parliment debt on FDI in dec4 | அன்னிய முதலீடு : டிசம்பர் 4ல் பார்லிமென்டில் விவாதம் | Dinamalar
Advertisement
அன்னிய முதலீடு : டிசம்பர் 4ல் பார்லிமென்டில் விவாதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பாக, பார்லிமென்டில், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. லோக்சபாவில், வரும், 4, 5ம் தேதிகளில், இது தொடர்பாக விவாதம் நடந்து, ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இதனால், நான்கு நாட்களாக நீடித்த பார்லிமென்ட் முட்டுக்கட்டை நிலைமை முடிவுக்கு வந்தது.பார்லிமென்டின் குளிர் கால கூட்டத் தொடர், கடந்த, 22ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்தே, எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளி காரணமாக, இரு சபைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு, அலுவல்கள் முற்றிலுமாக முடங்கின.
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதித்த விவகாரத்தில், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என, பா.ஜ., இடதுசாரிகள், அ.தி.மு.க., மற்றும் தெலுங்குதேசம் உட்பட, பல கட்சிகள் தீவிரமாக வலியுறுத்தியதே இதற்கு காரணம்.ஆளும் கூட்டணியில், போதிய பலம் இல்லாமல் இருந்ததால், உரிய தீர்வை காணமுடியாமல், காங்கிரஸ் தவித்தது. ஆனால், தி.மு.க.,வின் ஆதரவு உறுதியளிக்கப்பட்ட பின், நிலைமை மாறியது. "ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு தயார்' என, அறிவித்தது.இந்நிலையில், நேற்ற காலை லோக்சபா கூடியதும், சபாநாயகர் மீராகுமார், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதித்த பிரச்னை குறித்து, விதி எண்,184 ன் கீழ், விவாதம் நடத்தப்படும். எந்த தேதி விவாதம் நடக்கும் என்பது, பிறகு அறிவிக்கப்படும்' என்று,கூறியிருந்தார்.
இதையடுத்து, பார்லிமென்ட் முட்டுக்கட்டை நிலைமை முடிவுக்கு வந்தது. வழக்கம் போல, கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டு அலுவல்கள் துவங்கின. மதியம், லோக்சபா அலுவல் ஆய்வுக் குழு கூடியது. அப்போது, லோக்சபாவில், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை எப்போது வைத்துக் கொள்வது என, ஆராயப்பட்டது.
இறுதியில், சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதித்தது குறித்து, அடுத்த மாதம், 4ம் தேதி விவாதத்தை துவக்கி, 5ம் தேதியும் தொடர்ந்து, அன்றைய தினம், ஓட்டெடுப்பை நடத்துவது என, தீர்மானிக்கப்பட்டது.
ராஜ்ய சபாவிலும், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு, சபைத் தலைவர், அமீத் அன்சாரி ஒப்புக் கொண்டார். எந்த தேதியில், விவாதம் என்பது, இனிமேல் அறிவிக்கப்படும்.தி.மு.க., வின் ஆதரவை அடுத்து, லோக்சபாவில், பெரும்பான்மை பலத்தை நிரூபித்து விடலாம் என்ற நம்பிக்கை, அரசுக்கு உள்ளது. ஆனால், ராஜ்யசபாவில் உரிய எண்ணிக்கை இல்லாதததால், அங்கு நிலைமை என்னவாகும் என்பது தெரியவில்லை.இதற்கிடையில், சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் நேற்று நிருபர்களிடம் பேசும் போது, ""சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனாலும், ஓட்டெடுப்பின் போது, என்ன நிலைமை என்பதை, அப்போது முடிவு செய்வோம்,'' என்றார்.
அதே நேரத்தில், சமாஜ்வாதி கட்சியின் ராஜ்யசபா தலைவர் ராம்கோபால், ""சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு குறித்த விவாதத்தின் போது, தீர்மானத்திற்கு எதிராக ஓட்டுப் போடுவோம்,'' என்றார். இரு சபைகளிலும், இரு வேறு நிலை எடுப்பதாக, சமாஜ்வாதி அறிவித்துள்ளதால், அந்தக் கட்சியின் நிலைமை இன்னும் தெளிவாகவில்லை.அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயவாதியும், அன்னிய முதலீடு பிரச்னையில், தங்கள் கட்சியின் செயல் திட்டத்தை தெரிவிக்க நேற்று மறுத்து விட்டார். "தங்களின் முடிவு லோக்சபாவில் தெரிவிக்கப்படும்' என்றும் கூறினார்.

