vijyakanth to face on case | இரங்கல் அறிக்கை: கூட்டணிக்கு ‌தே.மு.தி.க. புது ரூட் | Dinamalar
Advertisement
இரங்கல் அறிக்கை: கூட்டணிக்கு ‌தே.மு.தி.க. புது ரூட்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

லோக்சபா தேர்தலில் தி.மு.க.,தே.மு.தி.க., கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்த நிலையில் ,காங்கிரஸ், கட்சியின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அ.தி.மு.க., அரசுக்கு எதிராக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பல்வேறு கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்களையும் தெரிவித்து வருகிறார். தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகளை அ.தி.மு.க., அரசு புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்திருந்தார்.
அதேநேரத்தில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர், முதல்வரை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, தொகுதி பிரச்னை தொடர்பாக பேசினர். ஆட்சி சிறப்பாக நடப்பதாக அவர்கள் பாராட்டும் தெரிவித்தனர். மேலும் சில எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அ.தி.மு.க.,வுக்கு இழுக்கும் வேலைகளும் ரகசியமாக நடந்து வருவது தே.மு.தி.க., தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால், ஆளும்கட்சி மீது தே.மு.தி.க., தலைமை கடுப்பில் உள்ளது. அதன் எதிரொலியாக, லோக்சபா தேர்தலில், முன்னாள் எதிரியான தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.
தே.மு.தி.க.,விற்கு, 10 சீட்கள் வரை தர சம்மதம் தெரிவித்து, தி.மு.க., தலைமை காய் நகர்த்தியது. தி.மு.க., முக்கியப்புள்ளி ஒருவர் மூலம், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் உறவினரிடம் இதற்கான பேரம் நடந்தது. ஆனால்,அது நிறைவேறவில்லை.
இந்நிலையில், தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரம் அமைக்கும் புது நடவடிக்கையை தே.மு.தி.க., தலைமை துவங்கியுள்ளது.
சமீபத்தில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தே.மு.தி.க., தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதுமட்டுமின்றி, மூன்று எம்.எல்.ஏ.,க்களை நேரில் அனுப்பி, ஆறுமுகம் உடலுக்கு, மாலையணித்து இறுதி அஞ்சலி செய்யப்பட்டது.மற்றொரு தி.மு.க., முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மறைவிற்கும், மூன்று எம்.எல்.ஏ.,க்களை நேரில் அனுப்பி தே.மு.தி.க., சார்பில் இறுதி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது.கடந்த தி.மு.க., ஆட்சியில் வீரபாண்டி ஆறுமுகத்தை கடுமையாக விமர்சித்தவர் விஜயகாந்த். ஆனால், தற்போது அவரை புகழ்ந்து, இரங்கல் அறிக்கையும் விஜயகாந்த் கொடுத்துள்ளார்.
தி.மு.க., மூத்த தலைவர்களின் ஒருவரான துரைமுருகன், தே.மு.தி.க., கட்சி டிவிக்கு சிறப்பு பேட்டியும் அளித்துள்ளார். இவ்விரு கட்சிகளும், கூட்டணிக்கு நெருங்கி வருவதை, இச்சம்பவங்கள் வெளிச்சமாக்கி இருக்கிறது.லோக்சபா தேர்தலில், சீட் எண்ணிக்கையை தே.மு.தி.க.,விற்கு அதிகரித்து தருவதற்கு தி.மு.க., தலைமை முன்வந்திருப்பதே, இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், தி.மு.க.,தே.மு.தி.க. கைகோர்க்கும் பட்சத்தில், காங்கிரஸ் சூகை' என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நமது நிருபர்

வழக்குகளை சந்திக்க தே.மு.தி.க., தயார்! : விஜயகாந்த்
எதற்கெடுத்தாலும், எதிர்கட்சிகள் மீதும், எதிர்கட்சி தலைவர் மீதும் வழக்கு போடுவதும், அவதூறு வழக்குகளை தொடர்வதும், இந்த ஆட்சிக்கு வாடிக்கையாகிவிட்டது. அஞ்சாமல், அதை சட்ட ரீதியாக சந்திக்க தயாராகவுள்ளோம்,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க.,வினர் ரகளையில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.,வினர் அளித்த பொய்புகாரின் பேரில், தே.மு.தி.க., மாநில துணை செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ.,க்கள் பார்த்திபன், மோகன்ராஜ், சுபா, மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 25 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.காவல் துறையினர், எம்.எல்.ஏ., பார்த்திபன், மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் ஆளும்கட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதுதான் எதிர்கட்சியின் செயலாகும். தே.மு.தி.க.,வை பொறுத்தவரை, பொய்வழக்குகளை கண்டு அஞ்சவில்லை. சட்ட ரீதியாக இந்த வழக்குகளை சந்திக்க தயாராகவுள்ளோம்.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (76)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamarud - ooty,இந்தியா
05-டிச-201219:09:05 IST Report Abuse
kamarud எதிரிக்கு எதிரி நண்பன்தானே அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
M.BOOPATHI RAJA - NEW DELHI,இந்தியா
05-டிச-201217:59:21 IST Report Abuse
M.BOOPATHI RAJA அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ......................உழைத்தால் தான் சோறு .... சும்மா எதுவும் கிடைக்காது ?.........
