Advertisement
சென்னையில் எல்.கே.ஜி., சீட்டுக்காக ரூ. 17 லட்சம் மதிப்பிலான கூடைப்பந்து மைதானம்: எங்கே செல்கிறது கல்வி?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

28 நவ
2012
16:09
பதிவு செய்த நாள்
நவ 28,2012 15:47

சென்னை: தனது குழந்தையின் எல்.கே.ஜி., சீட்டுக்காக, பள்ளி ஒன்றிற்கு ரூ. 17 லட்சம் மதிப்பிலான கூடைப்பந்து மைதானத்தையே கட்டித்தந்துள்ளார் தந்தை ஒருவர். சென்னையில் நடந்துள்ள இந்த சம்பவம், குழந்தைகளின் பெற்றோரை ஒரு பங்குதாரர் போல பாவிக்கும் ஒரு சில பள்ளிகளின் மனோநிலையை எடுத்துக்காட்டுவதாக விளங்குகிறது.

சென்னை கீழ்ப்பாகத்தில் உள்ள மிகப்பிரபலமான பள்ளி அது. அந்த பள்ளியில் தனது குழந்தைக்கு எல்.கே.ஜி., சீட் கேட்டுச் சென்றுள்ளார் சீனிவாசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). சீட்டும் கிடைத்துள்ளது. பிரதிபலான அந்த தந்தை செய்து கொடுத்தது ரூ. 7 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் லேப். இதே போல், சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஒன்றிற்கு தனது குழந்தையின் அட்மிஷனுக்காக சென்ற தந்தை அப்பள்ளிக்கு இலவசமாக (?) செய்து கொடுத்திருப்பது ரூ. 17 லட்சம் மதிப்பிலான கூடைப்பந்தாட்ட மைதானம்.


பெற்றோர்களின் இந்த செயல், எந்த வழியிலாவது பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்து விட வேண்டும் என்ற பெற்றோரின் எண்ணத்தை காட்டுகிறதா அல்லது தங்களது பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதற்காக என்ன வேண்டுமானாலும் கேட்டுப்பெறலாம் என்ற பள்ளிகளின் மனோபாவத்தை காட்டுகிறா என்பதை யோசித்து பார்க்க வேண்டும். பல லட்சம் செலவு செய்தாவது, நகரில் உள்ள மிகப்பிரபலமான பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்து விட சில பெற்றோர்கள் தயாராகவே இருக்கின்றனர். இவர்களுக்காகவே டொனேஷன், காபிடேஷன் பீஸ் என்ற பெயர்களை கூறி வந்த பள்ளிகள் இப்போது "அறிவிக்கப்பட்ட பங்களிப்பு" (இன்பார்ம்டு கான்டிரிபியூஷன்) மற்றும் "திரும்பப்பெறும் முதலீடு" ( ரிடர்னபிள் இன்வெஸ்ட்மென்ட்) என புதுப்புது பெயர்களில் பணத்தை வசூல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கல்வியாளர் மாலதி கூறுகையில், தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக மட்டுமல்லாது, குழந்தைகள் தங்களது கல்வியை முடிக்கும் வரையில் அவர்களுக்கும் பள்ளிக்கும் இடையேயான தொடர்பு நல்லபடியாக நீடிக்க வேண்டும் என்பதற்காக, பெற்றோர் அளிக்கும் பரிசே இது என்கிறார்.


சென்னை தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில், மற்ற துறைகள் போல் அல்லாமல், கல்வித்துறையில் பரிந்துரை என்பது அதிகமான பணத்தைப்பெறுவதற்காகவே தெரிவிக்கப்படுகின்றதே அன்றி குறைவாகப்பெற அல்ல என சிலாகித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சட்டம் கொண்டு வந்துள்ள நிலையில், பணப்பரிமாற்றத்திற்காக பள்ளிகளுடன் சேர்ந்து புதுப்புது வழிகளை கண்டறிய பெற்றோர்கள் தற்போது முயன்று கொண்டிருக்கிறார்கள். சில பள்ளிகளில் பெற்றோர்களை பள்ளிகளின் பங்குதாரர்களாகவே பாவிக்கும் நிலையும் உள்ளது.


