீரழித்த கதைதான். நாம் தடி எடுத்தால் தான் இந்த அரசியல் சுயநலவாதிகள் நம்மை வாழ விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
28-நவ-201217:55:01 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, ஒரு யூனிட், 3.39 ரூபாய்க்கு மின்வாரியம் வாங்குகிறது. நல்லது.நம்மிடம் ஒரு ரூபாக்கும் ரெண்டு ரூபாக்கும் விற்கிறது.. இது எந்த பொருளாதார லாகிக்...எந்த அரசும் சரி இப்படி போனால் திவால் தான்.. நல்ல ஓசி / மான்ய பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Vinoth Kumar - Chennai,இந்தியா
28-நவ-201216:59:39 IST Report Abuse
Vinoth Kumar தயக்கம் ஏன்? நிறுத்திவிட வேண்டியதுதானே... எங்களுக்கு இருட்டிலேயே இருந்து பழகிப் போயிருச்சு... அப்படியே அவர்கள் தொடர்ந்து காற்றாலைகளை இயக்கினாலும் - என் தாய் தந்தையர் இருக்கும் கிராமத்திற்கு மின் தடை என்னவோ குறைக்கப்போவது இல்லை - மாறாக, தமிழகத்தின் மற்றொறு மா நிலமான சென்னைக்கு ஒரு மணி நேர மின் வெட்டைக் குறைப்பார்கள்... அடப் போங்கப்பா... அலுத்துப்போச்சு
Rate this:
Share this comment
Cancel
Thindal Sankara Narayanan - Erode,இந்தியா
28-நவ-201215:20:26 IST Report Abuse
Thindal Sankara Narayanan காற்றாலை உரிமையாளர்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் ஊக்கத்தின் லட்சணம் இதுதான். மையன் அரசும் சரி மாநில அரசும் சரி மெகா மின் உற்பத்தி நிலையங்களுக்கே முக்கியத்துவம் தருகின்றன. அதுவும் அனல் மின் நிலையம் என்றால் சர்க்கரை. சொல்லித் தெரியவேண்டியதில்லை என்ன காரணம் என்று.
Rate this:
Share this comment
Cancel
manohar - kanchipuram,இந்தியா
28-நவ-201214:01:27 IST Report Abuse
manohar comision சரியாக குடுங்க சார் எல்லா பில்லும் செட்டில் ஆகி விடும். என்ன நிர்வாகமோ எல்லாம் நம்ம விதி
Rate this:
Share this comment
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
28-நவ-201219:18:59 IST Report Abuse
 KUNDRATTHU BAALAAஎல்லாம் உங்க திராவிட கும்பல் தான் உக்காந்திருக்கு.....
Rate this:
Share this comment
Cancel
nsathasivan - chennai,இந்தியா
28-நவ-201211:12:42 IST Report Abuse
nsathasivan இன்னும் ஒரு வருடம் இல்லை ஒன்பது வருடங்கள் ஆனாலும் தமிழ்நாட்டில் மின்பற்றக்குறை தீரப்போவது இல்லை. DMK யும் ADMK யும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டே 22,000 கோடிஉடன் இன்னும் பல கோடிகளை இலவசத் திற்காக ஒதுக்குவார்கள், ஆனால் மின்னில்லாமையை சீர் செய்ய பணம் இருக்காது.
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
28-நவ-201210:40:24 IST Report Abuse
mirudan மின்சாரவாரியத்தை தனியார்மயம் ஆக்கினால் மட்டுமே மின்சாரம் கிடைக்கும், மின்வெட்டு பத்து நாளில் தீரும் ஒரு மாதத்தில் தீரும் ஒரு வருடத்தில் தீரும் என்று ஆட்சியில் உள்ளவர்கள் ஜோதிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் நூறு ரூபாய் மின்கட்டணம் கட்டிய நான் இப்பொழுது முன்னூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்ததும் மின்சாரம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுக்க முடிய வில்லை என்றால் என்ன தான் நிர்வாகமோ ?