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
29-நவ-201215:54:51 IST Report Abuse
s.maria alphonse pandian இரங்கல் தெரிவித்ததை வைத்து "கூட்டணி" என எண்ணுவது எந்த வகையில் நியாயம்? தமிழக அரசியல் நாகரீகம் அந்த நிலையில் உள்ளது.....
Rate this:
17 members
1 members
67 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
29-நவ-201215:32:23 IST Report Abuse
R.Saminathan தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் ஆணித்தரமாக மக்களிடத்தில் கூறியுள்ளார் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என்று, திரு.வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு அனைத்து தமிழக கட்சி தலைவர்களும் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்,அந்த வகையில் தே.மு.தி.காவும் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளது.
Rate this:
9 members
1 members
63 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
29-நவ-201214:32:25 IST Report Abuse
s.maria alphonse pandian கற்பனை செய்தி என்னும் பெயரில்...தமிழக மின்வெட்டு ஆட்சிக்கு பாடம் புகட்ட...தினமலர் எடுக்கும் முயற்சி இதுவாக தெரிகிறது...நாட்டின் நலன் கருதி திமுக+காங்கிரஸ்+ தேமுதிக கூட்டணி அமைவதில் தவறில்லை...ஆனால் விஜயகாந்த் திமுக அண்ணாதிமுக கட்சிகளை கூட்டணியில் தவிர்ப்பது அவரது எதிர்காலத்துக்கு நல்லது....
Rate this:
15 members
1 members
34 members
Share this comment
Cancel
jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்
29-நவ-201214:11:51 IST Report Abuse
jaikrish மக்கள் இவரை ரொம்ப எதிர்பார்த்தாங்க...செல்வாக்கு சரிந்து கொண்டேதான் போகிறது. ஜெயலலிதா அன்றைக்கு தேர்தல் பதற்றத்தில் அதிகமான சீட்டுகளை இவருக்கு ஒதுக்கி விட்டார். கலைஞர் அந்த தவறை செய்ய மாட்டார். கேப்டனுக்கும் அவரை விட்டால் வேறு வழி இல்லை.
Rate this:
25 members
2 members
24 members
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
29-நவ-201214:02:38 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. /// Abdul Raheem தினமலர் நாட்டு மக்களின் மேல் உள்ள அக்கரையில் இதுபோன்ற முக்கிய செய்திகளை தனது சொந்த கருத்து இல்லாமல் வெளியிடுகிறது தினமலரின் சேவை நாட்டுக்கு தேவை... /// இதுல நாட்டு மேல அக்கறை எங்கே வந்தது.... வேண்டுமானால்... ஜெயாவை எச்சரிக்க...செய்தியை முன்கூட்டியே வெளியிட்டு...உஷார் படுத்த சொன்னதாக நினைத்து கொள்ளலாம்... அவ்வளவுதான்....ஜெயா உஷாரானால் சரி...
Rate this:
3 members
0 members
22 members
Share this comment
Cancel
RAJAN - chennai,இந்தியா
29-நவ-201213:43:38 IST Report Abuse
RAJAN தம்பி, ஆவுன்னா மாநாடுன்னு கூட்டமா கிளம்பிடுறாங்க.....
Rate this:
3 members
0 members
16 members
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
29-நவ-201213:16:44 IST Report Abuse
T.C.MAHENDRAN காகித ஓடம் கடலலை மேலே போன கதைதான்.
Rate this:
6 members
0 members
9 members
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
29-நவ-201213:13:52 IST Report Abuse
T.C.MAHENDRAN தே.மு.தி.க.வை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிட்டால் ,சிரஞ்சீவி போல் விஜயகாந்தும் நாலு காசு சம்பாதிக்கலாம் ..
Rate this:
31 members
1 members
13 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்