இதுகுறித்து ஷீலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கூறுகையில், "எனது இரு குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக இருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 2 லட்சம் செலவு செய்தேன். அவர்களுக்காக சேமித்தேன். அவர்களுக்காக செலவு செய்தேன். இதனால் நான் ஒன்றும் இழக்கவில்லை" என்கிறார்.

தற்போதைய நிலவரப்படி, சென்னையில் உள்ள சிறந்த பள்ளிகளில் எல்.கே.ஜி.,யில் குழந்தைகளை சேர்ப்பதற்கு ரூ. 4 லட்சம் வரை டொனேஷன் கேட்கப்படுகிறது. இதே இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருப்பூர் போன்ற ஊர்களில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் பெற்றோர்களிடம் ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடனாக பெற்று, அக்குழந்தை பள்ளியை விட்டுச் செல்லும் போது மீண்டும் வழங்கும் நடைமுறையும் உள்ளதாக கூறுகின்றனர். இதற்காகவே தங்களுக்கு தேவையான பணத்தின் அளவைப் பொறுத்து சில நிர்வாக இடங்களை ஒதுக்கி வைத்து விடுவதாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம், நாட்டில் கல்வியின் தரம் குறைந்து விட்டதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வருத்தப்பட்டு பேசிய நிலையில், மறுபுறம் நம் நாட்டில் கல்வி எங்கே செல்கிறது என்ற கேள்வி மனிதில் எழுவதையும் தடுக்க முடியவில்லை.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (59)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ding Tong - Thiruchy,இந்தியா
29-நவ-201212:46:45 IST Report Abuse
Ding Tong அனுமானங்களாக சொல்லப்படும் இத்தகைய செய்திகளுக்கு மதிப்பளிக்காதிர்கள். இதுபோல செய்திகளும் ஒரு வகை ஊழல்தான். பேரங்களை படியவைக்க நடக்கும் முயற்சி. உண்மையிலே இதைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றால் பள்ளியின் பெயர் தந்தவர்களின் பெயர் எல்லாவற்றையும் வெளியிட வேண்டியதுதானே அல்லது முறையான புகாராக பதிவு செய்து சம்மந்தப்பட்ட துறைமூலம் நடவடிக்கை எடுக்கவைத்து அதையும் வெளியிடலாமே. சும்மா ஆண்டி மடம் கட்டியது போல் அங்கலாய்ப்பது சந்தேகத்துக்கு இடமின்றி பேரம்தான் இப்போது இந்தியாவில் இந்த ஊழல்கள்தான் மிக அதிகம்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
mrsethuraman - Bangalore,இந்தியா
29-நவ-201211:49:22 IST Report Abuse
mrsethuraman  இம்மாதிரி பள்ளிகள் அப்துல் கலாமையா உருவாக்க போகின்றன ? மக்கள் இவைகளை புறக்கணிக்க வேண்டும்.ஒருவர் தன மகனுக்கு LKG லிருந்து வேலைக்கு செல்லும் வரை கல்விக்காக செலவழித்த பணத்தை அப்படியே bank இல் முதலிடு செய்தால் அது கோடி கணக்கான ரூபாயாக மாறும்.பின்பு அவன் வேலைகே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
arivu - Ras al khaimah,இந்தியா
29-நவ-201211:40:53 IST Report Abuse
arivu இன்றைய அரசுகள் மக்கள் வரிப்பணத்தை இலவசங்களுக்கு செலவழிப்பதிலும் மூட்டை அடிப்பதிலும் பயன்படுத்துகிறார்கள் . இதில் முக்கியமாக சாலைகள் பராமரிப்பு/ புதிய சாலைகள் அமைப்பு முற்றிலுமாக தனியaர்மயமக்கப்பட்டு விட்டது. அவர்களும் சுங்கம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள் (கால வரை இல்லாமல்) கல்விக்கு அறவே பணம் ஒதுக்கபடுவது இல்லை. இத்தனைக்கும் வரிப்பணம் தவிர டாஸ்மாக்கும் மணல் கொள்ளையும் அரசுக்கு தீனியாக