திருப்பூர்: தடையில்லாமல் மின்சாரம் வழங்கி, தொழில் துறையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் தொழில் துறையினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மின் பற்றாக்குறை காரணமாக, திருப்பூரில் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, திருப்பூருக்கு சிறப்பு கவனம் செலுத்தி, தடையற்ற மின்சாரம் வழங்கக்கோரி, தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார்.பல்லடம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி பேசுகையில், ""விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள ஜவுளி தொழிலை காக்க தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். புதிய மின் திட்டங்களை உருவாக்கவும், தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
ஓ.இ., மில் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்திரன் பேசுகையில், ""திருப்பூர் தொழில் துறைக்கு, மின்வெட்டு மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. சில நூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசு,திருப்பூருக்கு, வழங்க மறுப்பது வேதனை அளிக்கிறது,'' என்றார்.
தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார் குமார் பேசுகையில், ""திருப்பூர் மாவட்டத்தில் 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், திருப்பூருக்கு தேவையான 500 மெகாவாட் மின்சாரம் கூட வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு உரிமையான மின்சாரத்தை வழங்க வேண்டும். தற்போது புதிய ஆர்டர்கள் வருவதால், தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்,'' என்றார்.தொழில் பாதுகாப்பு குழு உயர்மட்ட குழு தலைவர் பழனிசாமி பேசுகையில், ""வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டியுள்ளது. வெளிநாட்டினர் லாபம் கிடைக்கும் வரை இருப்பர்; லாபம் குறைந்தால் ஓடி விடுவர். அதனால், நம்நாட்டின் குடிமக்களையும், உள் நாட்டு தொழில்களை காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். இப்பிரச்னையில் மத்திய, மாநிலஅரசுகள் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் இருந்து 2 ஆயிரம் பெண்கள் உட்பட 8,000 பேர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தடையில்லா மின்சாரம் கோரி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் - தடை இல்லா... மின்வெட்டு வேண்டுமானால் கேட்கலாம்..அதுமட்டுமே இப்போதைக்கு... சாத்தியம்... தடை இல்லா மின்சாரமென்பது...இன்னும்... எட்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு.. சாத்தியமில்லாதது ( அதற்க்கு பின் கடவுள் விட்ட வழி )... அதற்க்கு..நம்மை ஆண்ட..ஆள்பவர்கள்... நீண்டகாலத்திற்கு திட்டமிடவில்லை....இப்போதைக்கு திட்டமிடுவதாவதாகவும் இல்லை...
இப்பொழுதாவது விலைஇல்லாப்பொருளுக்காக அன்றி தடையிலாப் பொருளுக்காக மக்கள் போராடுகிறார்களே? வாழ்க எம்மக்கள். இதே போல் எல்லா விசயங்களிலும் இலவசத்திற்கு மயங்காமல்,யாருக்கு என்ன நடந்தால் எனக்கென்ன என அலட்சியம் காட்டாமல்,தனக்கு கேடு நடக்கும்வரை காத்திராமல்,தவறுகளை கண்டவுடனே தட்டிகேட்டால் நம் அனைவருக்கும் நல்லது.
தடையில்லா மின்சாரம் எல்லாம் மம்மிக்கு பழைய சமாச்சாரம்... அதைச் சொல்லி ஏமாத்தி முதலமைச்சர் ஆன பிறகு யார் எவ்வளவு கூப்பாடு போட்டாலும் பிரயோஜனமில்லை... இனி மம்மியின் சுலோகன் "விலையில்லா மின்சாரம் தான்."... மம்மியை பிரதமர் ஆக்கினால் தமிழநாட்டுக்கு விலையில்லா மின்சாரம் மூன்றே மாதத்தில் தந்து அருளுவார்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.