சென்னை: காதலிக்க மறுத்ததால், "ஆசிட்' வீச்சு ஆளான, பெண் பொறியாளரின் பார்வை பறிபோனது.காரைக்காலை சேர்ந்த பெண் பொறியாளர் வினோதினி, 27. சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிருந்த இவர், இம்மாதம், 10ம் தேதி, தீபாவளி பண்டிகையை கொண்டாட, சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.
அப்போது, இவருக்கும், இவரை ஒருதலையாக காதலித்து வந்த சுரேஷிற்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுரேஷ், வினோதினியின் முகத்தில், "ஆசிட்' வீசினார்.ஆபத்தான நிலையில், மேல் சிகிச்சைக்காக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள், இரண்டு வாரங்களாக முயன்றும், வினோதினியின் பார்வையை காப்பாற்ற முடியவில்லை.இதுகுறித்து, இம்மருத்துவமனையின், தீக்காய சிகிச்சை நிபுணர் ஜெயராமன் கூறியதாவது:உயிருக்கு ஆபத்தான நிலையை, வினோதினி கடந்துவிட்டார். ஆனால், "ஆசிட்' வீச்சில், அவரது, இரு கண்களின் கரு விழிகளும் கருகியதுடன், பார்வை நரம்புகளும் பாதிக்கப்பட்டதால், வினோதினியின் பார்வை பறிபோய்விட்டது.சில மாதங்கள் கழித்து, சேதமடைந்துள்ள அவரின் முகத்தை, "பிளாஸ்டிக் சர்ஜரி' செய்யவும், பெயரளவிற்கு செயற்கை கண்களை பொருத்தவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு ஜெயராமன் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அவனே பின் ஒரு நாளில் தன்செயலுக்காக வருந்தினாலும் அந்த பெண் இழந்த வாழ்க்கை வருமா?தன்னை ஒரு பெண் விரும்பவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதானே.. அவன் வாழ்க்கை மனசாட்சியால் குத்தப்பட்டு தன் வாழ்க்கையையும் இழப்பான். பெண்கள் இது போன்ற சஊழ்நிளைகளில் எப்படி நடந்து கொள்ளவேண்டும், எப்படி ஒவ்வாத காதலை பிரச்னை இல்லாமல் மறுக்கவேண்டும் என்பது போன்ற விஷயங்களை பெற்றோர் களும். பள்ளி, கல்லூரிகளில் கவுன்சலிங் எடுத்தும, வல்லுனர்களை வைத்தும்
சொல்லி குடுக்கலாம். ஆந்த பெண்ணிற்கு இறைவன் அருள் புரியட்டும்.
இது புதிதாக நடப்பது போல் எல்லோரும் த்சொ த்சொ கொட்டுவது ஆச்சரியம் தான். அந்தக்காலத்தில் மொட்டைக்கடிதம் எழுதி பலர் வாழ்வை கெடுப்பதுண்டு. ஏவல், பில்லி இவையும் உண்டு. கற்பழிப்பு பெரும்பாலும் இந்த வன்முறை குரோதம் காரணமாகத்தான். அர்ஜுன் சிநேகா நடித்த ஒரு படத்தில் அர்ஜுன் "டீ..." இரைச்சலுடன் சினேகாவின் கூந்தலை பற்றியிழுத்து ஒரு தற்கொலை செய்து கொண்ட உடலை காட்டி காதல் கீதல் என அபத்த வசனம் பேசியதும் மறக்கவில்லை. " கெட்டபின்பு ஞானி " என்பது போல் அதே அர்ஜுன் ஆஞ்சநேயருக்கு கோவில் எழுப்பி BJP- யில் சேர்ந்து விட்டான் என்று கேள்வி.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.