பயன்படுகிறது. மக்களும் அடுத்த தேர்தலில் என்ன இலவசம் என்று வெட்கங்கெட்டு அலசுகிறார்கள். திராவிடமும் தமிழும் தேர்தல் வெற்றிக்குத்தான் பயன் படுகிறது. சமூகத்தை வழிப்படுத்தும் பார்பனர்களோ நெறி கேட்டு மற்ற இனம் கெடுவதற்கும் காரணமாக போய் விட்டார்கள் . வேறு சில கருப்புசட்டை கட்சிகளோ நம்நாட்டு பிரச்னைகளை விட்டு விட்டு அண்டை நாட்டு "இன" பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஏ தமிழ் நாடே நீ எங்கு சென்று கொண்டு இருக்கின்றாய்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
malick batcha - chennai,இந்தியா
29-நவ-201211:40:44 IST Report Abuse
malick batcha ரிச் கெட் ரிச் , பூர் கெட் பூர், நீங்க ஆயிரம் சமத்துவம் பேசினாலும் , கல்வி,மருத்தவம், போக்குவரத்து,ரியல் எச்டேட், கட்டிடப்பணி , இதெல்லாம் அரசு நேரடிய சார்ந்து செய்யும் வரை இதெல்லாம் இப்படித்தான் . அரசுதான் விலை நிர்ணயீகவேண்டும். நிர்வாகிகள் அல்ல ,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
kamalakrisshnan - hyderabad,இந்தியா
29-நவ-201211:23:21 IST Report Abuse
kamalakrisshnan மாநில அளவில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய கோரிக்கை செய்தால் அரசு பள்ளிகளில் எப்படி சேர்க்க முன்வருவார்கள். தாமரை தண்டின் உயரம் நீர் மட்டத்தை பொருத்தது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nethaji Subbaiyan - chennai,இந்தியா
29-நவ-201210:33:54 IST Report Abuse
Nethaji Subbaiyan ஐயா தினமலர் , அந்த பள்ளி நேம் சொல்ல முடியுமா உங்களால்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
sun flower - tirupur,இந்தியா
29-நவ-201208:35:42 IST Report Abuse
sun flower படித்தவன் பாடம் நடத்துகிறான் படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான் ..... கட்ட பஞ்சாயத்து நடத்துறவன் கல்விக்கூடம் நடத்துகிறான்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
29-நவ-201206:43:44 IST Report Abuse
ஆரூர் ரங வருத்தப்பட்டு பலன் இல்லை. நுகர்வோர் கலாச்சாரமும், கல்வி தனியார் மயமாக்கப்படுதலும் இதில் தான் முடியும் என்பது எதிர்பார்க்கப்பட்டதே. இன்று நுகர்வோர் கலாசாரத்தை எதிர்ப்பவர்கள் வெகு சிலரே. அரசுப் பள்ளிகளை சரியாக நடத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா? பொறியியல், மருத்துவப் படிப்பிக்கு மட்டும் அரசுக் கல்லூரிகளை நாடும் பெற்றோர் பள்ளிக் கல்விக்கு மட்டும் தனியாரை நம்புவது அரசின் தவறுதானே? தனியார் பள்ளிகளைக் குறை சொல்லி பயன் இல்லை. அவர்கள் சமூக சேவை எனக் கூறியா துவக்குகிறார்கள்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Arul - Chennai,இந்தியா
29-நவ-201206:31:18 IST Report Abuse
Arul அரசு பள்ளியில் இதல்லாம் இல்லை உங்கள் குழந்தைகளை அங்கு சேர்க்கலாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
29-நவ-201203:54:47 IST Report Abuse
Skv இதுவும் லஞ்சமே இதுபோல காசுதந்து படிக்கனுமா? இருப்பவன் அள்ளித்தரலாம் வாங்கறவன் வாங்கி குவிக்கலாம்,இல்லாதவன் எங்கே போவான் , கல்விசாலைகள் எல்லாம் பொது உடமை ஆவணும் mla /mp மந்திரின்னு ஆனா ஒடனே ஆரம்பிப்பது எஞ்சிநீரின்க் கல்லூரி அப்போதானே லக்ஷ்சத்துலே புரளலாம் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.