Advertisement
பயணிகள் கட்டணம் உயரும் ரயில்வே அமைச்சர் சூசகம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 நவ
2012
22:57

புதுடில்லி: ""ரயில்வே துறையை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால், கட்டண உயர்வை தவிர்க்க முடியாது. எப்போது, கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறதோ, அப்போது, எம்.பி.,க்கள் ஆதரவளிக்க வேண்டும்,'' என, ரயில்வே அமைச்சர், பவன்குமார் பன்சால் தெரிவித்தார்.லோக்சபாவில் நேற்று, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, சவுகதா ராய், ரயில் பயணிகள் கட்டணம் உயருமா என, கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, ரயில்வே அமைச்சர், பவன்குமார் பன்சால் கூறியதாவது:இந்த விவகாரத்தில் நான் எதிர்பார்ப்பது, சபையில் உண்மை நிலவ வேண்டும் என்பதே. ரயில்வே துறையை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றால், நாட்டின், பொருளாதார வளர்ச்சியில், ரயில்வே துறையின் பங்களிப்பு, 1.5 சதவீதம் முதல், 2 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்றால், கட்டண உயர்வு, தவிர்க்க முடியாதது.எனினும், கட்டணம் எப்போது உயர்த்தப்படும் என்பதை சொல்ல முடியாது; கட்டணங்கள் உயர்த்தப்படும் போது, அதற்கு, அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும்.ஏனெனில், 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, ரயில்வே திட்டங்கள் செயல் படுத்தப்பட வேண்டும். இந்த திட்டங்கள் அனைத்துமே, எம்.பி.,க்கள் பல ஆண்டுகளாக கோரி வந்தவை. இதற்காக பணம் திரட்டப்படவில்லை என்றால், அந்த திட்டங்களை, இன்னும், 50 ஆண்டுகளுக்கு நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.எம்.பி.,க்கள் கேட்டுள்ள அனைத்து ரயில்வே திட்டங்களும், கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு, ரயில்வே அமைச்சர், பவன்குமார் பன்சால் கூறினார்.மத்தியில், கூட்டணி அரசு வந்த பிறகு, ரயில்வே துறை, காங்கிரஸ் தவிர்த்து, கூட்டணி கட்சிகளான, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், திரிணமுல் காங்கிரஸ் கட்சிகள் வசமே இருந்தது. 16 ஆண்டுக்குப் பின், சமீபத்தில் தான், காங்கிரஸ் வசம், ரயில்வே துறை வந்தது.ரயில்வே அமைச்சராக, கடந்த மாதம், பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டதுமே, "ரயில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படும்' என்பதை, சூசகமாக சுட்டிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல்அடையாள அட்டை கட்டாயம்





ரயிலில் அனைத்து வகுப்பு பயணிகளும், பயணத்தின் போது, அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்பது, நாளை (டிச., 1ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.ரயிலில், "ஏசி' முதல் வகுப்பு, "ஏசி' இரண்டாம் வகுப்பு, "ஏசி' மூன்றாம் வகுப்பு, "ஏசி' சேர்கார் வகுப்புகளில் பயணம் செய்யும் பயணிகள், பயணத்தின் போது, அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.ரயில் டிக்கெட் முன்பதிவுகளில், இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில், பயணிகள் முறைகேடாக பயணம் செய்வது அதிகரித்துள்ளது.இதனால், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணிகள் உட்பட, அனைத்து வகுப்புகளிலும், ரயிலில் பயணம் செய்யும்போது, ஒரிஜினல் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்பது நாளை முதல் (டிச., 1ம் தேதி) அமலுக்கு வருகிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-நவ-201217:34:21 IST Report Abuse
Nallavan Nallavan கடந்த ஒன்பது மாதங்களுக்குள் ஏற்கனவே இரண்டு முறை கட்டணம் ஏற்றப்பட்டு விட்டது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
30-நவ-201214:45:46 IST Report Abuse
Angry ஜெய் கூட பத்து ரூவா வாங்கிக்க மந்திரி ... ஆனா ரயில் பெட்டியில் ஓடுற எலி கரைப்பான் பூச்சிகளை நீதான் வந்து விரட்டனும் ....... அதே மாதிரி கக்கூசுக்கு கண்டிப்பா எவர் சில்வர் கப்பு வேணும் , ac பெட்டியில் மட்டும்தான் கப்பு இருக்கு , மத்த பெட்டியில் வர்ரவன் எப்டி கழுவுறது ???? சாப்பாடு மிக கொடுமை
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Shankar - Madurai,இந்தியா
30-நவ-201213:11:12 IST Report Abuse
Shankar இவர் போன்ற ஆட்கள் இலவசமாக சேவைகளை பெற, மக்கள் மீது கட்டண சுமை அதிகமாக திணிக்க படுகிறது...
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
30-நவ-201209:30:11 IST Report Abuse
S.Govindarajan. புதிய ரயில்வே திட்டங்களை அவ்வப்போது வரும் ரயில்வே மந்திரிகள் தங்கள் மாநிலங்களுக்கு கொண்டு போகிறார்கள். ஜாபர் செரிப் கர்நாடகாவிற்கு கொண்டு போனார். மம்தா மேற்கு வங்கத்திற்கு கொண்டு போனார். வடக்கே பல ஊர்களில் டிக்கெட் எடுப்பதே இல்லை. நாங்கள் ஒழுங்காக டிக்கெட் எடுத்துபயணம் மட்டும் செய்வோம். வசதிகள் எல்லாம் வடமாநிலங்களுக்குத்தான். பவன்குமார் பன்சால் என்ன செய்யப் போகிறாரோ?
