கோட்டயம்: கேரளாவில், மற்றுமொரு கொடூர தந்தை, தன் மகள்களை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய தகவல், அம்பலமாகியுள்ளது. இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், கண்ணூரில், 13 வயது பள்ளி மாணவியை, இரண்டு ஆண்டுகளாக கற்பழித்த அவர் தந்தை, சகோதரர் மற்றும் மாமாவை, போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், அடுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மற்றொரு கொடூர தந்தை, தன் மகள்களிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம், தெரிய வந்துள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் வசிக்கும், இரண்டு பள்ளி மாணவியரை, அவர்களின் தந்தை, பல நாட்களாக, பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து, இந்த இரண்டு சகோதரிகளில், மூத்த சகோதரி, சில நாட்களுக்கு முன், தன் தாயிடம், தந்தையின் அட்டூழியம் குறித்து விவரித்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த தாய், அந்த மாணவியை, பள்ளியிலேயே செயல்படும் விடுதியில் சேர்த்து விட்டார். சில நாட்கள் கழித்து, இளைய சகோதரியும், தன் தந்தையின் விஷமச் செயல் குறித்து, தன் தாயிடம் விளக்கினார். வேறு வழியின்றி, தன் கணவர் மீது, அந்த பெண், போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, தன் இரண்டு மகள்களுக்கும், பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்த, அந்த நபர், கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து வெளியாகும், இது போன்ற தகவல்களால், கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.