-நமது டில்லி நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MJA Mayuram - chennai,இந்தியா
30-நவ-201208:45:29 IST Report Abuse
MJA Mayuram ஒரு தமிழனின் விரலசைவில்தான் இந்த இந்திய திருநாடே உள்ளது எனும்போது ஒவ்வொரு தமிழனின் உள்ளமும் பூரிப்படைகிறது. யாராலும் அசைக்கமுடியாத சூரியனாகவும் , சிங்கமாகவும் உள்ள தலைவர் இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு தமிழினத்தை வழிநடத்துவார் வாழ்க தமிழ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
30-நவ-201208:35:26 IST Report Abuse
villupuram jeevithan சில்லறைக்கு ஆசைப்படும் சில்லற அரசியல்வாதிகள் இருக்கும் வரை எந்த விவாதமும் பயனளிக்காது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
30-நவ-201206:42:58 IST Report Abuse
ஆரூர் ரங இந்த வாக்கெடுப்பின் முடிவால் காங்கிரஸ் ஆட்சி கவிழப் போவதில்லை. வெறும் மசோதா வாக்கேடுப்புத்தான். ஆனால் இந்த வாக்கெடுப்பின் மூலம் பாஜக ஆட்சி வந்துவிடும் எனவே காங்கிரசுக்கு வாக்களிக்கிறோம் என மஞ்சத்துண்டு கூறுவது அபத்தம். வாங்கின காசுக்கு மேலேயே லொள் லொள் பண்ணுகிறார். எல்லாம் வாரிசைக் காப்பாற்றத்தான். இப்போ இவங்க கொள்கை (மத்திய )பதவி வேட்டி, கொள்கை மேல்துண்டு. குடும்பமே உள்ளாடை கொள்கையைப் பறக்க விட்டால் தானே நஷ்டம் என நினைக்கிறார். உள்ளாடை தானே முக்கியம்?
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
30-நவ-201206:39:01 IST Report Abuse
K.Balasubramanian மக்கள் ஆதரவு இல்லாமல் இந்த கொள்கை அளவு முடிவு ஒன்றும் செய்யாது. மக்களும் சிறு குறு தொழில் முனைவோரும் வியாபாரிகளும் நல்ல தேர்தல் பாடம் புகட்டுவார்கள் .
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
30-நவ-201206:35:12 IST Report Abuse
ஆரூர் ரங ஏற்கனவே இதனால் அதிகப் பலன் பெறப் போகும் பன்னாட்டு வால் நிறுவனம் பல கோடி டாலர்களை மொரிஷியஸ் மூலம் அனுப்பியிருப்பது அம்பலமாகி விட்டது. இதனைப் பற்றி முழு விசாரணை செய்யாமல் வாக்கெடுப்பு நடத்தினால் அது போலியான ஒன்றே. ஆகா மொத்தம் India on Sale
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
30-நவ-201206:30:31 IST Report Abuse
T.R.Radhakrishnan அடிக்கிற கூத்தை இன்னும் கொஞ்ச காலத்துக்கு அடிங்க. அப்புறம், நாங்க பாத்துக்கிறோம்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Kunjumani - Chennai.,இந்தியா
30-நவ-201203:27:19 IST Report Abuse
Kunjumani அன்னை சோனியாவின் அருளாசி பெற்று நின்றதால்தான் ஒபாமாவே அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்று காங்கிரஸ் கபோதிகள் சொன்னாலும் ஆச்சிரியம் இல்லை. பேசாமல் எதிர்கட்சிகள் அன்னிய முதலீடு ஆதரவு தெரிவிப்பது நல்லது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
30-நவ-201202:54:55 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் திமுக தமிழினத்துக்கு தான் துரோகம் செய்து வந்தது , இப்போது இந்திய மக்களுக்கே துரோகம் இழைத்து விட்டது ... எப்படியும் தீர்மானம் ராஜ்ய சாபவில் வெற்றி பெற்றால் தானே சட்டமாகும் ... எனவே அது சந்தேகமே , லோக்பால் போல இழுபறி தான் ... இல்லை காங்கிரஸ் சில தில்லுமுல்லுகளை செய்து சாதித்தாலும் சாதிக்கலாம் ... அதான் நேரடி அந்நிய முதலீடு என்ற பெயரில் வெளி நாடுகளில் சேமித்து வாய்த்த கருப்பு பணங்களை எல்லாம் வெள்ளையாக மாற்றி கொண்டு வந்து விடுவார்களே ... அப்பறம் என்ன கவலை பணத்தை பற்றி .. :
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
30-நவ-201202:00:17 IST Report Abuse
Ambaiyaar@raja என்ன விவாதம் செய்து என்ன பயன் எப்படியும் அதை நிறைவேற்றி அதில் வெற்றி பெற்று இன்னும் ஒன்னரை ஆண்டுக்கு காங் கட்சி நாட்டை நன்றாக நாசம் செய்யட்டும். அப்போது தான் மக்கள் உணர்வார்கள் வெகுண்டு எழுந்து இந்த கும்பலுக்கு ஒரு நல்ல முடிவு கட்டுவார்கள். பாராளுமன்றத்தில் வேண்டும் என்றால் இதில் வெற்றி பெறலாம் காங் கட்சி மக்கள் மன்றத்தில் வரும் தேர்தலில் அதுக்கு வெற்றி என்பது கிடையாது.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்