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
30-நவ-201216:43:36 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..S.Govindarajan. - chennai ,இந்தியா - அதெல்லாம் சரி...யார் ரயில்வே அமைச்சராக இருந்தாலும்...கேரளா மட்டும் எல்லா வசதிகளும் பெற்று கொள்கிறதே.. அது எப்படி.......
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-நவ-201209:00:57 IST Report Abuse
villupuram jeevithan எல்லா மக்களுக்கும் அடையாளத்திற்கு டாட்டூ குத்தி விட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் அல்லவா?
Rate this:
4 members
0 members
3 members
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
30-நவ-201206:48:06 IST Report Abuse
T.R.Radhakrishnan கட்டண உயர்வு கூடாது என்று சொல்ல முடியாது. அதற்கு தகுந்த சேவை கொடுக்கப்பட வேண்டும்.
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
30-நவ-201216:41:55 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..///T.R.Radhakrishnan கட்டண உயர்வு கூடாது என்று சொல்ல முடியாது. அதற்கு தகுந்த சேவை கொடுக்கப்பட வேண்டும்.///-வாஸ்தவமான சொல்.... சேவையின் தரம் முக்கியம்.. மூட்டை பூசியும்... கரப்பங்களும் இல்லாத சேவையாக.. இருக்க வேண்டும்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ajay ganesh - kumbakonam ,இந்தியா
30-நவ-201204:28:36 IST Report Abuse
Ajay ganesh இதில் என்ன சூசகம் வேண்டிகிடக்கு ....இவனுகள் வந்தாலே கண்டிப்பா விலை வாசி உயரும் தான் இதுல ரயில்வே கு தனியா சொல்ல வேண்டுமா?
Rate this:
0 members
5 members
8 members
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
30-நவ-201216:39:33 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..//ganesh இதில் என்ன சூசகம் வேண்டிகிடக்கு ....இவனுகள் வந்தாலே கண்டிப்பா விலை வாசி உயரும் தான் இதுல ரயில்வே கு தனியா சொல்ல வேண்டுமா? // அது சரி.. முன்னாடி.. அதாவது ஒங்க ஜெயா வருவதற்கு முன்... குடந்தையிலிருந்து.. சுவாமிமலைக்கு.. பேரூந்து கட்டணம் எவ்வளவு...இப்போது எவ்வளவு என்று பாருங்கள்... அதாவது எத்தனை சதவீதமென்று (%) அப்புறம் தெரியும்... இந்த விசயத்தில் அகிலமெலாம் பரவியுள்ள...ஜெயாவின் மகத்துவம்... அதை அடிக்க வேறு ஆளில்லை... ஒன்னு சொல்லுங்கள் ஒப்புகொள்வோம்... ஏற்றலாம்... SINGEL % ஆக இருக்க வேண்டும்.. சீரான இடைவெளியில்.. சீராக ஏற்ற வேண்டும்.. தப்பில்லை... மக்களால் தாங்க முடியும்.......
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
30-நவ-201203:41:54 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் கட்டண உயர்வு சரியே , ஆனால் மக்களால் தாங்க கூடிய அளவில் கொஞ்சமாக ஏற்றலாம் ....
Rate this:
0 members
3 members
20 members
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
30-நவ-201203:38:05 IST Report Abuse
Kunjumani என்னையா சூசகம்.. நேராகவே சொல்லலாம், எங்களுக்கு சொரணை கிடையாது..அடுத்த பிரதமர் அன்னை சோனியாவின் அரும்புதல்வன் ராகுல்தான்.
Rate this:
0 members
1 members
7 members
Share this comment
Cancel
தமிழ் சிங்கம் - chennai,இந்தியா
30-நவ-201202:10:16 IST Report Abuse
தமிழ் சிங்கம் மக்களிடம் நிறைய பணம் இருக்கிறது. அவர்கள் ரயில்வேயிடம் எதிர்பார்ப்பது சிறந்த சேவை மட்டுமே. இப்போது சோனியா காந்தி ஆட்சியில், கணவன் மனைவி என்று இருவருமே சிட்டி பகுதிகளில் வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கிறார்கள். விலையை இரு மடங்காக ஏற்றினாலும் பரவா இல்லை. அனைத்து பெட்டிகளையும் ஏசி வசதிகளாக மாற்றவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஏசி இல்லாமல் மக்களால் இருக்க முடிவதில்லை. எப்போது சிறந்த சேவை கிடைக்கும் என்று மக்கள் ஏங்கி போய் இருக்கிறார்கள். உடனடியாக இந்த மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
Rate this:
9 members
1 members
7 members
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
30-நவ-201215:48:43 IST Report Abuse
Hari Dossஎன் அந்தப் பெட்டியில் உன் அம்மா பயணிக்க போகிறாரா? அவர்தான் இத்தாலி இரயிலில் தான் பயணிப்பார். நம் நாட்டில் நடிப்புக்காக (ராகுலைப் போல்) ஒரு நாள் மட்டும் போவார். அதற்க்கும் கூபே தயாராய் இருக்கும். நீர் ஏழைகளை நினைத்து பாரும்....
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.