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
28-நவ-201210:34:17 IST Report Abuse
mirudan மின்வாரியத்தில் வசூலாகும் பணத்தை அவர்களுக்கே சம்பளம் என்ற பெயரில் பங்கு போட்டு கொடுத்து விட்டால் மின்சாரம் கொடுத்த காற்றாலை அதிபர்களுக்கு திருப்பதி நாமம் தான் போடா வேண்டும். இந்த காற்றாலைகளின் மின்சாரத்தால் தான் ஓரளவிற்கு மின்வெட்டு குறைந்து இருந்தாது.
Rate this:
Share this comment
Cancel
நெற்றிக்கண் - தமிழகம்,இந்தியா
28-நவ-201209:29:32 IST Report Abuse
நெற்றிக்கண் அட போங்கப்பா அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆறு மாசத்துக்கு ஒருமுறை கேட்காமலேயே கோடி கோடியா சம்பள உயர்வு, போனஸ் என சலுகைகள் வழங்குவதற்கே பத்தமாடேங்குது, இதுல கடன் பாக்கி எங்க தர்றது.........
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
28-நவ-201202:25:41 IST Report Abuse
NavaMayam மின்சார கட்டணத்தை கூட்டியாச்சு ... அதை வசூலும் பண்ணியாச்சி .... அது என் வாங்கின மின்சாரத்துக்கு குடுக்க பட வில்லை ...இலவச பேன் , மிக்ஷி மின்வெட்டால் கொடுக்க படாமல் அரசு கிடங்கில் தூங்கிகின்றனவே அவைகளுக்கு எப்படி பணம் கொடுக்கக முடிந்தது .... கட்டனத்துக்கே பணம் கொடுக்க முடியாத நிலையில் , பலலட்சம் கோடி ரூபாயை தனியார்கள் இந்த காற்றாலைகளில் முதலீடு செய்து மக்கள் தேவைக்கு மின்சாரம் தாயரிக்கிரார்களே அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் செய்யல பட வேண்டாமா ..அதனால் மேலும் கூடுதல் மின்சாரம் , மக்களுக்கும் , தொழிற்சாலைகளுக்கும் கிடைக்குமே ...இந்த நிர்வாக புலிகளைஎல்லாம் , இந்த கோவில் யானைகளோடு லாரியில் ஏற்றி , புலிகள் காப்பகத்துக்கு இரையாக போட்டால் தான் தமிழ்நாடு உருப்படும்....
Rate this:
Share this comment
Vignesh - Coimbatore,இந்தியா
28-நவ-201212:48:56 IST Report Abuse
Vigneshதம்பி இதையே தான் உங்க மஞ்ச துண்டும் பண்ணினார்... ஏன் அவரு ஆட்சில பாக்கி இல்லாம குடுத்துருக்க வேண்டியதுதானே??? ஆமா அவருக்கு அதெல்லாம் எங்க தெரியும், வர்ற பணத்த அவரோட வீட்டு கஜானால வெக்க மட்டும் தான் தெரியும்... ......
Rate this:
Share this comment
Srinivasan N - Chennai,இந்தியா
28-நவ-201214:03:16 IST Report Abuse
Srinivasan Nநீங்கள் சற்று விலாவரியாக கணக்கு விவரங்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும். kadan , முன்பிருந்த வருமானம், தற்சமையம் கிடைக்கும் வருமானம், சம்பளம் போன்ற விவரனலி சொல்லவும்....
Rate this:
Share this comment
Unmai - Bangalore,இந்தியா
28-நவ-201220:52:33 IST Report Abuse
Unmaiதமிழக மின்சார கடன் எவ்வளவு என்று தெரியுமா ...உங்கள் தானே தலிவன் 48000 கோடி வைத்துவிட்டு தான் சென்றார் , where can we get money now ...tell us mr nava mayammmm......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.